தொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு தமிழ்த்தென்றல்

தமிழில் இளங்கலையோ முதுகலையோ பட்டம் பெறாதவர்களே பெரும்பாலும் கவியுலகில் கோலோச்சுபவர்களாக இருக்கிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியே! அத்தகைய ஒருவரைத்தான் இந்த மாத இதழில் நேர்காணல் செய்யவிருக்கிறோம். ஆம் இவர் நிறைய பட்டங்களைப் பெற்றிருந்தாலும் தமிழில் பட்டம் பெற்றவர் இல்லை. பணிபுரியும் துறை கல்வித்துறையாக இருப்பினும் அங்கும் தமிழ் கற்பிக்கப்படுவதில்லை. இவர் ஆசிரியருக்கான பட்டமும் பயிற்சியும் பெற்றிருந்தாலும் ஆசிரியராகப் பணியாற்ற வில்லை. ஆனால் தமிழ்க் கவிதைகளை யாப்பதில் முன்னணிக் கவிஞர்களில் ஒருவராகத் திகழ்கிறார். ஆயிரம் விருத்தங்களை மிகக்குறுகிய காலத்தில் எழுதி நிறைவு செய்து பிரான்சு நாட்டில் இயங்கிவரும் கம்பன் கழகம் தொல்காப்பியர் இலக்கண மையம் மற்றும் பாவலர் பயிலரங்கம் வழங்கிய பாவலர் மற்றும் பாவலர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். ஆம் பாவலர் திரு. இராம வேல்முருகன் அவர்களைத்தான் சந்திக்கின்றோம்.

கம்பன் விழா

ஆண்டுதோறும் பிரான்சு கம்பன் கழகம், கம்பன் விழாவைச் சிறப்பாக வெளிநாடுகளிலிருந்தெல்லாம் சிறப்பான வர்களை அழைத்துச் சிறப்புச் செய்து விழாக்கொண்டாடுவது வழக்கம். இவ் வாண்டு கொரோனாக் காலத்தில் விழாக் கொண்டாட முடியுமா என்ற ஐயப்பாடுடன் அதிகமானவர்களை அழைக்காமல் குறைந்த எண்ணிக்கையாளருடனே விழாச் சிறப்பாகத் திட்டமிடப்பட்டுச் செயற்படுத்தப்பட்டது. கம்பன் கழகத்துக்காக உழைத்த நல்லிதயம் பாவலர்ஆதிலட்சுமிவேணுகோபல் அவர்கள் மறைவை நினைவு கூறும் வகையில் விழாவுக்கு வந்திருந்தோர் அனைவராலும் தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செய்யப்பட்டது. Read more

மதுரையில் மீண்டும் ஒரு காளமேகப் புலவர்

நேர்காணல் காளமேகப்புலவர் தமிழ்ப்புலவர்கள் வரிசையில் நீங்கா இடம் பெற்ற கவிஞர். நினைத்த மாத்திரத்தில் கவிதைகளை யாப்பதில் வல்லவர். அதுவும் கவிஞர்களுக்குச் சிரமம் எனக் கருதப்படும் வெண்பாவில் சரளமாகப் பாக்கள் வடிப்பவர். காளமேகப்புலவரைப் போலவே மதுரையில் 40 வருடங்களாக ஒருவர் பாக்கள் யாத்து அசத்தி வருகிறார். ஆம் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள மணியம்மை பள்ளியில் இவரது கணீர்க்குரலைக் கேட்கலாம். இவரது பட்டறையில் பட்டை Read more

ஈழத்து நவீன கவிதை வளர்ச்சியில்…

1.0 ஈழத்து நவீன கவிதை வளர்ச்சியில் அறுபதுகளளவில் முற்போக்குக் கவிதைச் செல்நெறி முகிழ்க்க ஆரம்பித்தது, எழுபதுகளிலும் தொடர்ந்தது. இந்த எழுபது காலகட்டத்தில் இடதுசாரிச் சிந்தனையால் ஆகர்ஷிக்கப்பட்டு இத்தகைய கவிதை எழுதியோருள் ஒரு சாரார் குறிப்பாக முஸ்லிம் கவிஞர்கள் இஸ்லாமிய மதப்பற்றுடையவர்களாகவும் விளங்கினர். கீழைத்தேய நாடுகளிலே இது தவிர்க்க வியலாததொன்று என்ற புரிதலின்மையும், இத்தகைய கவிஞர்களின் தொகுப்புகள் வெளிவரத்தாமதமானமையும், வெளிவந்தவைகூட கிடைப்பதற்கரிதாகவிருந்தமையும் காரணமாக ஈழத்துக் கவிதை வரலாற்றில் இடம்பெறத்தவறிய கவிஞர்கள் சிலருள் Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 08 – 2020

எண்ணமும் – வண்ணமும் ஓவியர் அருண்குமார் நேர்காணல் ஓவியர் அருண்குமார் தமிழ்நாடு, வேலூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். அவரது முழுநேர எண்ணமும் உழைப்பும் ஓவியம் வரைவது மட்டும்தான். அவரிடம் நேர்காணல் செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம். இனி அவரிடம்… தமிழ்நெஞ்சம் ஆகஸ்ட் 2020 ஓவியங்களில் உங்கள் ஆரம்பகால அனுபவங்கள் பற்றி? நான் சிறுவயதில் இருந்து ஓவியம் வரைவது உண்டு. எனது பள்ளியில் உள்ள ஓவிய ஆசிரியை என் ஓவியங்களைப் பார்த்து, பள்ளியில் நடந்த Read more

மலர்வனம் 8

ஹைக்கூ ஷர்ஜிலா ஃபர்வின் மழைத்துளிகளை சுமந்து கொண்டிருக்கும் கார்காலச் சிலந்தி வலை. இலையுதிர்காலக் கிளை தண்டுகளெல்லாம் மின்னுகிறது வைகறைப் பனி. வானத்தில் நாற்று நட கால்களைப் கவ்விப் பிடிக்கும் சேற்று வயல். நனைந்த சாளரக்கம்பிகளில் தொங்கும் அரை நீள்வட்டகளுக்குள் முன்பனிச் சூரியன்கள். பாய்மரப்படகு பயணம் செய்கிறது இளைப்பாரும் பறவை. மரத்தின் மேல் நீந்த குளத்தில் விலகிச் செல்கிறது நிலவு அஸ்தமனமாகும் சூரியனை கூறு போடும் மரக்கிளை தொங்கும் மழைத்துளி வடிந்து Read more

மலர்வனம் 7

ஹைக்கூ வஃபீரா வஃபி 01.தாவும் குரங்குநதியில் தலைமுழுகி எழும்மரக்கிளை 02.நண்பகல் வேளைசக்கரங்களிடை சிக்கித் தவிக்கும்வண்டி நிழல்  03.உயர்ந்த பாறைஓய்வெடுக்க முடியாமல் திரும்பும்கடலலைகள்.  04.காலை வெயில்யன்னல் திரையில் ஆடும்பூனையின் நிழல்.  05.குறி வைக்கும் கவண்சட்டென நகர்ந்து மறையும்மாலைச் சூரியன். 06.இலையுதிர்க்காலம்மரக்கிளை எங்கும் பூத்திருக்கும்கொக்குக் கூட்டம். 07.கொட்டும் அருவிகற்பாறையில் துவைக்கப் படும்பௌர்ணமி நிலவு 08.குளக்கரையில் முதியவர்கூடவே நடை பயிலும்ஒற்றை நாரை. 09.ஆற்றோரத் தென்னைஅங்குமிங்குமாய் நடை பயிலும்தென்னங்கீற்றின் நிழல். 10.கொள்ளை போன மணல்தேடி ஊருக்குள் Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07 – 2020

பாரதிக்குப்பிறகு தற்போது கவிதாமண்டலம் என்ற பெயரில் ஒரு அமைப்பினை வைத்து சங்க காலக் கவிஞர்களைக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தும் ஒரு மாபெரும் கவிஞர்; தமிழையும் கவிதையையும் தனது இரு கண்களாகக் கொண்டு செயல்படும் ஒரு தன்மானத் தமிழன்; மதுரையின் வீதிகளில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கவிதை வேள்வியை நடத்தி வருபவர். சோழமன்னனின் பெயரை இயற்பெயராகவும் பாண்டிய மன்னனின் பெயரைப் புனைப்பெயராகவும் சேரமன்னைப்போல் நம் தாய் கண்ணகியைப் போற்றிப் Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06 – 2020

தமிழ்நெஞ்சம் இதழுக்கான, நேர்காணலில் எம்மோடு இணைந்திருப்பவர் ஒரு எழுத்தாளர். சமூக ஆர்வலர், விமர்சகர் மற்றும் ஊடகவியலாளர் எனப் பல பரிமாணங்களில் மிளிரும், இலங்கையிலிருந்து வெளிவரும் பூங்காவனம் இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மத். தமிழ்நெஞ்சம் – ஜூன் 2020 உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்? பாய்ந்தோடும் இயற்கை எழிலாய் நில்வளா கங்கையும் நீலவானின் நிறத்தை யொத்த அழகிய கடலும் கொண்டமைந்த இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள வெலிகமையே எனது பிறப்பிடமாகும். இந்த Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 05-2020

நூல் முகப்புபடத்தில் க்ளிக் செய்தால் தமிழ்நெஞ்சம் மே – 2020 இதழ் தரவிறக்கமாகும். பாழ் நோயாம் கொரோனா ( அறுசீர் விருத்தம் ) ( காய் காய் மா – காய் காய் மா ) கட்டுக்குள் அடங்காமல் தானே காசினியில் பரவிடுது நோயே மட்டுக்குள் வைத்திடவே முயலும் மருத்துவர்கள் படும்பாடு பாரீர் விட்டிந்த நோயகன்று செல்ல வீட்டுக்குள் இருந்தாலே போதும் பட்டென்று பாரிலது போகும் பரவசமும் கண்டிடலாம் பாரில் Read more