தொடர் – 9

இதுவரை எதுகை மோனை மற்றும் இயைபு ஆகியவற்றைப் பார்த்துள்ளோம்.

இத்துடன் தொடர்புடைய முரண் தொடை அந்தாதி அளபடை செந்தொடை போன்றவற்றை சமயம் வரும்போது பார்ப்போம் .

இப்போது அசையையும் சீரையும் பார்ப்போம். மரபுக்கவிதை எழுத வரும் அனைவருமே யோசிப்பது இந்த அசை மற்றும் சீர்கள் பற்றித்தான். இவை ஒன்றும் நாம் பயப்படும் அளவுக்கானது அல்ல.

தற்போது நாம் தெரிந்து கொள்ள தண்டு அசைகள் இரண்டே இரண்டுதான்.

 1. நேரசை
 2. நிரையசை

நேரசையை நாம் நேர் என்றும் நிரையசையை நாம் நிரை என்றும் ஞாபகம் வைத்துக் கொள்வோம்.

எழுத்துகளில் நமக்கு குறில் நெடில் தெரியும். இருந்தாலும் நினைவுப்படுத்திக் கொள்வோம்.

அ, இ, உ, எ, ஒ. ஆகிய ஐந்தும் குறில்

ஆ, ஈ, ஊ, ஏ, ஓ ஆகிய ஐந்தும் நெடில்

ஐ மற்றும் ஔ இரண்டும் குறிலாகவும் நெடிலாகவும் பயன்படும்.

குறில் நெடில் என்பது எழுத்துகள் அல்ல ஓசைகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

( கைமாறு என்ற சொல்லில் கை நெடிலாக ஒலிக்கும். அதே நேரத்தில் உடுக்கை என்ற சொல்லில் கை குறிலாக ஒலிக்கும். )

நேர் அசை

இது

தனிக் குறில்

குறில் + ஒற்று

தனி நெடில்

நெடில் + ஒற்று

ஆகியவை நேர் எனப்படும்

எடுத்துக்காட்டு


கண்
கா
காண்

இவை யாவும் நேரசைச்சீர்களாகும்

நிரையசை

இது

இரண்டு குறில்கள்

இருகுறில் + ஒற்று

குறில் + நெடில்

குறில் + நெடில் + ஒற்று

எடுத்துக்காட்டு

கட.- இருகுறில்

கடல் – இருகுறில்ஒற்று

விடா – குறில் நெடில்

விடார் – குறில்நெடில் ஒற்று

சீர்கள் அனைத்துக்கும் இந்த அசைகளே முக்கியம் என்பதால் நேரசை நிரையசையைக் கவனத்தில் வையுங்கள்

இப்போது சீர்களுக்குச் செல்வோம்.

சீர் என்றாலே அழகு என்றும் ஒரு பொருள் உண்டு. அசைகள் இணைந்தால் சீர்கள் கிடைக்கும்.

நாம் மூன்று வகையான சீர்களை மட்டும் காண்போம்

 1. ஈரசைச் சீர்
 2. மூவசைச்சீர்
 3. ஓரசைச்சீர்

 

 1. ஈரசைச்சீர்கள்

நமக்கு கணக்குப்பாடம் கசக்காமல் பிடித்தால் இந்த சீர்கள் பாடமும் இனிக்கும்; பிடிக்கும்.

நேர் + நேர்

நேர் + நிரை

நிரை + நேர்

நிரை + நிரை

கணினி போல நேர் 1 எனில் நிரை 2 எனக் கொள்க

 1. நேர்நேர்
 2. நேர் நிரை
 3. நிரை நேர்
 4. நிரைநிரை

இப்போது ஓரளவுக்கு ஞாபகம் வைத்துக் கொள்ள முடிகிறதா?

சரி இப்போது அவற்றின் பெயரைக் காண்போம்

 1. நேர்நேர் – தேமா
 2. நேர் நிரை – கூவிளம்
 3. நிரை நேர் – புளிமா
 4. நிரைநிரை – கருவிளம்

இவற்றில் நேர் அசையில் இரண்டு சீர்களும் நிரைஅசையில் இரண்டு சீர்களும் உள்ளனவா!

நேரில் முடிந்தால் மாச்சீர்
நிரையில் முடிந்தால் விளச்சீர்

அவ்வளவுதான்

எடுத்துக்காட்டு

பெயர் : தேமா

வாய்பாடு : நேர் நேர்

எடுத்துக்காட்டு :

காக்க
காப்பார்
காலை
பாளை
பாட்டு
நாடு
நாட்டு
ஏடு
ஈடு
ஈட்டு

எப்படி அசை பிரிப்பது?

காக்க = காக்/க. = நேர் நேர் தேமா
காடு = கா/டு = நேர் நேர் தேமா

ஒற்று எழுத்துகளைக் ( புள்ளி வைத்த எழுத்துகளைக் )கணக்கில் கொள்ள வேண்டாம்.

மற்றவற்றைப் பிறகு பார்க்கலாம்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

அறிமுகம்

வாழ்வி(ய)ல் வசந்தம்!

உள்ளிழுத்து வெளிவரும் – என்
உஷ்ண மூச்சுக் காற்று
இதயத்தின் ரணங்களை
மொழிபெயர்க்கும்!

என் வீட்டு ஜன்னல் கதவு
என் மன ஓலத்தை எதிரொலிக்க
ஒத்தாசை புரியும்!

 » Read more about: வாழ்வி(ய)ல் வசந்தம்!  »

ஆன்மீகம்

வாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.

“அன்பால் அறிவால் அகங்குளிரும்
அமுதமொழியால் அனைவரையும்”

தன்பால் ஈர்க்கும் தகைமிகு பேச்சாளர், நல்ல எழுத்தாளர், மூதறிஞர், சித்திரகவி பாடிய கவிஞர், முத்தமிழ் அறிஞர், ஆன்மீகச் செம்மல் என்று அடுக்கிக் கொண்டே போகக்கூடிய வல்லமை பெற்ற வாரியார் சுவாமிகளின் நூல்களைப் படிக்கும் பொழுது தனிப்பெரும் இன்பம் தன்னால் வருவதை நாம் உணர முடியும்.

 » Read more about: வாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.  »

மரபுக் கவிதை

யாசக வாசலிலே…

இமைகள் வருடிய தாயும் எங்கே
இதயம் தொட்ட உறவுகள் எங்கே
இரக்கம் படைத்த நெஞ்சமும் எங்கே
இளமை வளமை இன்பம் எங்கே..எங்கே…?

தோளில் சுமந்த செல்வங்கள் எங்கே
தேடியச் செல்வங்கள் போனதும் எங்கே
ஓடி யாடி உழைத்த….தெல்லாம்
தேடியும் பார்த்தேன் தெரியவில்லை.

 » Read more about: யாசக வாசலிலே…  »