மருதாம்புலத்தரசி மதுர கீதம் 1

பக்திப்பாடல் பல்லவி இன்ப வடிவாகி இசையில் நிறைவாகி மெய்யின் பொருளாகினாய்..அம்மா…! கன்னித் தமிழாகி காக்கும் கருமாரி சக்தி வடிவாகினாய்..அம்மா… ! மண்ணின் மகமாயி மதுரை மீனாட்சி மடியில் எனைத் தாங்குவாய்..அம்மா… ! கண்ணின் மணியாகி கருணை உருவாகி.. கேட்கும் வரமாகுவாய்..அம்மா….! … மருதாம்புலத்து அரசி.. வலிமை கொடுக்கும் தேவி நீயே….மனதால் நினைத்து உருக…அருளைத் தருவாய் தேவி தாயே… (இன்ப வடிவாகி…) சரணங்கள் இலுப்பைமரம் அமர்ந்தவளே..இயன்ற தெல்லாம் அருள்பவளே..! கருப்பையின் குறைகளைந்து..கதிசேர வைப்பவளே..! Read more

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை… ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை. எத்தனை வண்ணப் படங்களுக்கு மத்தியிலும் கருப்பு வெள்ளையில் தெரியும் படத்துக்கு தனியானதொரு சோபை உண்டு. பழமை போற்றும் கண்களுக்கு அது களிவிருந்து. Read more

என் காதல் ரோசா

‘‘தானேத் தன்னான்னே ஏய் தானேத் தன்னான்னே நல்லா தடம் பாத்து நடவு நடு தானேத் தன்னான்னே தை மாசம் அறுக்கனுமே தானேத் தன்னான்னே தாளம்போட்டு நடவு நடு தானேத் தன்னான்னே நல்லா தரை பாத்து வெளயனுமே தானேத் தன்னான்னே..!’’ என்று அழகாய் மெட்டெடுத்து, ராகம் போட்டு பாடிக் கொண்டே, முத்தழகி கட்டிய பாத்தியில் நாத்தை நட்டுக் கொண்டிருந்தாள். வேலை ஒரு பக்கம் இருக்க பாட்டும், பேச்சும் சுவராசியமாய் நடந்து கொண்டு Read more

தம்பி… 9

வாழ்வாயே மகிழ்வாக வாழ்த்திடவே பெரியோர்கள்
தாழ்வென்ற நிலையில்லை தளராமல் உழைத்திட்டால்
ஏழ்மையென்னும் நிலையில்லை ஏற்றத்தைப் பெறுவாயே
வீழ்வதெல்லாம் எழுவதற்கே வீறுகொண்டு எழுவாயே.

தம்பி… 8

ஏரோட்டம் இல்லையென்றால் ஏற்றமில்லை செல்வத்தில்
தேரோட்டம் ஓடாது தெம்மாங்கும் கேட்காது
காரோட்ட வாய்ப்பில்லை கஞ்சிக்கும் ஏமாற்றம்
நீரோட்டம் காத்திட்டால் நிச்சயமாய் நன்மையுண்டே.

வெய்யோனின் வேந்தன்

இராமாயணம் வாசித்தவர்கள் அதில் பல காண்டங்கள் இருப்பதை உணர்ந்திருப்பீர்… அது போல இந்த இராவண காவியத் தில் மூன்று காண்டங்கள் தமிழ்போல. த = தன்னிகரில்லா தமிழ்வேந்தனைப் பற்றி முதல் பகுதியிலிருந்து ஆரம்பிக்கின் றார் எழுத்தாளர் ஸ்ரீமதி. இராவணணைப் பற்றி இதுகாரம் பல புதினங்கள் வந்திருக்கின்றன குறிப்பாகச் சொன்னால் அசுரகாவியம் (வீழ்த்தப் பட்டவர்களின் வீர வரலாறு) அதையும் நான் வாசித்திருக்கிறேன். ஆனால் இக்காவியம் இராவணணைப் பற்றிய உண்மையான வரலாறாக நான் Read more

அந்த ஒரு நிலவு

அத்தனை எளிதாய் இல்லை இருந்தும் மிகவும் நேர்த்தியாகவே கையாண்டு கொண்டிருந்தாள் அந்த காலையை அரக்க பரக்க ஓடி பேருந்தை அடைந்தவளை மட்டுமே எதிர்நோக்கிக் கொண்டிருப்பதைப் போல அவள் வருகைக்கும் பேருந்திற்கும் சரியாக இருந்தது. காலையில் குறிப்பிட்ட நேரத் துக்கு முன்பே அனு அந்த ஆபிஸுக்கு வந்து விட்டாள். இன்று அவளுக்கு முக்கியமான நாள்.நேர்முகத் தேர்வுக்காக அவளை அழைத்திருந்தார்கள். ‘‘ஹாய், அனு எப்படி இருக்கீங்க?” பரிச்சயமான குரல் கேட்டு நிமிர்ந்தவள், அங்கு Read more

கீதாஞ்சலி

அரண்மனையும் தோரணமும் ஆடும் வாயில்
அணியணியாய் மணிவிளக்கம்‌ ஒளிரும் கோவில்
நிரல்நிரலாய் உன்னடியார் வந்து செல்லும்
நெரிசலிடைப் போற்றிசெயும் ஒலி முழக்கம்
கரைகாணாப் புகழ் வெளிச்சம் உனதேயாகக்
கனிவுடனே என்முகத்தைக் காண்பா யோநீ
தெருவினிலோர் மூலையிலே இசைக்கும் என்றன்
சிறுகுரலை என்னரசே கேட்பா யோநீ

ரெட்டைக் கிணறு

அந்திசாயும் வேளையில் சூரியன் மேற்கே மறைந்து கொண்டு இருந்தது. சாமியப்பன் அந்த பச்சை வயல்களுக்கு நடுவே அமைந்திருந்த கிணற்றை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். நீண்ட நாட்களுக்கு பிறகு விடுமுறையில் சொந்த ஊர் திரும்பி இருக்கிறான். ராணுவத்தில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் போனதே தெரியவில்லை. அவ்வப்போது சொந்த ஊர் வருவது சுகமான அனுபவம். ஒவ்வொரு முறை வரும்போதும் சவுரியூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கியவுடன் முதலில் அவனது கால்கள் வீட்டுக்குச் செல்லாமல் Read more

தம்பி… 7

தொடர் எண் 7. தலைப்பு : இன்சொல். ஊக்கமுடன் வாழ்ந்திடவே உற்றோரும் வாழ்த்திடவே நீக்கமற எந்நாளும் இன்சொற்கள் பேசிடுவாய் தாக்கிடுவார் வன்சொற்கள் தாங்கிக்கொள் நற்பண்பால் வாக்கினிலே மாறாமல் வாழ்ந்திடத்தான் கற்பாயே. கற்பாயே நல்நூல்கள் காப்பாயே பண்பாட்டைப் பற்றிடுவாய் சான்றோர்சொல் பாசத்தில் நல்லுறவாய். வற்றாத கல்வியினை வாழ்நாளில் பெற்றால்தான் சொற்சுவையில் வல்லோனாய் சொல்லாட்சிச் செய்திடலாம். செய்யென்றால் நற்செயல்கள் செய்கின்ற நல்தம்பி பொய்யில்லை உன்னிடத்தில் போற்றுகின்ற நல்லோர்கள் தொய்வில்லா உன்செயல்கள் தோல்வியினைக் காணவேண்டாம் பெய்கின்ற நல்மழைபோல் Read more