நிரந்தரமில்லை என்று தெரிந்திருந்தும்
அதனையே நினைத்துக்கொண்டு
நெருங்கிச் செல்கின்றோம்…

ஒரு கால கட்டத்தில்
அது நம்மை விட்டுச்செல்லும்போது
கண்ணீர் சொட்டுகின்றோம்….

நம்பிக்கை என்ற சொல்லோடு கூட
சம்பந்தம் இல்லாதவர்கள் மீது
நம்பிக்கை வைக்கின்றோம்…

பின்பு துரோகி என்று
பட்டமும் சூட்டுகிறோம்….

எவரைப் பற்றி நாம்
அதிகம் சிந்திக்கின்றோமோ…
அவரால்தான் நம்
பாதி வாழ்க்கை பாழடைகிறது…

இந்த உண்மையை அறிந்திருந்தும்
நாம் அதை ஏற்பதே இல்லை..

வார்த்தையில் அழகாய்த் தெரிந்தவர் எல்லாம்
வாழ்க்கையில் அழகாய்த் தெரிவதில்லை…
ஆனாலும் அவரோடுதான் வாழ நினைக்கிறோம்…

இப்படி எத்தனை காலம்தான்
ஏமாறப் போகின்றோமோ…

சிந்தனை செய்யும் சக்தி இருந்தும்
அதைச் செலவழிப்பதில் கஞ்சத்தனம்..
கொஞ்சம் அதிகம்தான்…

காதலுக்குச் சொந்தமான தனிமை…
குழந்தைகளுக்குச் சொந்தமான குறும்பு…
ஏழைகளுக்குச் சொந்தமான பசி..
மனிதருக்கு மட்டுமே
சொந்தமான மனமாற்றம்…

இந்த மனம் என்ற ஒன்று
மாறாமல் இருந்திருந்தால் மனித இனம்
எப்போதோ மாண்டு போயிருக்கும்…

என்ன செய்வது இப்போதெல்லாம்
ஒரு மனிதரோடு பழகிப்பார்த்தாலே
ஆயிரம் மிருகங்களோடு பழகிய
அனுபவம் வருகிறது.

– ஷேக் நிஸ்றா


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

தம்பி… 9

வாழ்வாயே மகிழ்வாக வாழ்த்திடவே பெரியோர்கள் தாழ்வென்ற நிலையில்லை தளராமல் உழைத்திட்டால் ஏழ்மையென்னும் நிலையில்லை ஏற்றத்தைப் பெறுவாயே வீழ்வதெல்லாம் எழுவதற்கே வீறுகொண்டு எழுவாயே.

மரபுக் கவிதை

தம்பி… 8

ஏரோட்டம் இல்லையென்றால் ஏற்றமில்லை செல்வத்தில் தேரோட்டம் ஓடாது தெம்மாங்கும் கேட்காது காரோட்ட வாய்ப்பில்லை கஞ்சிக்கும் ஏமாற்றம் நீரோட்டம் காத்திட்டால் நிச்சயமாய் நன்மையுண்டே.

மரபுக் கவிதை

கீதாஞ்சலி

அரண்மனையும் தோரணமும் ஆடும் வாயில் அணியணியாய் மணிவிளக்கம்‌ ஒளிரும் கோவில் நிரல்நிரலாய் உன்னடியார் வந்து செல்லும் நெரிசலிடைப் போற்றிசெயும் ஒலி முழக்கம் கரைகாணாப் புகழ் வெளிச்சம் உனதேயாகக் கனிவுடனே என்முகத்தைக் காண்பா யோநீ தெருவினிலோர் மூலையிலே இசைக்கும் என்றன் சிறுகுரலை என்னரசே கேட்பா யோநீ