தொடர் 4

எதுகையைப் பற்றிய ஒரு தெளிவு வந்திருக்கும் எனக் கருதுகிறேன். பத்துவகையான எதுகைகளைத் தெரிந்து கொண்டாலும் அவை அனைத்தையும் நாம் கவிதைகளில் பயன்படுத்த வேண்டுமா என்றால் தேவையில்லை என்றுதான் கூறுவேன். ஒரே ஒரு எதுகை அதுவும் அடி எதுகை ஒன்று மட்டுமே கவிதைகளில் பயன்படுத்தினால் போதும் . கவிதை சிறக்கும் ; அழகாகத் தோற்றமளிக்கும். மற்ற எதுகைகள் தானாக வந்தால் சேர்த்துக் கொள்ளுங்கள். வலிய சேர்க்க வேண்டாம்.

இப்போது போட்டிக்கு வருவோம்

கடைசி இரண்டு எதுகை தவிர்த்து

நான்கு அடிகளில் அடிஎதுகை வருமாறு ஒரு பாடல் . ஒவ்வொரு அடியிலும் ஏதேனும் மற்றொரு எதுகையும் வந்தால் சிறப்பு .

சிறப்பாக எழுதும் ஒருவருக்கு அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவருக்கு பாரதிதாசனின் கவிதைகள் புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்..

நீங்கள் தயாரா???

செந்தமிழே எந்தாயே சீர்நிறைந்த நறுந்தேனே
சந்தனமாய் கமழ்கின்ற முந்திவந்த தெள்ளமுதே
பந்தமெலாம் நீயன்றோ பாசமுள்ள நந்தவனம்
வந்தனைகள் தந்துனையே எந்நாளும் வணங்கிடுவேன்

  1. அடிஎதுகை

செந்தமிழே
சந்தனமாய்
பந்தமெலாம்
வந்தனைகள்

  1. இணைஎதுகை 1, 2

செந்தமிழே – எந்தாயே

  1. பொழிப்பு எதுகை 1, 3

சந்தனமாய் – முந்திவந்த

  1. ஒருஉ எதுகை 1, 4

பந்தமெலாம் – நந்தவனம்

  1. கூழை எதுகை 1, 2, 3

வந்தனைகள்
தந்துனையே
எந்நாளும்

எடுத்துக்காட்டுப் பாடலில் 5 எதுகைகள் வந்துள்ளன

இவ்வாறு தாங்களும் முயலுங்கள்

அடுத்து வரும் பகுதி மோனை…