நூல்கள் அறிமுகம்

மீண்டும் பூக்கும்

mpf“மீண்டும் பூக்கும்” என்கிற நாவல் எனக்கு வாசிக்க கிடைக்கையில் அதை எழுதிய நாவலாசிரியை என் சொந்த ஊரில் மணமுடித்தவர் என்பதால் அதை ஆவலுடன் நேசித்து வாசிக்க ஆரம்பித்தேன்.

இதற்கு முன் அபிவிருத்தீஸ்வரம் ஜுனைதா எழுதிய “சாந்தி வயல்”

 » Read more about: மீண்டும் பூக்கும்  »

குடும்பம்

குந்தைகளைத் தண்டிக்கும்போது…

குந்தைகளைத் தண்டிக்கும்போது
முக்கியமாக கவனிக்க வேண்டியவை..
—————————————————————–
* குழந்தை தவறைத் திருத்திக் கொள்வதற்காக வேண்டி மட்டும் தண்டிக்க வேண்டும்….பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது.

 » Read more about: குந்தைகளைத் தண்டிக்கும்போது…  »

By Admin, ago
புதுக் கவிதை

பூசணிக்காய்

மென்று துப்பிய செரிக்காத
மீதங்களாய் குவிகிறது
ரத்தம் தோய்ந்த சதையால் ஆன
புதியதோர் எவெரெஸ்ட்டு மலை

பயிராய் வளரும் காலத்தை
காணாமலேயே விதைகளுக்கு
இவர்கள்தம் ரத்தமும் சதையும்
உரமாகி கொண்டிருக்கின்றது

குண்டு தகர்த்தி
தொலைந்த பரம்பரை வீடுகள்
புதியதோர் தலைமுறைக்கு
விசால மயான தேசமாகின்றது

காலமெனும் தொனியிலேறி
அலைகடல் தாண்டுகையில்
குடல்பசி தாங்காமல்
மீன் பசி தீர்க்கின்றனர்

நம்மை போன்ற தோற்றத்தில்
விடுமுறை பீச்சோரமாய் ஒதுங்கும்
இவர்களின் மீதங்கள் கேட்பாரின்றி
கண்டு ம(றை)றக்கப்படுகின்றன

பழம் பணக்காரர்கள் காய்நகர்த்தி
அகந்தைமிகு அரசியல்வாதியை
ஆட்டிவைக்க ஏகபோகமாக
செழிக்கிறது ஆயுத உற்பத்தி

இந்த பூசணிக்காயை மறைக்க
ஒரு பானையில் அரிசி
வெந்துகொண்டிருக்கிறது
வாழ்க மனிதம்!

 » Read more about: பூசணிக்காய்  »

புதுக் கவிதை

அகதி

தாய்நாடு எங்களை முடமாக்கி
எதோ ஒரு இறுதிக்கட்டத்தை
நோக்கி எங்களைத் தள்ளிக்
கொண்டே வருகின்றது …

பூமி எங்களை நசுக்குகிறது
சிறு விதையாயினும்
நாங்கள் அதில் புதைக்கப்பட்டு
உயிர்ப்பிக்கப்படலாம் …

 » Read more about: அகதி  »

வெண்பா

பெண்மை போற்றுதும்

நேரிசை வெண்பா வகை

வண்டமிழ்ப் பாவெடுத்து வாழ்த்திடு பெண்மையை
வண்ணமாய்ப் பாக்களில் வாகெனத் – திண்ணமாய்
எண்டிசை கேட்டிட ஏத்திய வண்ணமே
விண்ணுலகம் போற்றும் வியந்து

வண்ணமாம் வாழ்வும் வறுமையில் நண்ணினும்
வண்ணமா யச்சிறு வர்பசி -எண்ணியே
விண்ணு மவருண வீந்துண வேண்டுவாளை
விண்ணுலகம் போற்றும் வியந்து

எண்ணுக பெண்மையை ஏற்றமோடு எங்கணும்
எண்ணியே நண்ணுக ஏந்திழை –

 » Read more about: பெண்மை போற்றுதும்  »

வெண்பா

கம்பன் புகழைப் பாடு மனமே!

கம்பன் வடித்தநற் காவியம் கேட்டாலே
வம்பன் எனினும் வசப்படுவர்! – செம்பொன்
நிகர்த்த கவிதைகள் நெஞ்சுழள இனிக்க
விகர்ப்பம் தணியும் விரைந்து!

விஞ்சும் தமிழால் வியந்திடச் செய்தவர்!

 » Read more about: கம்பன் புகழைப் பாடு மனமே!  »

சிறுகதை

இறுதி ஆசை

கற கறக்கும் லுமாலா சைக்கிள் ஆட்களை கண்டதும் முகமன் கூறி புன்னகையோடு ஒலிக்கும் இரண்டு மணிச் சத்தம், ஹம்ஸா பாய் என எல்லோர் வாயிலும் பழக்கப்பட்ட பெயர், நாட்டாமை வேலை செய்து மனைவியையும் நான்கு குமருப் பிள்ளைகளையும் கவனித்துக்கொண்டிருக்கும் அவரை எப்படித்தான் செலவுகளை சமாளிக்கிறீங்க என்று கேட்டால்,

 » Read more about: இறுதி ஆசை  »

மரபுக் கவிதை

பாடு மனமே பாடு!

எங்கள் கவியரசர் இயற்றித்  தந்தபொருள்
    ஏந்தும் இசையளிக்கும் இன்பம்!
பொங்கும் மனத்துயரைப்  பொசுக்கி வாழ்வளிக்கும்
    போதும் இனியெதற்குத் துன்பம் !

இன்னல் வரும்பொழுதும்  இனிய கானமழை
    என்றும் மனச்சுமையைப் போக்கும் !

 » Read more about: பாடு மனமே பாடு!  »

வெண்பா

திருப்புகழைப் பாடு மனமே!

தித்திக்கும் தேன்மழைதான் தேடியின்பம் பெற்றிடுவீர்!
எத்திக்கும் காத்தருளும் ஏழ்பிறப்பும்! – முத்தாம்
திருப்புகழுக் கொப்பான தேதுமில்லை! வாழ்வில்
உருப்பெற்று  வாழும் உயிர்!

சிங்காரத் தண்டமிழின்  சீர்கண்டு மெய்சிலிர்க்கும்!

 » Read more about: திருப்புகழைப் பாடு மனமே!  »

வெண்பா

பாட்டுக்கோர் புலவன் பாரதி!

பாரதியார் போலிங்குப்  பாரினிலே  கண்டதில்லை
வீரத்தில் யாமறிந்த  விற்பன்னன்! – ஏரெடுத்து
இங்குளுதான் எம்மனத்தைத்  தங்கத் தமிழாலே!
பொங்கட்டும்   இன்பப் பொழில்!

போர்முனைக்குக் கத்திகொண்டு போனவரும் தோற்றிடுவார்
ஏர்முனைக்(கு)  ஈடான என்றுமவன்!

 » Read more about: பாட்டுக்கோர் புலவன் பாரதி!  »