தொடர் – 3

இதுவரை 5 எதுகைகளைப் பார்த்தோம்

இப்போது மேலும் மூன்று எதுகைகளைக் காண்போம்

      6.மேற்கதுவாய் எதுகை

ஒரு அடியில் 1,3,4 சீர்கள் ஒரே எதுகை பெற்று வருவது மேற்கதுவாய் எதுகை எனப்படும்

எடுத்துக் காட்டு

விண்மகள் பெற்றெடுத்த தண்ணிலவே பெண்மகளே
மண்மகள் வாழ்த்துகின்ற பண்ணிசையே வண்டமிழே
கண்விழியால் எனைமயக்கும் கண்ணகியே உண்டிடவா?
செண்டுமலர் ஆடுகின்ற பெண்ணெழிலைக் கண்டிடவா?//

  1. கீழ்க்கதுவாய் எதுகை

ஒரு அடியில் 1,2,4 சீர்கள் ஒரே எதுகை பெற்று வருவது கீழ்க்கதுவாய் எதுகை எனப்படும்

எடுத்துக் காட்டு

வான்மழையே தேன்சுரக்கும் நல்லமுதே கோன்மகளே
ஏன்சுணக்கம் நான்வரவா தெள்ளமுதே தேன்தரவா
மான்மருளல் ஏன்மலரே உன்விழிகள் மான்விழியோ
மீன்விழிகள் தான்சுமந்த பூமகளே ஏன்மயக்கம்?

  1. முற்றெதுகை

ஒரு அடியில் நான்கு சீர்களிலும் ஒரே எதுகையே வருவது முற்றெதுகை எனப்படும்.

எடுத்துக் காட்டு

கற்றவரின் நற்றுணையே!கற்பனைக்கோர் சொற்றுணையே!
கொற்றவரின் பொற்குடமே குற்றமெதும் அற்றவளே!
பற்றில்லா துற்றவரும் பற்றுவைக்கும் நற்றவமே!
பெற்றவளே சொற்சரத்தைப் பற்று//

இதுவரை எட்டு எதுகைகளைப் பார்த்துவிட்டோம். இதுவல்லாமல் இன்னுமிரண்டு எதுகைகளும் உள்ளன.

அவையாவன

  1. இன எதுகை
  2. வர்க்க எதுகை

இன எதுகை

இனஎதுகை என்பது ஒரே மாதிரியான ஒலியுடைய எழுத்துகள் எதுகையாக வருவது இனவெதுகை எனப்படும்.

ண ன ந
ல ழ ள

எடுத்துக்காட்டு

1.

மணமகள் நாண மணமகன் கூட
மனமதும் இணைந்திட வேண்டும்
குணம்நிறை வாக குலமக ளாக
தனமதும் பெருகிட வேண்டும்

இங்கு

மணமகள்
மனமதும்
குணம்நிறை
தனமதும்

ண, ன

இரண்டும் இனவெதுகை ஆகும்

2.

உழைப்பவர் உயர வேண்டும்
உலகினில் சிறக்க வேண்டும்
களைத்தவர் மகிழ வேண்டும்
களிப்புகள் பெருகவேண்டும்
மலைப்பவர் திகைக்க வேண்டும்
மனத்தினில் உறுதி வேண்டும்
கலைமகள் அருளும் வேண்டும்
காசினி வாழ்த்த வேண்டும்

இங்கு

உழைப்பவர்
களைத்தவர்
மலைப்பவர்
கலைமகள்

ழை, ளை, லை மூன்றும் வந்தது இனவெதுகை யாகும்

வர்க்க எதுகை

ஒரு எழுத்தின் அனைத்து எழுத்துகளுமே எதுகையாக வந்தால் அது வர்க்கஎதுகை எனப்படும்.

கருணை பொங்கும் மனமே வேண்டும்
அரிய செயல்கள் கைகூட வேண்டும்
இருண்ட மனத்தில் ஒளிவர வேண்டும்
பெரிய மனமும் பெருகிட வேண்டும்

இங்கு ரு, ரி எதுகையாக வந்துள்ளது.

ஆனால் இனவெதுகை வர்க்கஎதுகை இவை இரண்டையும் நாம் பயன்படுத்தாது எழுதுதலே சிறப்பு. தவிர்க்க முடியாத இடங்களில் பொருள்கருதி எழுதலாம்

அப்புறம் அந்த போட்டியையும் பரிசையும் அடுத்த பதிவில் பார்ப்போமே

 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »