வாழ்க மகளீரே

குடும்பத்தின் குலமகளே கதம்பத்தின் திருமகளே பெண்ணியத்தின் நிறமகளே கண்ணியத்தின் நிறைமகளே தாய்மையின் கருமகளே வாய்மையின் உருமகளே பெண்மையின் பெருமகளே தண்மையின் உறைமகளே குழந்தையின் கருமகளே சலங்கையின் ஒலிமகளே கணவனின் மெய்மகளே கருத்தினில் மறைமகளே விழிகளின் கயல்மகளே விருந்துகளின் சுவைமகளே விம்பத்தின் நிலமகளே விருட்சத்தில் நிழல்மகளே உலகத்தின் மென்மலரே உயிர்களின் மூச்சிவளே வாழ்க வாழ்க மகளீரே வாழ்த்துகின்றேன் மனங்குளிர…

பெண்ணின்றி அமையாது உலகு

நீரின்றி அமையாது உலகு என்பதுபோல்          பெண்ணின்றி  அமையாது நல்வாழ்வு.! சக்தியின்றிச் சிவனும் இல்லை என்றுரைத்து          சிவனும் சொன்னார் நெற்றிக் கண் திறந்தே.! பத்துமாதம் சுமந்துகாக்கும் பொறுமை கொண்டு          பக்குவமாய் உணவை பண்போடும் அன்போடும் பாசத்தோடு குழைத்து படைக்கும் குணவதியாய்         பார்போற்றும் உன்னத படைப்பு பெண்ணாவாள்.! தங்க மகளாய் பிறந்து Read more

ஓடைநிலா

பிரான்சு நாட்டில் வாழும் தமிழ்நெஞ்சம் அமின் அவர்கள் அனுப்பிய புத்தக கட்டொன்று கிடைக்கப்பெற்று பிரித்தால் மிக அருமையான வடிவமைப்பில் ஒரு புத்தகம். சுவிஸ் நாட்டில் வசிக்கும் சகோதரி பைந்தமிழ்ச்செம்மல் நிர்மலா சிவராசலிங்கம் அவர்களது புத்தகம். மரபுக்கவிதை யாப்பதில் சிறந்து விளங்கும் சகோதரி அவர்களின் ஹைக்கூ கவிதைப் புத்தகம். அதுவும் இருமொழிக் கவிதைத் தொகுப்பு. ஆம் நூறு ஹைக்கூக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் இருமொழிகளிலும் நிரம்பிய புத்தகம். வடிவமைப்பே கவிதைகளைப் படிக்கத் Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 60

தொடர் 60 மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம். பண்பாடு. நாகரீகம். கலாச்சாரம் போன்றவற்றின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பாகும். மொழியின் பெருமை அல்லது வளர்ச்சி என்பது அம்மொழி சார்ந்த இலக்கியத்தின் வெளிப்பாடாகத்தான் அமையும். தமிழ் மொழி உலகளாவிய மொழிகளில் தனிச் சிறப்பு கொண்டதாகும்.. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மை வாய்ந்தது தமிழ் மொழி.. ஆனால் ஜப்பானிய மொழியோ சீன மொழியின் வளர்ப்பு பிள்ளை தான். அதன் இலக்கிய மரபும் கி.பி.யில் துவங்கிய Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 59

தொடர்  59 ஹைக்கூ உலகில் திருக்குறள் மற்றும் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கவிதை வடிவமாக இன்று திகழ்கிறது. அதுமட்டுமல்லாது.. இந்தியாவில் தமிழ் நாட்டில் பல மாணவர்கள் ஆய்வுக்கு கையாளும் கவிதை வடிவமாகவும்..பல கவிஞர்களின் முதல் கவிதைத் தொகுப்பு நூலாகவும் ஹைக்கூவே இன்று இருக்கிறது. இதெல்லாம் ஹைக்கூவின் குறுகிய கால வளர்ச்சியே ஆகும். ஹைக்கூ கவிதைகளை ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் பல புதிய சிந்தனைகளை Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 58

தொடர் 58 ஹைக்கூ கானகத்தில் மலர்ந்துள்ள காட்டுமலர் போன்றது. அந்த மலரை அங்கு உருவாக்கியது யார்..? மனிதனா..?! நிச்சயம் இல்லை. இயற்கை..! ஆம். ஹைக்கூவும் இயற்கையின் ஒரு அற்புத சிருஷ்டி எனலாம். எழுதுபவரை மட்டுமல்லாது..வாசகனையும் வசீகரிக்கும் ஆற்றல் ஹைக்கூவிற்கு உண்டு.. ஆம். இயற்கையின் அற்புதப் படைப்பு அந்த கானகமெங்கும் விரவியிருக்கும் மலர்கள், எத்தனை வண்ணங்கள்.. ஒவ்வொன்றிலும் ஏதோ ஒரு வித மணம். காலையில் மலர்ந்த மலர்கள் பலவித வர்ணங்களிலும், இரவினில் Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 57

தொடர்  57 வண்ணங்களைத் தேடியலையும் வண்ணத்துப்பூச்சிக்குத் தெரியாது தன் வண்ணம். கவிஞர். கழனியூரன் இந்த கவிதையை கவனியுங்கள். புழுவாய் பிறந்து, பூச்சியாய் மாறி, பறந்து திரியும் வண்ணத்துப் பூச்சி தன் மேனியில் பல வண்ணங்களைக் கொண்டிருந்தாலும், பல வண்ண மலர்களைத் தேடி அலையும். அதற்கு தன் மீதுள்ள வண்ணம் பற்றி அறிந்திட இயலுமா..?! கவிஞரின் பார்வை வண்ணத்துப் பூச்சியை மட்டுமா சார்ந்திருக்கிறது.. பல மனிதர்களின் குணாதிசயங்கள், இயல்புகள் இப்படித்தானே இருக்கின்றன. Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 56

தொடர் 56 நாம் காணப் போவது, ஹைக்கூ கவிதையில் மிக முக்கியமான விசயம். ஒரு ஹைக்கூ கவிதையில் எவையெல்லாம் இடம் பெறலாம். எவையெல்லாம் தவிர்க்க பட வேண்டும் என்பதை இந்த பகுதியில் காண்போம். முதலில் ஹைக்கூவில் இவை அவசியம் இடம்பெற வேண்டியவை என எவற்றையெல்லாம் சொல்லலாம் எனக் காண்போம். கவிதையில் கிகா எனப்படும் பருவகாலம் அவசியமாய் காட்டப்பட வேண்டும்..சில கவிதைகளில் தவிர்க்க வேண்டியதிருப்பின் தவறில்லை. பருவகாலம் என்பது நேரடியாய் பருவ Read more