தொடர் – 2

எதுகை தொடர்ச்சி

இதுவரை இரண்டு எதுகைகள் பார்த்தோம் அடி எதுகை மற்றும் இணை எதுகை

மற்றவற்றைப் பார்க்குமுன் ஒரு குறிப்பு

இது எதுகையை எழுதும் போது நாம் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டியது.( நன்றி. கவிமாமணி வெற்றிப்பேரொளி ஐயா அவர்களுக்கு)

இரண்டாவது எழுத்தைப் பார்க்குமுன் முதல் எழுத்தையும் நாம் கவனத்தில் அவசியம் கொள்ளவேண்டும்.

முதல் எழுத்து என்ன வகையில் உள்ளதோ அதே வகையில் அடுத்த எதுகையின் எழுத்துகளும் இருக்கவேண்டும்.

எடுத்துக்காட்டாக

குறவன் என்பதற்கு எதுகை

மறவன்

மாறன் அல்ல

மறவன் மாறன் இரண்டிலும் ற என்ற இரண்டாவது எழுத்து இருந்தாலும் அது எதுகையாகக் கொள்ளப்படாது. முதல் எழுத்து ‘ கு’ மற்றும் ‘ம’ இரண்டும் குறில்

எனவே எதுகையாகும்

எழுத்துகள் மா என்பது நெடில் எழுத்து

எனவே அது எதுகையாகாது

மேலும் எடுத்துக்காட்டுகள்

பக்கம் – துக்கம் √
பக்கம்- தூக்கம் ×
பாக்கம் – தூக்கம் √

கடல்- உடல் √
கடல்- ஊடல் ×
பாடல் – ஊடல் √

திக்கு- விக்கல்√
திக்கு- வீக்கம் ×
பாக்கு- தாக்கு- போக்கு – வாக்கு √

எனவே இரண்டாவது எழுத்துக்கு முந்தைய எழுத்து அதாவது முதல் எழுத்து குறிலெனில் குறிலாகவும் நெடிலெனில் நெடிலாகவும் இருக்க வேண்டும்.

ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்

இப்போது மற்ற எதுகைகளைப் பார்க்கலாம்

3. பொழிப்பு எதுகை

இவ்வகை எதுகை முதல் மற்றும் மூன்றாம் சீர்களில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவதைக் குறிக்கும்

எடுத்துக்காட்டு

அன்பே நமக்கெலாம் இன்பம் நல்கும்
நன்மைப் பூக்களை இன்றும் சுரக்கும்
வன்மம் ஒழிந்திடும் தன்மை வளர்க்கும்
வென்றே உலகினில் என்றும் நிலைக்கும்

இப்பாடலில்

அன்பே – இன்பம்
நன்மை – இன்றும்
வன்மம்- தன்மை
வென்றே- என்றும்

என முதல் மற்றும் மூன்றாம் சீர்களில் பொழிப்பு எதுகை வந்துள்ளதைக் காணலாம்

  1. ஒருஉ எதுகை

இவ்வகை எதுகை 1 மற்றும் 4 ஆம் சீர்களில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவதாகும்.

அருந்தமிழ் ஒன்றே துணையென வருமே
உருவினில் ஏற்றம் உறுதியைத் தருமே
எருவெனத் தமிழர்க் கேற்றமும் பெருகக்
கருவினில் கூட கனிவினைத் தருமே

இப்பாடலில்

அருந்தமிழ் – வருமே
உருவினில் – தருமே
எருவெனத் – பெருகக்
கருவினில் – தருமே

இவை எதுகைகள்.

  1. கூழை எதுகை

முதல் மூன்று சீர்களில் ஒரே எதுகைவரின் அது கூழைஎதுகை எனப்படும்.

1

தினமும் உனதுருவம் கனவில் வருகிறதே
வனத்தில் உனதெழிலோ வனப்பாய்த் தெரிகிறதே
உனக்கும் எனக்குமொரு சினமோ இல்லையடி
கனக்கும் மனத்தினிலே கனத்தை மறந்திடவா

2

கொள்ளை கொள்ளும் கிள்ளை- அழகோ
வெள்ளை உள்ளப் பிள்ளை – கெஞ்சித்
துள்ளும் உள்ளம் அள்ளும் – நெஞ்சில்
அள்ள அள்ள வெள்ளம் அன்பே!

மேற்கண்ட இரண்டு பாடல்களிலும் ஒவ்வொரு அடிகளையும் கவனியுங்கள்.

முதல் மூன்று சீர்களிலும் இரண்டாவது எழுத்தாக முறையே ன மற்றும் ள் வந்துள்ளன.

இதுவரை 5 எதுகைகளைப் பார்த்திருக்கிறோம். இன்னும் மூன்று வகைகளை அடுத்துப் பார்ப்போமா?

அப்போது உங்களுக்கு ஆச்சரியமான போட்டி ஒன்றும் உள்ளது. பரிசும் உண்டு.

  


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

அறிமுகம்

வாழ்வி(ய)ல் வசந்தம்!

உள்ளிழுத்து வெளிவரும் – என்
உஷ்ண மூச்சுக் காற்று
இதயத்தின் ரணங்களை
மொழிபெயர்க்கும்!

என் வீட்டு ஜன்னல் கதவு
என் மன ஓலத்தை எதிரொலிக்க
ஒத்தாசை புரியும்!

 » Read more about: வாழ்வி(ய)ல் வசந்தம்!  »

ஆன்மீகம்

வாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.

“அன்பால் அறிவால் அகங்குளிரும்
அமுதமொழியால் அனைவரையும்”

தன்பால் ஈர்க்கும் தகைமிகு பேச்சாளர், நல்ல எழுத்தாளர், மூதறிஞர், சித்திரகவி பாடிய கவிஞர், முத்தமிழ் அறிஞர், ஆன்மீகச் செம்மல் என்று அடுக்கிக் கொண்டே போகக்கூடிய வல்லமை பெற்ற வாரியார் சுவாமிகளின் நூல்களைப் படிக்கும் பொழுது தனிப்பெரும் இன்பம் தன்னால் வருவதை நாம் உணர முடியும்.

 » Read more about: வாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.  »

மரபுக் கவிதை

யாசக வாசலிலே…

இமைகள் வருடிய தாயும் எங்கே
இதயம் தொட்ட உறவுகள் எங்கே
இரக்கம் படைத்த நெஞ்சமும் எங்கே
இளமை வளமை இன்பம் எங்கே..எங்கே…?

தோளில் சுமந்த செல்வங்கள் எங்கே
தேடியச் செல்வங்கள் போனதும் எங்கே
ஓடி யாடி உழைத்த….தெல்லாம்
தேடியும் பார்த்தேன் தெரியவில்லை.

 » Read more about: யாசக வாசலிலே…  »