விதையாய் விழு மண்ணில்
விருச்சயமாய் எழு விண்ணில்
தடைகளை உடைத்தெறிந்து வா..

கற்பாறைகளுக்குள்
முளைத்திருக்கும் சிறுசெடி போல
முட்டிமோதி முளைத்து வா..

பூமியின் மேற்பரப்பில்
விழுந்த விதைகள்
அடிஆழத்தின் ஆணிவேராய்

கண்களுக்கு புலப்படாமல்
காத்திருக்கும்
சிறுதுளி நீராக..

வீரத்தின் விதைநிலத்தில்
வீழ்ந்த விதைகள்
ஒருநாள் உயிர்ப்புடன் வளரும்..

மண்ணில் இருந்து
விண்ணை நோக்கி
எழுச்சியுடன் வளரும்..

காத்திருப்போம்

ஒரு துளி நீர் போதும்
விதைகள் மீண்டு எழ
எழுவோம்….

அந்த
வானம் தொட!