கவிதைக்கழகு இலக்கணம் – 10

தொடர் 10 ஈரசைச் சீர்களில் முதலாவதாக தேமா எனும் சீரைப்பார்த்தோம். இதனை ஞாபகம் வைத்துக்கொள்வது எளிது. இது இரண்டு குறில்களால் தொடங்காது குறில் + நெடிலுடன் தொடங்காது நெடிலில் தொடங்கும் நெடில் + குறிலாக வரும் நெடில் + மெய்யெழுத்துடன் வரும் குறில் + மெய்யெழுத்துடன் வரும் எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள் கவிதை × = கவி / தை கனாக்கள் × = கனாக் / கள் காலை √ Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 9

தொடர் – 9 இதுவரை எதுகை மோனை மற்றும் இயைபு ஆகியவற்றைப் பார்த்துள்ளோம். இத்துடன் தொடர்புடைய முரண் தொடை அந்தாதி அளபடை செந்தொடை போன்றவற்றை சமயம் வரும்போது பார்ப்போம் . இப்போது அசையையும் சீரையும் பார்ப்போம். மரபுக்கவிதை எழுத வரும் அனைவருமே யோசிப்பது இந்த அசை மற்றும் சீர்கள் பற்றித்தான். இவை ஒன்றும் நாம் பயப்படும் அளவுக்கானது அல்ல. தற்போது நாம் தெரிந்து கொள்ள தண்டு அசைகள் இரண்டே இரண்டுதான். Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 8

தொடர் – 8 இதுவரை 3 இயைபுகளைப் பார்த்தோம் இப்போது மற்ற 5 இயைபுகளையும் காண்போம் ஒருஉ இயைபு ஓரடியில் உள்ள நான்கு சீர்களில் ஒன்று மற்றும் நான்காம் சீர்கள் இயைபு பெற்றிருப்பின் அது ஒருஉ இயைபு எனப்படும் எடுத்துக்காட்டு  1. எழுஞாயிறின் ஒளியாயெழு தமிழைத்தினம் தொழுதேத்திடு விழுதாயிரு தமிழ்மாமலை உளமேற்றியே தொழுதேத்திடு மேற்கண்ட பாடலில் எழுக 1 மற்றும் 4 ஆம் சீர்களில் வந்துள்ளதால் ஒருஉ இயைபு ஆயிற்று Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 7

தொடர் – 7 எதுகையையும் மோனையையும் பார்த்துவிட்டோம். இப்போது இயைபைப் பற்றிப் பார்ப்போம். இந்த இயைபு உங்கள் கவிதையை மேலும் அழகாக்கும். இது பெரும்பாலும் திரைப்படப் பாடல்கள் மற்றும் சந்தப்பாடல்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டு பட்ட பகலிலொரு நெட்டைக் கனவெனக்குப் பாடலதை அள்ளியள்ளி நிறைக்கும் படும் பாடுகளை மெல்லவது மறைக்கும் குட்டை மனிதனெனக் கொட்டும் கொடுக்கெடுத்துக் கூடுவிட்டுக் கூடுவந்துக் கெடுக்கும் ஒரு கொள்கையின்றி கண்டதையும் கொடுக்கும் மேற்கண்ட பாட்டில் நிறைக்கும் Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 6

தொடர் 6 இதுவரை 3 மோனைகளைப் பார்த்துவிட்டோம். இப்போது மற்றவற்றையும் காணலாம் 4. ஒருஉ மோனை ஓரடியில் உள்ள முதல் மற்றும் நான்காம் சீர்கள் முதல் எழுத்தில் ஒன்றிவருவது ஒருஉ மோனை எனப்படும். எடுத்துக்காட்டு அகர முதல எழுத்தெல்லாம் ஆதி அகர – ஆதி ஒருஉ மோனை கண்கள் வழியே வழியும் காதல் கருத்தில் சிறந்து மனத்தைக் கவரும் கண்கள் – காதல் கருத்தில் – கவரும் ஒருஉமோனை 5. Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 5

தொடர் 5 எதுகையை கடந்த பகுதிகளில் பார்த்தோம் எதுகை இருந்தால் மோனையும் கட்டாயம் அந்த இடத்தில் வரும். மரபு என்றாலே எதுகை மோனை பார்ப்பார்கள் என்பார்கள் கிராமத்து வழக்கில் “எகனை மொகனை” என்பார்கள். எதுகை என்பது காதணி எனலாம். காதணிகளில் பலவகைகள் உண்டு; தோடு, கம்மல், ஜிமிக்கி, மேல்தோடு, வளையம் என பலவகைகள் உள்ளன போல எதுகைகளில் பலவகைகளைக் கண்டோம். இப்போது மோனை மூக்கில் அணியும் அணிகலன்கள் போல. முக்குத்தி Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 4

தொடர் 4 எதுகையைப் பற்றிய ஒரு தெளிவு வந்திருக்கும் எனக் கருதுகிறேன். பத்துவகையான எதுகைகளைத் தெரிந்து கொண்டாலும் அவை அனைத்தையும் நாம் கவிதைகளில் பயன்படுத்த வேண்டுமா என்றால் தேவையில்லை என்றுதான் கூறுவேன். ஒரே ஒரு எதுகை அதுவும் அடி எதுகை ஒன்று மட்டுமே கவிதைகளில் பயன்படுத்தினால் போதும் . கவிதை சிறக்கும் ; அழகாகத் தோற்றமளிக்கும். மற்ற எதுகைகள் தானாக வந்தால் சேர்த்துக் கொள்ளுங்கள். வலிய சேர்க்க வேண்டாம். இப்போது Read more

மன்றல் வாழ்த்து மடல்

திருமணச்செல்வங்கள் நம்பி : ஏ.டி.வரதராசன்  நங்கை : கலைச்செல்வி திருமண நன்னாள் : 09.04.2020 மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறென்ற – தொன்மைத் திருக்குறள் போல் செவ்வியராய் வாழ்க திருப்பூட்டு இந்நாள் சிறந்து! தோழர் வரதராசன் தோழி கலைச்செல்வியுடன் வாழ்வாங்கு வாழ்கவென நெஞ்சுவந்து வாழ்த்துறைத்தோம்.. வாழையடி வாழையென வாழியவே பல்லாண்டு சூழும் நலங்களெல்லாம் துய்த்து பெறற்கரிய பேறெல்லாம் பெற்று வாழ்க திறல்சேர் மகப்பெறுக செவ்வை – அறங்காத்து Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 3

தொடர் – 3 இதுவரை 5 எதுகைகளைப் பார்த்தோம் இப்போது மேலும் மூன்று எதுகைகளைக் காண்போம்       6.மேற்கதுவாய் எதுகை ஒரு அடியில் 1,3,4 சீர்கள் ஒரே எதுகை பெற்று வருவது மேற்கதுவாய் எதுகை எனப்படும் எடுத்துக் காட்டு விண்மகள் பெற்றெடுத்த தண்ணிலவே பெண்மகளே மண்மகள் வாழ்த்துகின்ற பண்ணிசையே வண்டமிழே கண்விழியால் எனைமயக்கும் கண்ணகியே உண்டிடவா? செண்டுமலர் ஆடுகின்ற பெண்ணெழிலைக் கண்டிடவா?// கீழ்க்கதுவாய் எதுகை ஒரு அடியில் Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 2

தொடர் – 2 எதுகை தொடர்ச்சி இதுவரை இரண்டு எதுகைகள் பார்த்தோம் அடி எதுகை மற்றும் இணை எதுகை மற்றவற்றைப் பார்க்குமுன் ஒரு குறிப்பு இது எதுகையை எழுதும் போது நாம் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டியது.( நன்றி. கவிமாமணி வெற்றிப்பேரொளி ஐயா அவர்களுக்கு) இரண்டாவது எழுத்தைப் பார்க்குமுன் முதல் எழுத்தையும் நாம் கவனத்தில் அவசியம் கொள்ளவேண்டும். முதல் எழுத்து என்ன வகையில் உள்ளதோ அதே வகையில் அடுத்த எதுகையின் Read more