தமிழை முன்னெடுத்துச் செல்வோம்…
தமிழ் அறிவு இல்லாத ஒரு சமுதாயம் உருவாகக் கூடாது என்ற நல்ல எண்ணம் என்றும் என் போன்றவர்களால் புலம்பெயர்ந்தவர்களின் குழந்தைகள் தமிழைக் கற்க முடிகிறது
தமிழ் அறிவு இல்லாத ஒரு சமுதாயம் உருவாகக் கூடாது என்ற நல்ல எண்ணம் என்றும் என் போன்றவர்களால் புலம்பெயர்ந்தவர்களின் குழந்தைகள் தமிழைக் கற்க முடிகிறது
நேர்காணலில் நாம் சந்திக்கவிருப்பவர், தமது காத்திரமான படைப்புகளோடு இலக்கிய உலகில் சஞ்சரிப்பவர்.’கோவுஸ்ஸ ராம்ஜி’ எனும் புனைபெயரில் எழுதிவரும் இவர் எழுத்துலகில் தனக்கென ஓரிடத்தைத் தக்க வைத்துக் கொண்டு வலம் வரும் காளியப்பன் உலகநாதன் ஆவார்>
அரசியலில் பெண்கள் பங்களிப்பு பெரும்பகுதியாக இருக்க வேண்டும்
உமாசுப்ரமணியன்|
பெண்ணியச் செயற்பாட்டாளர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர், சிறுவர் நூல்களை எழுதியிருப்பவர், திரைப்படப் பாடலாசிரியர் எனப் பன்முக ஆளுமை நிறைந்தவர்… அவரின் நேர்காணல்
பெண்ணியச் செயற்பாட்டாளர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர், சிறுவர் நூல்களை எழுதியிருப்பவர், திரைப்படப் பாடலாசிரியர் எனப் பன்முக ஆளுமை நிறைந்தவர்… அவரின் நேர்காணல் இதோ…
நேர்கண்டவர் பெண்ணியம் செல்வக்குமாரி
எழுத்தாளர் கவிமுகில் சுரேஷ் அவர்களுடன் தருமபுரி பண்பலை 102.5 சார்பாக ஒளிபரப்பு அலுவலர் எஸ் கோபாலகிருஷ்ணன் அவர்கள் நேர்காணல் செய்கிறார்.
நேயர்களுக்கு வணக்கம் பொதுவாக புத்தகங்கள் என்பது ஒரு மனிதனை செழுமைப்படுத்துவதற்கும் அவரோட வார்த்தையோட உண்மையான அர்த்தத்தை தெரிந்து கொள்வதற்கும் நம்மளோட அறிவை விரிவு படுத்துவதற்கும் அனுபவத்தை உண்மையான அனுபவங்களில் இருந்து நிறைய விஷயங்களை தெரிந்து கொள்வதற்கும் பயன்படுகிறது
அப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்முடைய தருமபுரியை சேர்ந்த பல புத்தகங்களை படைத்த ஒரு படைப்பாளி நம்ம கூட இருக்கிறார் கவிதைகளை வடித்துக் கொண்டிருக்கிறார் அவர வந்து இன்னைக்கு நிகழ்ச்சிகள்ல சந்திக்க இருக்கிறோம்.
மின்னிதழ் / நேர்காணல் கரிசல்காட்டுக் கவிதைச்சாரல் கரிசல்காட்டு மண்ணில் பிறந்து ஏதுமறியாத பெண்ணாக வளர்ந்து திருமணமாகி இனிமையான திருமண வாழ்க்கை சென்றுகொண்டிருந்தபோது கணவரின் எதிர்பாரா மரணம் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டாலும் தனது விடாமுயற்சியாலும் தளராத தன்னம்பிக்கையாலும் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி தனது மகனைத் தன் கணவர் ஆற்றிய காவல்துறைப்பணிக்கே அனுப்பி, தானும் ஒரு அரசு பள்ளியின் தலைமை ஆசிரியராக முன்னேறி சாதனைப் பெண்மணியாகத் திகழ்வதோடு மட்டுமல்லாது தமிழ்மொழி மீது கொண்ட தாளாத பற்றினால் தமிழ்ச்சங்கம் Read more
மின்னிதழ் / நேர்காணல் தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா தமிழ்நெஞ்சம் சஞ்சிகைக்கான நேர்காணலில் எம்மோடு இணைந்திருப்பவர் ஓர் எழுத்தாளர், நூல் விமர்சகர், பாடலாசிரியர், இலக்கியச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர் எனப் பல துறைகளில் மிளிரும், பூங்காவனம் இலக்கிய சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் பணியார்றிய தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா. இலங்கையின் முன்னோடி பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றில் தவறாது இடம்பிடித்த ஒரு பெயர்தான் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா என்ற பெயராகும். இவர் குறிஞ்சி நிலா என்ற புனைப் பெயரிலும் Read more
மின்னிதழ் / நேர்காணல் முனைவர். சி.அ.வ.இளஞ்செழியன் ஒருவர் ஒரு திறமையில் சிறந்து விளங்குவதே அரிது. பல திறமைகளில் சிறந்து விளங்குவது அரிதிலும் அரிது. ஒருவர் ஓவியம் வரைகிறார். சிற்பக்கலையில் திறன் பெற்றுள்ளார். இசை ஞானம் உள்ளது. கட்டிடக்கலை ஆசிரியராக உள்ளார். பழங்கால சிற்பம் , ஓவியம் , இசை கட்டிடக் கலைகள் குறித்த ஆய்வு செய்கின்றார். ஆராய்ச்சிக்கட்டுரைகள் எழுதுகின்றார். இவற்றோடு கவிதை எழுதும் கலையையும் கற்று, குறிப்பாக, மரபுக்கவிதை எழுதும் வல்லமை பெற்று Read more
பொறியியலில் சேர்ந்த முதல்மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மருத்துவப்படிப்பு பயில இடம்கிடைத்தவுடன் அதனைக் கைவிட்டுவிட்டு மருத்துவப் படிப்பைக் கற்று சிறந்த மருத்துவர்களாக வலம் வருவதை நாம் காணலாம். அப்படிப்பட்ட மருத்துவரே இன்று நமக்கு நேர்காணல் வழங்க உள்ளார். ஆம் சென்னை பள்ளிக்கரணை காவல்நிலையத்திற்கு எதிரில் உள்ள மேடவாக்கம் கல்பனா பல் நோக்கு மருத்துவமனையின் நிறுவனர். அரசு மருத்துவக்கல்லூரிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் . வாழ்நாள் சாதனையாளர் உட்பட பலவிருதுகளைப் பெற்றவர். தமிழ்க் கவிதைகளை சிறுவயது முதற்கொண்டு எழுதி வருபவர்.
முனைவர் கவிக்கோ ஜெயக்குமார் பலராமன்
மின்னிதழ் / நேர்காணல் திருமதி புனிதா கணேசன் இன்றைய சமூகச்சூழலில் ஒரு பெண் தனியாக வாழ்வது என்பது சற்றே சிரமமான காரியம் தான்; அதுவும் கணவனை இளவயதில் இழந்த பிறகு தனியாகப் பயணிப்பது அவ்வளவு எளிதானதன்று; மேலும் ஒரு பெரிய நிறுவனத்தைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு வெற்றிகரமாக நடத்துவது என்பது மிகவும் கடினமானது. ஆனால் இவற்றை எளிதாகக் கடந்து வந்து இன்று வெற்றிகரமான பெண்ணாக, ஒரு இரும்புப் பெண்ணாக, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக, Read more
மின்னிதழ் / நேர்காணல் முத்துப்பேட்டை மாறன் முகநூல் ஓர் இருபுறக் கூர்மையுள்ள கத்தி போன்றது. அதனைப் பயன்படுத்துவதைப் பொறுத்தே பலனையும் கெடுதலையும் தரும். முகநூலைத் தமிழ்வளர்க்கும் கருவியாகச் செய்யமுடியும் என்பதை ஒருவர் சாதித்துக் காட்டியுள்ளார் என்றால் நம்பமுடிகிறதா? ஆம் ஒருவர் சாதித்துள்ளார். இன்று பல்கிப் பெருகியுள்ள எண்ணற்ற முகநூல் குழுமங்களுக்கு முன்னோடியாக உள்ள நிலாமுற்றம் என்ற ஓர் அமைப்பை நிறுவி அதன்மூலம் எண்ணற்ற கவிஞர்களை உலகுக்கு அறிமுகப் படுத்தி வரும் முத்துப்பேட்டை மாறன் Read more