இலக்கு

நேர்வழிப் பாதைகள் திடுக்கிடும் திருப்பங்கள் பதறவைக்கும் பள்ளங்கள் மூச்சிரைக்கும் மேடுகள். ஆர்ப்பரிக்கும் ஆரவாரம் அசைவற்ற அமைதி கவிந்துவிட்ட இருள் கண் பறிக்கும் ஒளி. சுட்டெரிக்கும் வெயில் சூழ்ந்திருக்கும் மூடுபனி குவிந்துவிட்ட கும்பல் தவிக்கவிட்ட தனிமை. வீசியடிக்கும் சூறை தடைப்பட்ட தென்றல் நேர்மறையும் எதிர்மறையும் எங்கெங்கும் வழிநெடுகும் வாழ்க்கைப் பயணத்தில் வகுக்கப்பட்ட வரைமுறைகள்… மறைகளை மதித்துக் கொண்டு மனவழியை மாற்றிக் கொண்டு தொய்வின்றி கடந்துசென்றால் தொடும் இலக்கு தூரமில்லை!

அவலக் (குரல்) கதறல்

மியன்மார்… மியர்மாரின் மிஞ்சி கிடக்கும் மானிடம் நடுவில் பூத்துக்கிடக்கும் இந்த கதறல்… மழலையின் அழுகையை நிறுத்த அன்னை அவள் கொண்ட காட்சிதான் ஒழிந்திருப்பது அன்று, நயவஞ்சகம் கொண்ட மானிடம் செய்த சூழ்ச்சிதான் இன்று அவள் ஒழிந்தழுவது மனம் இல்லா மானிடமே பதில் தாரும்! பால் கொடுத்த மார்புகள் எங்கே ? பால் குடித்த மழலைகள் எங்கே.? இறைவன் என ஓடிய மானிடங்கள் கால்களின்றி காடுகள் தேடி ஓடிவிட்டார்களா இன்று?

மரபும் மாற்றமும்

ஆவி யுடற் கரண மனைத்து மொன்றாகித் தாவித் தமிழோடுத் தவிழ்ந்திருப்பேன் – பூவுலகில் மாற்றக் காட்டாறு மையற்றாங் கொண்டாலுஞ் சாற்றும் மரபுக்குண்டோ சா? வாழையடி வாழை நின்று வண்ணத் தமிழாடை கொண்டு வையமுள்ள வரைக்கும் வரும் மரபு – சட்ட வரம்புகளை மீறிவிட்டா லிழிவு. பாளைமடித் தேனை வென்று பல்சுவையிஞ் சாரமுண்டு பைந்தமிழிற் புதுமை ஒன்று வரவு – திட்டப் பாதையிலே மாற்றங் கொண்ட துறவு! மாற்ற மென்றாற் புது Read more

பாரத மாதாவின் எழுச்சி மகன்!

தாயின் கருவில் தாயகம் காக்க.. உதித்து எழுந்த தலைமகனே! தொப்புள் கொடி அறுத்து தேசியக் கொடி உன்னை இணைக்கும் என்று தாயின் கண்ணீர் சொன்னது புனித பூமியில் உதித்து மேலும் புனிதம் சேர்த்த புனிதன்… நீ! அன்னை கொதிவிட்ட நேர்வாக்கு அப்துல்கலாமின் தலைஎழுத்தை மட்டும் அல்ல இந்தியாவின் தலையெழுத்தை அன்றே நிருபித்தவள்… இந்தியா உச்சம் தொடும் என… விட்ட படிப்பை தொடரவிட்டது அக்காவின் கை வளையல் அடகுகடையில் தத்தளித்தது உந்தன் Read more

நீறு பூத்த நெருப்பு

ஏழை மாணவர்களுக்கு எழுத்தறிவித்த இறைவன்! இலவச மதிய உணவுத் திட்டத்தால் எங்களின் வயிற்றுப் பசியை மட்டுமல்ல அறிவுப்பசியையும் தந்தாயே… தென்னாட்டுக் காந்தியே… காமராசா ! பகுத்தறிவு பகலவனாய் பெண்களுக்கு சுயமரியாதை இயக்கம் கொடுத்து சமூக நீதிக்கு அடையாளம் கொடுத்தாயே வைக்கம் வீரனே தந்தைப் பெரியாரே…! இருமொழிச்சட்டம் கொணர்ந்து மொழி இலக்கோடு பயணம் தொடங்கி சென்னை மாகாணத்தை தமிழ்நாடென தலைநிமிரச் செய்தாயே அறிஞர் அண்ணாவே…! காட்டுப்பன்றிகள் குதறிய அவலமாய் இன்று கல்விகொள்கை Read more

சுதந்திரம்

செந்நிறக் குருதிதனை சீதனமாய் பெற்றன்று வெண்ணிறத்தோலுடையான் விட்டுசென்ற பசுமை நீ… பன்னிற மொழியுடையோர் பாரதநிறம் சேர்த்து கண்ணிறச் சக்கரம் சுழன்ற காண்போரின் முத்திரை நீ… மண் நிறக்கடை எல்லை மதிற்ச்சுவர் முன் நின்று பொன்னிற ஒளிதனிலே மின்னிடும் முச்சுடரே… அந்நிய நிறத்தோனிடம் அடிமை நிறம் இல்லையென உன் நிற ஒளி வீசும் ஒப்பில்லா முகவரியே… எம் தேச நிறமென்றும் எக்கு திக்கும் புகழாட உம் கோசக்குரல் வழியே உரக்கச்சொல் சுதந்திரமே…

அவன் என் மூத்த சகோதரன்

அவனை நான் அக்கா என விளிப்பது அவனுக்கு பிடிக்கும். அவன் என் மூத்த சகோதரன். கொஞ்சம் கொஞ்சமாக பெண்ணாகிக் கொண்டிருந்தான். படுக்கையில் விலகித்தெரிந்த அவன் கொலுசுக் கால்களை பார்த்துவிட்டு முதன்முதலில் அதிர்ச்சியானவன் நான்தான். சலவை செய்த உணர்ச்சிகளை அடுக்கி வைத்திருக்கும் எங்கள் வீட்டு அலமாரியில் அவனுக்கான பெண்ணுடை இல்லவே இல்லை. நான்தான் என்வீட்டின் கதவாக இருந்தேன். என்னைத் திறந்து கொண்டுதான் அவன் இறுதியாக வெளியேறிப் போனான். சக்தி சிலநேரம் தனித்திருக்கிறாள். Read more

நேற்று பெய்த மழையில்…

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த கவிதை மழை வெவ்வேறு காலங்களில் பெய்தாலும் என் இறந்த காலத்தைத்தான் ஈரமாக்கிவிட்டு போகிறது ஒற்றைக் குடை இருவர் பயணம் அனாதை சாலை சீதளக்காற்று மெல்லிய உரசல் பகல் இரவு புணர் பொழுது சொர்க்கம் பற்றிய சந்(தேகம்) தீர்ந்தது இன்றோடு!

மது குடிக்கும் உயிர்

மதுவுடைய பிடியினிலே மயங்குகிற அடிமையே! எதுகுடித்தால் இன்பமெனில் மதுகுடித்தால் இன்பமென்பாய்; மதுகுடிக்கும் உன்னுயிரை மயக்கத்திலே நீயிருப்பாய்; அதுகுடிப்பது உன்னுயிரை அடுத்தடுத்து உம்முறவை; இதுகுடித்து ஏப்பமிடும் எல்லையிலாத் துன்பம்தரும்; மதுகுடித்தப் போதையிலே மயங்குகிறப் பேதையிரே! சதிசெய்யும் சாத்தானாய் சந்ததிக்கே ஊறுசெய்யும், மதிமயக்கி உமையழித்து மானமதைக் கெடுத்துவிடும். மதுவரக்கன் கைபிடிக்க மனமதுவோ அதிலயிக்க, பதியாக வாழ்பவரைப் பாழ்படுத்த வந்ததுவே! விதிமுடிக்க வருமுன்னே விழித்துவிடு குடிமகனே! அதுவுன்னை முடிக்குமுன்னே அதனைநீ முடித்துவிடு.

பிராணவாயு நீ !

சுவாசிக்கும் காற்றில் கரியமிலவாயு நான், பிராணவாயு நீ! பருகும் நீரில் ஹைட்ரஜன் நான், ஆக்சிஜன் நீ! எரியும் விளக்கில் வெப்பம் நான், வெளிச்சம் நீ! மலரும் பூவில் மகரந்தம் நான், மதுவோ நீ! நெய்யும் ஆடையில் ஊடையாய் நான், உள்பாவு நீ! கதம்ப மாலையில் கனகாம்பரம் நான், கவின்மல்லி நீ! அணியும் நகையில் அரும்செம்பு நான் , ஆணிப்பொன் நீ! சுழலும் புவியில் சுற்றுவது நான், சூழ்வது நீ!