கவிதை

நட்பைத் தேடி

மூன்றெழுத்து சொர்க்கமிது,
முக்கனிகளின் சுவைபோல.
உதடுகளால் உரையாடாது.
உள்ளத்தால் ஒன்றி நிற்கும்.

துன்பத்தில் துணையாய் நிற்கும்.
துயர்நீக்கும் கோலினைபோன்று.
இனிக்கும் பொழுதுகள் தோறும்
இதயத்தை இறுக்கி அணைக்கும்.

 » Read more about: நட்பைத் தேடி  »

கதை

தெளிவுகள்

“என்ன நினக்கிறான்னு! சத்தியமா என்னால யூகம்பண்ண முடியலக்கா” இப்படித்தான் முதன்முதலில் பேசஆரம்பித்தான் பிச்சைமுத்து என்னிடம்.

முகத்தை கவனித்தேன். சிவந்துவீங்கியிருந்தது. அழுதிருப்பான் போலும். அத்தனை விரக்தி,சலிப்பு அந்தமுகத்தில்..”சாவும் வரமாட்டேங்குது எனக்கு…”

அழுதுமுடிக்கட்டும் என்று காத்திருந்தேன்.வடிகாலுக்கு பின் தெளிவு பிறக்கும்.

 » Read more about: தெளிவுகள்  »

கதை

உங்களில் ஒருத்தி

காதறுந்த மஞ்சப்பைதான் SCHOOL BAG.. அரசு நடுநிலைப்பள்ளி ஐந்தாம்வகுப்பு வரை.

பாலினப் பேதமின்றி, “இவன் அடிச்சான் டீச்சர்” “இவள்என் சிலேட் ஒடச்சுட்டா”.. இதான் அதிகபட்ச! பசங்க பொண்ணுங்க குற்றச்சாட்டா இருக்கும்..

மதியம் பெரும்பாலும் பழையசாதம்.

 » Read more about: உங்களில் ஒருத்தி  »

கவிதை

பாவாணர் வழிச்செல் நண்பா!

பாவாணர் எழுத்தும் சொல்லும்
…..பைந்தமிழை உணர்வாய்ப் போற்றும்!
பாவாணர் உரைக்கும் பாட்டின்
…..பண்ணிசைக்கப் பற்றும் நன்றாய்!
பாவாணர் எழுச்சிக் காட்டும்
…..பழம்பெருமைக் காக்க வேண்டும்!
பாவாணர் வழிச்செல் நண்பா!

 » Read more about: பாவாணர் வழிச்செல் நண்பா!  »

கவிதை

கிடைத்த ஐம்பது உரூபா

நடைபயிற்சி மேற்கொள்ளும் காலை நேரம்
—-நல்லிருட்டு விலகியொளி படரும் நேரம்
விடைகொடுத்து சோம்பலுக்கு நடந்த போது
—-விழிகள்தாம் கண்டதொரு பணத்தின் தாளை !
கடைக்கண்ணால் இருபுறமும் பார்த்த வாறு
—-கால்விரலால் எடுத்ததனைக் காணும் போது
கிடைத்தத்தாள் ஐம்பதென்று தெரிந்து கொண்டு
—-கீழ்ச்சட்டைப் பைக்குள்ளே மறைத்து வைத்தேன் !

 » Read more about: கிடைத்த ஐம்பது உரூபா  »

சிரிக்க மட்டும்

கொஞ்சம் சிரிக்கலாமா?

சுதந்திரமா சிரிங்க

பஸ் விட்டு இறங்கியதும் ஆட்டோ வேணுமான்னு கேட்டார்.

ஆட்டோ என்கிட்ட கொடுத்துட்டு சோத்துக்கு என்ன பண்ணுவீங்கனு கேட்டேன்…

முறைச்சிட்டு அசிங்கமா திட்றார்….

நான் அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன்….

 » Read more about: கொஞ்சம் சிரிக்கலாமா?  »

By Admin, ago
கவிதை

அன்பினால் …

அன்பு நுரைத்தெழுகையில்,
ஆணவம் அழிந்து
இன்பம் பிறக்கிறது!

அன்பை உணர்கையில்,
உலகமே சிறுத்து
உள்ளங்கை பந்தாய்!

அன்பை சுவாசிக்கையில்,
மண்ணை நேசித்து
பெண்மையும் சிறக்குதே!

 » Read more about: அன்பினால் …  »

கவிதை

கடைசி நிமிடம்!

என் வாழ்வில்
நடந்ததை நினைக்கையில் – என்
மெய் பொய்யாவென
கிள்ளிப் பார்க்க தோணுது!

நடுநிசியில் மொனித்தது …
புதுவருட வாழ்த்துகளை,
பரிமாறிய மகிழ்வில்,

 » Read more about: கடைசி நிமிடம்!  »

கவிதை

பெண்மையின் முகவரியாய்!

வறுமை வாட்டியதால்,
வெறுமையானதே இவள் வாழ்வு.
இருந்தும், முயன்றவளாய்,
பொறுமையே இவளைப் பார்த்து
பொறாமை கொண்டதே!

தனிமை…
துரத்தி துரத்தி,
வேட்டையாட முயன்ற போதெல்லாம்,

 » Read more about: பெண்மையின் முகவரியாய்!  »

கதை

பதறிய காரியம் சிதறிப்போகும்

வாலிபமிடுக்கு, வாலிப்பான உடற்கட்டு, அங்கொன்றும் இங்கொன்றுமாக அரும்பிய மீசை, வாழ்க்கையின் அத்தியாயங்களை மீட்டவொண்ணா பேதலித்த நிலையில் ஜடமாய்ப் படுத்திருந்தான் பருவக்காளை விசாகன். குமுறிக்குமுறி அழுத கண்ணீர் முத்துக்கள் கன்னத்தில் தாரை தாரையாக வடிய அவன் முன்னே அமர்ந்திருந்தாள் அவன் தாய் அமலா.

 » Read more about: பதறிய காரியம் சிதறிப்போகும்  »

By கௌசி, ago