தொடர் 60

மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம். பண்பாடு. நாகரீகம். கலாச்சாரம் போன்றவற்றின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பாகும்.

மொழியின் பெருமை அல்லது வளர்ச்சி என்பது அம்மொழி சார்ந்த இலக்கியத்தின் வெளிப்பாடாகத்தான் அமையும்.

தமிழ் மொழி உலகளாவிய மொழிகளில் தனிச் சிறப்பு கொண்டதாகும்..

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மை வாய்ந்தது தமிழ் மொழி.. ஆனால் ஜப்பானிய மொழியோ சீன மொழியின் வளர்ப்பு பிள்ளை தான்.

அதன் இலக்கிய மரபும் கி.பி.யில் துவங்கிய ஒன்று தான்.

ஹைக்கூ 15 ஆம் நூற்றாண்டில் மோரிடேகே..சோகன் போன்றோரால் துவங்கி 16 ஆம் நூற்றாண்டில் பாஷோ, இஸ்ஸா, பூசன்,ஷிகி போன்றோரால் வளர்த்தெடுக்கப்பட்டு இன்று, உலகமெங்கும் வளர்ந்து விரிந்து பரவிக் கிடக்கிறது.

இன்று.. உலகின் கவிஞர்கள் பலரால் நேசிக்கப்படும் ஒரு கவிவடிவம் ஹைக்கூ தான் என்பது அசைக்க முடியா உண்மை.

கவிஞனை மட்டுமின்றி வாசகனையும் தன்னோடு ஈர்த்துப் பயணிக்கும் படியான கவிவடிவமாக ஹைக்கூ திகழ்வதும்..அதன் எளிமையான வடிவ அமைப்பும், உள்ளதை உள்ளபடி சொல்லி நகரும் அதன் போக்கும் பலரையும் ஈர்த்துள்ளது என்பதே உண்மை.

இக்கட்டுரைகளின் வாயிலாக, அக்கவிதை வடிவின் பண்புகள், இயல்புகள் குறித்தும், உலகளாவிய கவிஞர்கள் சிலரின் கவிதைகளையும் கண்டோம்.

ஹைக்கூவை நன்கு நிதானித்து, உணர்ந்து, அனுபவித்து எழுதுங்கள்..

வலிந்து உண்மைக்கு புறம்பானவற்றை திணிக்க முயற்சிக்காதீர்கள்.

ஹைக்கூவின் பிதாமகன் பாஷோ அவர்கள் கூறியதையே மீண்டும் உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்.

ஒரு கவிதையை நீங்கள் உங்கள் வாழ்நாளில் மிகச் சிறப்பாக படைத்து விட்டால் நீங்கள் ஹைக்கூ கவிஞர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அப்படியெனில் அந்த ஒரு கவிதை எப்படி இருக்கவேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள இந்த கட்டுரைகள் உங்களுக்கு நல்லதொரு வழியைக் காட்டும் என்பதில் எனக்கு எந்தவொரு சந்தேகமும் இல்லை.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக வாரந்தோறும் மிகச்சிறப்பான முறையில் வரவேற்றும், பின்னூட்டமிட்டும் உற்சாகப் படுத்திய உங்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும்.. இக்கட்டுரையை எழுத என்னைக் கேட்டுக் கொண்ட சகோதரி ஜெயசுதா அமிர்தம் குழும நிர்வாகி அவர்களுக்கும்..இக்கட்டுரையைத் தொடர்ந்து தங்கள் குழுமங்களில் வெளியிட ஆதரவு வழங்கிய ஹைக்கூ படர் பார்வை, தமி்ழ் ஹைக்கூ கவிதைகள், ஒரு பட்டாம்பூச்சியும் சில ஹைக்கூக்களும், இலக்கியப் பூந்தோட்டம், இதயத் தளம், உலகத் தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம் போன்ற ஹைக்கூ குழுமங்களுக்கும்..

இதனை தொடர்ந்து இணையதளத்தில் வெளியிட்டு சிறப்பித்த நண்பர்கள் சிலருண்டு.  அதில் மிக முக்கியமானவர் தமிழ்நெஞ்சம் அமின் அவர்கள். அவரது தமிழ்நெஞ்சம் இணையத்தில் தொடர்ந்து கட்டுரையாக வெளியிட்டு சிறப்பித்தார். அவருக்கும் எனதினிய நன்றி.

இக்கட்டுரை முழுவடிவம் பெற எனக்கு உதவிய ஹைக்கூ கவிஞர்கள், கட்டுரையாளர்கள், இணையம், ஹைக்கூ கவிதை நூல்கள் அனைத்திற்கும் எனதினிய நன்றி.

அவ்வப்போது தட்டச்சு செய்கையில் ஏற்படும் பிழைகளை உடனே சுட்டிக் காட்டி திருத்திக் கொள்ள உதவிய நண்பர்கள் அன்பழகன் ஜி, வாபிரா வபி

ஆகியோருக்கும் எனதினிய நன்றி.

விரைவில், நூலாக்கம் பெறும் போது இன்னும் கூடுதலான சில விபரங்களையும் இதில் சேர்க்க எண்ணியுள்ளேன்.

நன்றி.. வணக்கம்.

நிறைவு

முன் பதிவு 59


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

அறிமுகம்

கவிஞரேறு வாணிதாசன்

வாணிதாசன் பிரபல தமிழ்க் கவிஞர். தலைசிறந்த தமிழ்க் கவிஞர்களில் ஒருவரும் பாவேந்தர் பாரதிதாசனின் மாணவருமான வாணிதாசன் நினைவு  தினமாக  ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 ல் கொண்டாடப்பட்டு வருகிறது.

புதுவை மாநிலத்தின் வில்வ நல்லூர் என அழைக்கப்பட்ட இன்றைய வில்லியனூரில் 22.

 » Read more about: கவிஞரேறு வாணிதாசன்  »

ஹைக்கூ

மலர்வனம் 8

ஹைக்கூ

ஷர்ஜிலா ஃபர்வின்
 1. மழைத்துளிகளை
  சுமந்து கொண்டிருக்கும்
  கார்காலச் சிலந்தி வலை.
 2. இலையுதிர்காலக் கிளை
  தண்டுகளெல்லாம் மின்னுகிறது
  வைகறைப் பனி.
 3. வானத்தில் நாற்று நட
  கால்களைப் கவ்விப் பிடிக்கும்
  சேற்று வயல்.
 » Read more about: மலர்வனம் 8  »

மின்னிதழ்

மலர்வனம் 7

ஹைக்கூ

வஃபீரா வஃபி

01.
தாவும் குரங்கு
நதியில் தலைமுழுகி எழும்
மரக்கிளை

02.
நண்பகல் வேளை
சக்கரங்களிடை சிக்கித் தவிக்கும்
வண்டி நிழல்

 03.

 » Read more about: மலர்வனம் 7  »