சிலிர்த்துக் கொண்டே இருக்க
உன் புன்னகை தூரலை பொழிந்துவிடு
தவித்துக் கொண்டே இருக்க
தழுவிடும் கணங்கள் தந்துவிடு
ரசித்துக் கொண்டே இருக்க
காதல் ராகம் இசைத்துவிடு
கடந்து கொண்டே இருக்க
பயணத்தின் பாதையை
பகிர்ந்து விடு
மிளிர்ந்துகொண்டே இருக்க
உன் வண்ணம் என்னில் கலந்துவிடு
தொலைந்து கொண்டே இருக்க உன் சாயலை
என்னில் சேர்த்துவிடு
நெகிழ்ந்து கொண்டே இருக்க
நிழல் நொடிகளை என்னில் நிகழ்த்தி விடு
உயிர்த்துக் கொண்டே இருக்க
உயிரினில் மூச்சாய் கலந்துவிடு
இத்தனை கோரிக்கை உன்னிடம் வைத்தேன்
ஒன்றையேனும் நிகழ்த்திவிடு