தொடர் 10
ஈரசைச் சீர்களில் முதலாவதாக தேமா எனும் சீரைப்பார்த்தோம்.
இதனை ஞாபகம் வைத்துக்கொள்வது எளிது.
- இது இரண்டு குறில்களால் தொடங்காது
- குறில் + நெடிலுடன் தொடங்காது
- நெடிலில் தொடங்கும்
- நெடில் + குறிலாக வரும்
- நெடில் + மெய்யெழுத்துடன் வரும்
- குறில் + மெய்யெழுத்துடன் வரும்
எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்
- கவிதை × = கவி / தை
- கனாக்கள் × = கனாக் / கள்
- காலை √ கா/லை தேமா
- காது √ கா / து தேமா
- காற்று, காற்றே √ காற் / று காற்/றே தேமா
- கற்று, கற்றோம்√ கற் / று கற்/றோம் தேமா
இப்போது தேமா மறக்குமா?
உங்கள் பெயரை எடுத்து அசை பிரியுங்கள்
பாமா
பூமா
வேலா
ராசா
ராசன்
ராணி
பாணி
பார்வை
சால்பு
ஈசன்
கண்ணன்
வேலன்
மீனாள்
இவையாவும் தேமா தான்
பிரித்துப் பாருங்கள்
இப்போது புளிமா பற்றிக் காண்போம்
பெயர் : புளிமா
வாய்பாடு : நிரை நேர்
எடுத்துக்காட்டு
கனவு
களவு
கனாக்கள்
பணமே
முருகா
துருவன்
உறவு
இரண்டு
விழுது
விழாவில்
கடலில்
இதனை எப்படி அசை பிரிப்பது என்று பார்க்கலாம்
கனவு – கன/வு — நிரை நேர் புளிமா
விழாவில் – விழா/வில் – நிரைநேர் புளிமா
இரண்டு- இரண்/டு நிரை நேர் புளிமா
முதலில் ஒற்றெழுத்துகளை அடியுங்கள்
அடித்ததற்கு முன்னர் உள்ள எழுத்துகளை வேறாகவும் பின்னர் உள்ள எழுத்துகளை வேறாகவும் அசை பிரிக்க வேண்டும். பிறகு அதன் வாய்பாட்டை வைத்து பெயரை எழுத வேண்டும்.
இப்போது பாருங்கள்…
கொளஞ்சி
இதில் உள்ள ‘ஞ்’ என்ற எழுத்தை எடுத்து விடுங்கள்
கொள/ சி என்றாகும்
கொள என்பது இரண்டு குறில்
இரண்டு குறில் என்றால் நிரை
சி என்பது குறில் தனித்தது
தனித்த குறில் நேர்
இப்போது சேர்த்துப் பாருங்கள்
நிரைநேர்
நிரை நேர் எனில் புளிமா
அவ்வளவுதான்
இதனை ஞாபகம் வைத்துக்கொள்வது எளிது.
- இது இரண்டு குறில்களால் தொடங்கும்
- குறில் + நெடிலுடன் தொடங்கும்
- தனி்த்தநெடிலில் தொடங்காது
- நெடில் + குறிலாக வராது
- நெடில் + மெய்யெழுத்துடன் வராது
- குறில் + மெய்யெழுத்துடன் வராது
- இரண்டுகுறில் + மெய்யெழுத்துடன் வரும்
- குறில் + நெடில் + மெய்யெழுத்துடன் வரும்
இப்போது
கீழ்க்காணும் சொற்களை அசை பிரித்துப் பாருங்கள்.
- பழகு
- செலவு
- நலம்சேர்
- வியாழன்
- இறைவன்
- இயற்கை
- அரவான்
- கடாரம்
- சிவனே
- வராதோர்
அசை பிரித்து விட்டு இவற்றில் ஏதும் தேமா இருந்தால் சொல்லுங்கள்.