நூல் முகப்புபடத்தில் க்ளிக் செய்தால் தமிழ்நெஞ்சம் மே – 2020 இதழ் தரவிறக்கமாகும்.
பாழ் நோயாம் கொரோனா
( அறுசீர் விருத்தம் )
( காய் காய் மா – காய் காய் மா )
கட்டுக்குள் அடங்காமல் தானே
காசினியில் பரவிடுது நோயே
மட்டுக்குள் வைத்திடவே முயலும்
மருத்துவர்கள் படும்பாடு பாரீர்
விட்டிந்த நோயகன்று செல்ல
வீட்டுக்குள் இருந்தாலே போதும்
பட்டென்று பாரிலது போகும்
பரவசமும் கண்டிடலாம் பாரில்
பார்முழுதும் பரவுகின்ற கொரோனா
பாடாகப் படுத்துகின்ற நோயாம்
ஊர்முழுதும் அடங்கிடவே நாளும்
உயிரடக்கும் கொரோனாவும் மாளும்
பேர்விளங்கி நம்மினமும் புவியில்
பெட்புடனே வாழ்ந்திடலாம் பாரீர்
ஊர்மக்கள் தாமின்றே யடங்கி
உள்ளிருக்க நோயகன்று போகும்
பேர்பெற்ற நாட்டினரும் தானே
பெருநோயால் வாடுகின்றார் தானே
யார்கொண்டு வந்தாரிந்த நோயே
யாமின்று வாடுகின்றோம் வீணே
ஊர்கூடா தில்லிருந்து பாரும்
உலகிலிந்த நோயகன்று போகும்
பார்தனிலே பரவசமும் கூட
பாழ்நோயும் பாரகன்று போகும்
கவிஞர் – வயலூரான்