ஹைக்கூ ஓர் அறிமுகம் – 41

தொடர்  – 41 உலக அரங்கில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியச் சொல் ஹைக்கூ.. அனைத்துக் கவிஞர்களையும் ஈர்க்கும் ஒரு வடிவமாகவும்..அனைவரும் எழுதத் துடிக்கும் ஒரு வடிவமாகவும் ஹைக்கூ விளங்குகிறது. எந்தக் கவிதை வடிவமும் பெறாத..ஓர் உயரிய இடத்தை ஹைக்கூ மட்டும் எப்படி பெற்றது..?! எளிய வடிவம் ஒரு காரணம்..கவிஞனோடு வாசகனையும் பங்கெடுத்துக் கொள்ள வைக்கும் யுக்தி.. ஒரு கருத்தைச் சொல்ல வந்து ஈற்றடியில் எதிர்பாரா ஒரு புதிய திருப்பத்தை Read more

தீபாவளி

எனது சிறுவயது தீபாவளி எப்படி!!! என்று வரும் என்றே எனை ஏங்க வைக்கும் காலை எழுந்தவுடன் நாட்காட்டி பார்த்து பார்த்து தாள்கள் பழசாய்ப்போகும் என்ன வண்ண உடை எங்கே எடுப்பது கவலை வேறு வந்து ஆட்டும் யாருமே அணியாத புது வகைத்துணியில் நான் மட்டுமே அழகியாக தோன்றவே விருப்பம் கொள்ளும் தீபாவளிக்கு ஐந்துமுறையேனும் கடைக்குச்செல்லவேண்டும் புதிதாக என்ன மாதிரி உடை கண்கள் வட்டமிடும் உனக்கு மட்டுமே இத்தனை நேரம் எடுத்தால் Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 40

தொடர் – 40 லிமர்புன் ஹைக்கூ கவிதை வகைமைகளில் அடுத்தபடியாக நாம் காணவிருப்பது லிமர்புன். இது சற்றேறக்குறைய ஹைபுன் போலவே தான். முன்னதாக ஒரு உரைநடையோ அல்லது கவிதையோ பதிவிட்டு இறுதியில் அந்த உரைநடைக்கு பொருந்தி வருமாறு..ஹைக்கூவிற்கு பதிலாக லிமரைக்கூவை பதிவிட்டால் அதற்கு லிமர்புன் என்று பெயர். லிமரைக்கூப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். முதலடி மற்றும் ஈற்றடி இறுதியில் சந்தமோ, இயைபுத் தொடை அமைத்து ஹைக்கூ படைக்கும் போது, Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 39

தொடர் – 39 ஹைபுன் ஹைக்கூ கவிதை வடிவில் ஜப்பானிய கவிவடிவமான ..ஹைக்கூ மற்றும் சென்ரியு மிக முக்கியமானவை. இந்த வகை கவிதைகளை மேற்கத்திய கவிஞர்களும், தமிழ் கவிஞர்களும் பல்வேறு கவிதை வடிவங்களுடன் இணைத்து புதுவகையான கவி வடிவையும் உருவாக்கி வெற்றி கண்டிருக்கிறார்கள். அவ்வாறு ஆங்கில லிமரிக் வடிவ குறுங்கவிதையுடன் இணைந்து உருவானது லிமரைக்கூ என முன்னரே கண்டோம். அது போல… ஹைபுன், லிமர்புன், லிமர் சென்ரியு, ஹைகா சீர்கூ, Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 38

தொடர் –38 ஹைக்கூ வாசிக்கும் முறை கவிதை என்பது இலக்கியத்தின் உயரிய வடிவம்..நமது தமிழ் இலக்கிய மரபில் வெண்பா, விருத்தம், கலிப்பா, கும்மி என பல வகைகள் உண்டு. அவை எதுகை, மோனை, சந்த நயங்களுடன் வாசிக்கவும் அழகாக அமையும். ஏனெனில் அவை ஒரு கட்டுக்குள் தாள லயத்தோடு எழுதப்படுபவை. ஜப்பானிய ஹைக்கூவும் மரபுசார் கவிதையே. ஆனாலும் இங்கு ஜப்பானிய மரபுகள் பலவற்றை நாம் உதறித் தள்ளிவிட்டு ஒருசில முக்கிய Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 37

தொடர் – 37 லிமரைக்கூ.. ஜப்பானிய கவிதை வடிவமான ஹைக்கூ 5 – 7 – 5 என்ற அசையின் படி எழுதப்படுவது.. ஆங்கில கவிஞர்களால் எழுதப்படும் லிமரிக் எனும் குறும்பா 5 அடிகளில் எழுதப்படும் ஒரு கவிதை வடிவம். இவ்விரண்டையும் இணைத்து ஏன் ஒரு கவிதை வடிவம் கொடுக்க கூடாது என விரும்பிய ஆங்கிலேய கவிஞர் டெட் பாக்கர் (Ted Pauker) முதன் முதலில் இந்த லிமரைக்கூ எனும் கலப்பின Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 36

தொடர் – 36 தற்குறிப்பேற்றலும், மறைமுக கற்பனையும்.. ஹைக்கூ இன்று பலராலும் எந்தளவு விரும்பப்படுகிறதோ, அந்தளவு விமர்சிக்கப்படும் ஒரு கவிதை வடிவமாகவும் இருக்கிறது. பலரும் ஹைக்கூ எழுத விரும்புகிறார்கள்..ஆனால் ஒரு தெளிவற்ற விதிமுறைகளும்..கண்ணில் படும் ஹைக்கூக்களின் மாறுபட்ட கட்டமைப்பும் பலரையும் குழப்பிக் கொண்டே இருப்பதையும் உணர முடிகிறது. ஒரு ஹைக்கூ கற்பனை தாங்கி மலர்கிறது. ஆனால் பலரோ கற்பனையை தவிர்க்கச் சொல்கிறார்கள். அதே போல தான் உவமை, உருவகம் போன்றவையும் Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 35

தொடர் – 35 ஹைக்கூவில் படிமம் படிமம் என்பது நாம் எண்ணும் கருப்பொருளை வேறு ஒன்றின் மீதோ அது பறவை..பூச்சி..மரம்..செடி..கொடி என எதுவாகவும் இருக்கலாம்..அல்லது வேறு ஒரு பொருளின் மீதோ ஏற்றிச் சொல்வது படிம உத்திமுறை. இப் படிமக் குறியீடுகளை குறிப்பிட்ட எல்லைக்குள் வகுத்துக் கொண்டு..அந்த சூழலுக்கும்..நிகழ்வுக்கும் ஏற்ப கவி அமைப்பது எளிமையாகவும் சிறப்பாகவும் இருக்கும்.. படிம உத்தி முறையே துவக்கத்தில் ஹைக்கூவில் கையாளப்பட்டது. ஏனெனில் அது வாசகனை பல Read more

சொள்ளை

கடல் அவள் முந்தானையைப் பிடித்து இழுத்தது. கொஞ்சம் சிணுங்கலுடன் சேலையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு கரை வந்தாள். கடல்மணலில் உக்காந்திருந்த கட்டுமரத்தில் அவள் உக்காந்தாள். திரும்ப கடலை வெறித்தாள். இந்தக் கடல்தானே தன் வாழ்வைப் புரட்டிப் போட்டது. நிலைகுலையச் செய்தது. என்றாலும் அவளுக்கு ஏனோ அதன்மீது கோபம் வரவில்லை. இன்று ஏனோ புதுவிதமான உணர்ச்சியில் தத்தளித்துக் கொண்டிருந்தாள். அவள் அருகில் வந்து நின்றான் கதிர். இவன் தன் பழைய காதலைச் Read more

ஆசையக் காத்துல தூது விட்டேன்

கிள்ளை மொழியெல்லாம் கிளியேயுன் நினைவூட்ட           மெல்ல மயக்குமென் மேவும்நிலை சொல்லுதற்குத் துள்ளும் கயல்சரியோ?  துடிப்பான மான்சரியோ?           மெல்ல அலையெழுப்பும் சிற்றோடை நீர்சரியோ? மஞ்சுப் பொதிசரியோ ? மயக்கும் விழிசரியோ?           கொஞ்சும் குயில்வந்து குரலிசைத்துச் சொல்லிடுமோ? நெஞ்சம் நிறைந்ததென் நெகிழ்ந்த காதலதைச்           சொற்களின் Read more