தொடர் – 7

எதுகையையும் மோனையையும் பார்த்துவிட்டோம். இப்போது இயைபைப் பற்றிப் பார்ப்போம்.

இந்த இயைபு உங்கள் கவிதையை மேலும் அழகாக்கும். இது பெரும்பாலும் திரைப்படப் பாடல்கள் மற்றும் சந்தப்பாடல்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எடுத்துக்காட்டு

பட்ட பகலிலொரு நெட்டைக் கனவெனக்குப்
பாடலதை அள்ளியள்ளி நிறைக்கும் படும்
பாடுகளை மெல்லவது மறைக்கும்

குட்டை மனிதனெனக் கொட்டும் கொடுக்கெடுத்துக்
கூடுவிட்டுக் கூடுவந்துக் கெடுக்கும் ஒரு
கொள்கையின்றி கண்டதையும் கொடுக்கும்

மேற்கண்ட பாட்டில்
நிறைக்கும் – இறைக்கும்
கெடுக்கும் – கொடுக்கும்

இவையே இயைபு

அதாவது ஒரு வார்த்தையில் முதல் எழுத்தை மட்டும் மாற்றினால் வரும் வேறு வார்த்தையைப் பயன்படுத்தினால் அதுவே இயைபு எனப்படும்

சிலநேரங்களில் அதே ஓசையில் வருவதையும் இயைபு என்பர்

எனினும் எழுத்துகள் ஒத்திருப்பதே சிறப்பு

இவ்வியைபும் எதுகை மோனைகளைப் போலவே எட்டு வகைப்படும்.

  1. அடி இயைபு – அடிதோறும்
  2. இணைஇயைபு – 1,2 சீர்கள்
  3. பொழிப்பு இயைபு- 1,3 சீர்கள்
  4. ஒருஉ இயைபு -1,4 சீர்கள்
  5. கூழை இயைபு – 1,2,3 சீர்கள்
  6. மேற்கதுவாய் இயைபு- 1,3,4 சீர்கள்
  7. கீழ்க்கதுவாய் இயைபு- 1,2,4 சீர்கள்
  8. முற்றியைபு 1,2,3,4 சீர்கள்

எடுத்துக்காட்டுகள்

  1. அடி இயைபு

அன்னைமேரி அலங்கரிக்கும் கவியரங்கம்
அவளருளை நமக்களிக்கும் கவியரங்கம்
சின்னவேலர் முறுவலிக்கும் கவியரங்கம்
சிக்கலெலாம்தீர்த்துவைக்கும் கவியரங்கம்
நன்னபிகள் வாழ்த்திநிற்கும் கவியரங்கம்
நமக்கெல்லாம்துணைநிற்கும்கவியரங்கம்
ஒன்றுமதம் என்றுரைக்கும் கவியரங்கம்
ஒற்றுமையைக் காட்டுகின்ற கவியரங்கம்

அடிதோறும் கவியரங்கம் வருவதால் இது அடி இயைபு ஆயிற்று.

  1. இணை இயைபு

மயிலே மயிலே ஆட்டம் ஆடிவா!
குயிலே குயிலே பாட்டுப் பாடிவா!
ஒயிலே ஒயிலே அழகைப் பார்க்கவா!
உயிரே உயிரே இணைய வாயடி!

இப்பாட்டில் ஒவ்வொரு அடியிலும் ஒன்று மற்றும் இரண்டாம் சீர்களில் இயைபு வந்ததைப் பாருங்கள். இதுவே இணை இயைபு.

  1. பொழிப்பு இயைபு

மேலே உள்ள எடுத்துக் காட்டைச் சற்று மாற்றிப் பார்க்கலாம்.

மயிலே அழகு மயிலே என்றன்
குயிலே கருப்புக் குயிலே பாடு
ஒயிலே அழகின் ஒயிலே என்றன்
உயிரே என்றன் உயிரே வா வா

இப்பாட்டில் அடி தோறும் 1 மற்றும் 3 ஆம் சீர்களில் இயைபு வந்துள்ளது பொழிப்பு இயைபு ஆகும்.

மற்ற இயைபுகளை அடுத்து பார்க்கலாம்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »