தன்முனைக் கவிதைகள்

தாய்நாட்டை பிரிந்த அகதிபோல் ஆனேன் உன்னைப் பிரிந்து வாடும் நான் – தட்சணா மூர்த்தி கொடுத்துச் சிவந்த கரங்களைக் காண்கிறேன்! குங்கும வியாபாரி என்றால் அப்படித்தான்! – க.பன்னீர் செல்வம் ஆயிரக் கணக்கானோரை எழுப்ப வேண்டும் மரணத்திற்கெதிரான மருந்து யார் கையில் இருக்கும்? – முனைவர் ம.ரமேஷ் தொடரி கிளம்பி நேரமாயிற்று. சன்னலில் எட்டிப் பார்க்கிறேன். இன்னும் துரத்தியவாறே… உன் நினைவுகள். – புகழேந்தி எனக்குள் நீ. ஒளிந்து விளையாடமுடியாமல் Read more

தமிழமின் வாழ்க தழைத்து!

விசித்திர அகவல் ஒரு குறள் வெண்பாவிலுள்ள ஒவ்வோர் எழுத்தையும் ஒவ்வோரடியின் ஈற்றில் அமையுமாறு பாடுவது விசித்திர அகவல் ஆகும். குறள் வெண்பா குமுத மலராகக் கோலவிதழ் பின்னும் தமிழமின் வாழ்க தழைத்து! அன்னைத் தமிழின் அமுதைப் பருகு மன்பன்! ஆற்றல் அரிமா! கி.மு முன்னே மொழியைத் முனைந்து காத்த தன்னே ரில்லாத் தமிழன் நாம மோதும் மறவன்! முத்தமிழ் வல்ல தாதும் மணக்கும் தகையன்! தீரா ஆசை கவிமேல்! ஆக்கம் Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 06

தொடர் 06 கவிஞனை மட்டுமின்றி வாசகனையும் கவர்ந்திழுக்கும் ஒரு கவிதை வடிவம். கவிஞனின் எண்ண ஓட்டங்களோடு வாசகனின் எண்ண ஓட்டங்களையும் உறவாட வைக்கும் ஒரு கவிதை வடிவம் ஹைக்கூ. வாசிக்க கூடிய ஒவ்வொரு முறையும் பல கோணங்களைக் காட்டி நகரும் அற்புத ஆற்றல் ஹைக்கூவிற்கு உண்டு. இத்தகைய ஆற்றலை கொண்டிருப்பதனால்தான் ஜப்பானில் தோன்றிய இந்த கவிதை வடிவம் மேற்கத்திய நாடுகளில் பெரும் புகழை எளிதில் பெற்று விட்டதெனலாம். இந்தியாவில் காலம் Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 05

05 ஹைக்கூ சின்னதாய் காட்சியளிக்கும் ஒரு பெரிய அற்புதம் எனலாம். கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் இதனை சிந்தர், வாமனக் கவிதைகள் என்கிறார். கூடவே ஹைக்கூ வெறும் வடிவம் என்றே பலர் கருதுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. அது உள்ளடக்க தளத்திலும் மரபு வழிவந்த நுட்பமான பரிமாணங்களையும் கொண்டது. ஜென் புத்தமத தத்துவப் பார்வையும், ஜப்பானிய வாழ்க்கை முறையும் சார்ந்த ஒரு நுட்பமான கவி வடிவம் ஆகும். நாம் தமிழில் Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 04

04 ஒரு சின்ன விதைக்குள் தான் மிகப் பெரிய விருட்சம் ஒளிந்திருக்கிறது. அது போல தான் ஹைக்கூ.. தனக்குள் பல கோணங்களையும் வாசிக்கக் கூடிய ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சிந்தனைகளையும் ஏற்படுத்தவல்லது. ஜப்பானில் எடோ மரபு காலத்தில் துவங்கி… டோக்கியோ மரபு காலத்தில் பெரும் புகழடையத் துவங்கிய ஹைக்கூ.. ஜப்பானில் இன்று வரை 5, 7,5 என்ற அசை கட்டுப்பாட்டில் எழுதப்படும் மரபுக் கவிதையாகும். ஜப்பான் எழுத்துக்கள் சீனப் பாரம்பரிய Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 03

03 ஹைக்கூ சின்னதாய் காட்சியளிக்கும் ஒரு பெரிய அற்புதம்.மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது..கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது எனத் தமிழில் சொல்லப்படுவதெல்லாம் ஹைக்கூவிற்கும் பொருந்தும்..மூன்று அடிகளில் வாமன அவதாரம் எடுத்த ஒரு இலக்கிய வடிவம் ஹைக்கூ.. 1916 இல் பாரதி சுதேசமித்திரனில் ஹைக்கூ குறித்து கட்டுரை எழுதியும் கூட..தமிழ் கவிஞர்களும்..தமிழ் இலக்கிய உலகும் இவ்வடிவத்தை பெரிதாய் கவனத்தில் கொள்ளவில்லை. அதன் பின் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னரே 1966 ஜனவரியில் கணையாழி Read more

ரெஜினா பவன்

இரவை தின்ன ஆரம்பித்தது அதிகாலை வெளிச்சம். இப்படியே இந்த இரவு நீண்டு கொண்டே போக கூடாதா என தினம் தோறும் தோன்று அளவிற்கு வெளிச்சத்தின் மீது அதீத கோபம் கொண்டவன் கார்த்தி.இரவு நீண்டால் இன்னும் கொஞச நேரம் ஓய்வெடுக்கலாம் என்றும், செய்த வேலையே செய்வதனால் எற்படுகிற சலிப்பும் தான் காரணம். இரவிற்கு உணவு தேவையில்லை. பணம் தேவையில்லை. பயணம் தேவையில்லை.  கண்மூடி மயங்கி கிடக்கும் வித்தை தெரிந்தால் போதும். இரவு Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 02

02 ஹைக்கூ ஜப்பானில் ஜென் புத்தமதத் துறவிகளால் ஜென் சார்ந்தும்.. அவர்களது வாழ்வியல்.. இயற்கை சார்ந்தும் எழுதப்பட்ட ஒரு கவிதை வடிவம்.. அக்கவிதை ஜப்பானில் பிறந்த விதம் மற்றும் அக்கவிதையின் முன்னோடிக் கவிஞர்கள் குறித்தும் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். ஹைக்கூ..ஜப்பானில் பிறந்திருந்தாலும் இன்று உலகம் முழுவதும் பரவலாக வரவேற்பையும்.. புகழையும் பெற்ற ஒரு கவிதை வடிவமாக இருப்பதற்கு எளிய வடிவ அமைப்பேயாகும்.. அது மட்டுமல்லாது வாசகனையும் சிந்திக்கத் தூண்டி விடும் Read more

வரம் வேண்டும்

குவளையில் கொஞ்சம் தமிழை ஊற்றுங்கள் – எந்தன்  தாகம் தீரப் பருக வேண்டும் ! அறுசுவை விருந்தெனத் தமிழை அள்ளி – பசிதீர உண்டு நான் திழைக்க வேண்டும் ! செந்தமிழ்க் காற்றே மூச்சுக் காற்றாய் – எந்தன் சுவாசப்பையை நிரப்ப வேண்டும் ! பைந்தமிழ் நூற்று ஆடையை நெய்து – எந்தன் உள்ளம் பூரிக்க அணிய வேண்டும் ! மகுடமாகச் சங்கத்தமிழை சிந்தை மகிழ்ந்து – என் சிரசில் Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 01

ஹைக்கூ எனும் சொல் இன்று கவிஞர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது. மூன்றடிகளில் எழுதப்படும் இதன் எளிய தோற்றமும்..உள்ளார்ந்த பொருள் வெளிப்பாடும்..கவிஞனோடு வாசகனையும் தன்பால் ஈர்க்கின்ற ஆற்றலும் ஹைக்கூவை பலரும் எழுதவும்..ரசிக்கவும் செய்திருக்கிறது. அதுமட்டுமல்ல ஹைக்கூ கவிதைகள் பலரால் இன்று ஆய்வுகளுக்கு எடுத்துக் கொள்ளப் படுகிறது..ஒரு புதிய கவிஞரின் முதல் தொகுப்பு ஹைக்கூவாகவே இருக்கிறது..ஹைக்கூ சின்னதாய் தோற்றமளிக்கும் பெரிய அற்புதம்.. அத்தகைய ஹைக்கூவை எழுதுகின்ற கவிஞர்களுக்கு இக்கட்டுரை சிறப்பான பல Read more