தெலுங்கானாவில் தமிழ் எழுத்தாளர் – மைதிலி சம்பத்

நேர்கண்டவர் : தமிழ்நெஞ்சம் அமின் மைதிலி சம்பத்: “வணக்கம் சார். நல்லா இருக்கீங்களா?” ஆசிரியர் திரு அமின்: “நல்லா இருக்கேன்மா. நீங்க எப்படி இருக்கீங்க?” “நல்லா இருக்கேன் சார். அயல் நாட்டிலிருந்து தமிழ் பத்திரிகை நடத்தி, தமிழ் வளர்த்து, தமிழ் எழுத்தாளர்களை வளர்த்து, தமிழே மூச்சாக நினைக்கும் உங்களுடைய தமிழ் பணிக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள். நீங்களே என்னை நேர்காணல் செய்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அதே சமயம் சற்று Read more

சுவிஸ் நாட்டுத் தமிழச்சி

வணக்கம் தங்கள் பூர்வீகம் இலங்கை எனத் தெரியும். இலங்கையில் எந்தப் பகுதியில் தங்கள் குடும்பம் இருந்தது? இலங்கை யாழ்மாவட்டத்தில் உள்ள கோப்பாயில்  வசித்தோம். எப்போது புலம்பெயர்ந்தீர்கள்? ஏன் சுவிட்சர்லாந்து நாட்டைத் தெரிவு செய்தீர்கள்? தாயகத்தில் பல இடப்பெயர்வுகளை தாயகத்தில் சந்தித்தேன். உண்மையில் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு திருமணத்திற்காகவே வந்தேன். எனது கணவர் தாயகத்தில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகளால் புலம்பெயர்ந்து சுவிற்சர்லாந்தில் தஞ்சமடைந்தார். சுவிற்சர்லாந்தில்  ஐக்கிய நாடுகள் ஒன்றியம் இருப்பதால் அந்நாட்டைத் தெரிவுசெய்தார். Read more

பாவலர் கண்ணதாச முருகன்

புகழ்வரினும் இகழ்வரினும்
பூதலமே எதிர்வரினும்
புகலென்றும் கண்ணணுக்கே!

கருவில் கலந்தாள் ககன விரிவாள்
திருவாள் உயிர்ப்பாள் தெற்காள் – தருவாள்
உருவால் வடிவாள் ஒலியால் இசையாள்
கருத்தாழ்த் தமிழைக் களி!

என,

உயிராய் மூச்சாய் உணர்வாய் உலகில் மூத்த இளையாள் தமிழன்னையை வணங்கி தமிழ்நெஞ்சம் வழங்கும் இந்த நேர்காணலைத் தொடங்குகிறேன்.

வணக்கம் வாழும் ஔவை அன்புவல்லி அம்மா. தமிழால் மூத்த தங்களால் இந்த நேர்காணலில் இல் இளையோன் கலந்து கொண்டதில் மற்றற்ற மகிழ்ச்சி அம்மா.

செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்

I மின்னிதழ் I செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம் இத்திங்கள் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாளரை நேர்காணல் செய்யவிருக்கிறோம். பள்ளிக்கூடங்களின் தாளாளர், ஒரு எழுபதாண்டு காலத் தமிழ்மன்றத்தின் தலைவர், பன்னாட்டு அரிமா சங்கத்தில்  தமிழில் நோக்கத்தை மொழிந்த அரிமா ஆளுநர், விளையாட்டு அமைப்புகளின் தலைவர், இலக்கியவாதிகளுக்கு விருதும் பரிசும் வழங்கிச் சிறப்பிக்கும் புரவலர் செஞ்சிலுவைச் சங்கப் பொறுப்பாளர் இவ்வாறு சமூகக்காவலர் , இலக்கியப்புரவலர், கல்வியாளர்,  விளையாட்டு ஆர்வலர் என்ற பல்வேறு முகங்கள் கொண்ட ஒரு ஆளுமையாளர் Read more

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம் உழைப்பாளர்களை உயர்த்துவோம் உழைப்பே என்றும் உயர்வாகும்! உடலை உறுதி ஆக்கிவிடும்! தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே தளரா உழைப்பின் பலனன்றோ! பிழைக்கும் ஏழை உடல்வருத்திப் பெரிதும் உழைப்பர் பசியுடனே! உழைப்போர் நலனைக் காத்திடுவோம்! உதவி செய்தே ஆதரிப்போம்! வயலில் உழைக்கும் விவசாயி வளத்தைச் சேர்க்கும் உழைப்பாளி! அயரா துழைக்கும் தொழிலாளி ஆற்றல் நாட்டின் உயர்வேதான்! முயற்சி கொண்டே உழைத்திடுவார்! முனைப்பாய்க் கடமை ஆற்றிடுவார்! இயற்கை வளத்தைக் காத்திடவே இணைந்தே Read more

பவானி ஆற்றங்கரையில் ஒரு பைந்தமிழ்ச்செம்மல்

I மின்னிதழ் I நேர்காணல் I கவிஞர் சையத் யாகூப் தமிழுக்கு அது ஒரு சிறந்த மொழி என்பதைவிட  இனிமையான மொழி என்பதே சாலப் பொருந்தும். இல்லாவிடில் மதத்தைப் பரப்ப வந்த கான்ஸ்டான்டைன் நோபல் பெஸ்கி, தம்பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றிக் கொண்டு தமிழ்ப்பணி செய்திருப்பாரா? ஜி யு போப் நான் ஒரு தமிழ் மாணவன் என்று வெளிப்படையாக அறிவித்திருப்பாரா? ஒரு தேம்பாவணியும் சீறாப்புராணமும் நமக்குக் கிடைத்திருக்குமா?  கவிக்கோ அப்துல் ரகுமான் கவிஞர் மு மேத்தா Read more

சோழவந்தான் கவிச்சிங்கம்…

மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..

பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்

I மின்னிதழ் I நேர்காணல் I மூதூர் முகைதீன் மூதூர் மண்ணை பிறப்படமாகக்கொண்ட சர்வதேச புகழ் பெற்ற கவிஞரும், பன்னூல் எழுத்தாளுமான மூதூர் முகைதீன் அவர்களை அறிமுகம் செய்வதில் தமிழ்நெஞ்சம் பெருமிதம் கொள்கின்றது. 11 சிறுகதை, கவிதை, சிறுவர் பாடம், இலக்கிய மலர் வெளியீடு மற்றும் விமர்சன கட்டுரைகள் என்று பல்வேறு தளங்களில் விரியும் இவரின் இலக்கிய பரப்பு இவரின் இலக்கிய முதிர்ச்சியின் அடையாளமாகும்.  கிழக்கிலங்கையில் தனக்கென அடையாளம் பதித்த இலக்கிய ஆளுமை மூதூர் முகைதீன் Read more

கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

I மின்னிதழ் I நேர்காணல் I கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா ‘’மலையகத்தில் கற்றவர்கள் அதிகமாக காணப்படுவது பெருமைக்குரிய விடயமாகும்’’ மலையகக் கவிஞர், எழுத்தாளர், முன்னாள் அதிபர், பெண் படைப்பாளி கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா நேர்காணல் : முஷ்தாக் அஹ்மத் உங்களைப் பற்றிய ஒரு அறிமுகத்தை தாருங்கள்? பச்சை நிற தேயிலை தோட்டங்களும் மலைகளும் சூழ்ந்த இயற்கை அழகு நிறைந்த மலை நாட்டின் புசல்லாவையை பிறப்பிடமாகக் கொண்டவள். எனது தந்தை சேகு தாவூத் இந்தியாவில் உள்ள Read more

கிழக்கில் உதித்த தாரகை, இலக்கிய வானிலும் சாதனை

I மின்னிதழ் I நேர்காணல் I  மருத்துவர் ஜலீலா முஸம்மில் தொழில்ரீதியாக மருத்துவராக சேவை செய்யும் டொக்டர் ஜலீலா முஸம்மில், பன்முகத் திறமைகளோடு இலக்கிய  வானிலும் ஆளுமை செய்கிறவர். சுறுசுறுப்பில் தேனீயாக இயங்கி திக்குகள் எட்டிலும் துலங்குகிறவர். நேர்காணல்  தமிழ்நெஞ்சம்அமின் சனவரி 2024/ 148 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும். உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தை எமது வாசக நெஞ்சங்களுக்காக  அறியத் தாருங்கள்! Read more