தாய்நாடு எங்களை முடமாக்கி
எதோ ஒரு இறுதிக்கட்டத்தை
நோக்கி எங்களைத் தள்ளிக்
கொண்டே வருகின்றது …
பூமி எங்களை நசுக்குகிறது
சிறு விதையாயினும்
நாங்கள் அதில் புதைக்கப்பட்டு
உயிர்ப்பிக்கப்படலாம் …
எங்களின் கடைசி சிலரால்
கொல்லப்படப்போகும் சீவன்களின்
கடைசி நொடிகளை
அவர்கள்தம் முகத்தில் காண்கிறேன்
தாண்டியதும் இவ்வெல்லையை
எங்கே செல்லப் போகிறோம்?
ஆகாசத்தின் கடைசிக்கு
வந்திட்ட ஊர்க்குருவி கேட்கின்றது …
ஆகின் இவள் எங்களின் தாய்
சற்றேனும் கருணை கசிந்திருக்கலாம்
நாங்களோ நிஜக்கண்ணாடியை
கனவில் கல் வீட்டடிக்கும் சாதி
வாழ்வாயினும் தொலைந்தது
காப்பாற்றியது உயிரைமட்டுமே
அதற்கேனும் கடவுசீட்டு
கொடுங்களேன் …
கிடக்கும் ஆவியாய்
எங்கள் செங்குருதியில்
நர மாமிசத்தால்
பாட்டெழுதிகிறோம்
முடிந்ததும் ஜீவன்
தாவரங்கள் சயனிக்கும் இடத்தில்
தலைசாய்த்து படுக்கின்றோம்
பெயரற்ற கல்லறையாக!