பருவ நினைவு

பக்கம் அமர்ந்த தோழமை
பார்த்துமகிழ்ந்த திரைப்படம்
மகிழ்ச்சியைப்பகிர்ந்தமாடிகள்
துக்கம் துடைத்து உலர்த்திய துண்டுகள்
பிறந்து வளர்ந்த அந்த பழையஊர்
நினைக்கும்பொதே சிலிர்க்கும்

பெண் மனம்

பிரசவத்தின் வேதனைகள்
அமுதென்று சுவைகாணும்
கற்பதனை பழி சொன்னால் அவ்வலியில்
உயிர் துறந்து நடை பிணமாய் 
வலம் வந்து
வெந்தாலும் பெண் பொன்னென்று
பழி மறவாது சமர் செய்து
வாகை சூடும் வலிமை
கொண்ட பெண் மனது!

மகளிர் விதைத்திடும் மாண்பு

மகளிர் – திரு
மணத்தின் பெயரால்
வேறில்லம் சென்றால்
காய்த்துக் கனியாவாள்
கணவனுடைய
கண்ணின் மணியாவாள்
இல்லற இலக்கணத்தின்
அணியாவாள்.

மகளிர் விதைத்திடும் மாண்பு

மாதர் தினமென்று போராடி யுகம்தாண்டி
கைபெற்றும் இக்கணமும் புதுமைகள்
செய்திடும் பதுமையாய் காணும் இன்னும் சில கண்கள் மீது
தீயை மூட்ட ஆளேயில்லை!

என் மூக்குத்தி தேவதைக்கு …

தன்னை ஒரு வானமாகத் திறந்து
எண்ணங்களை நட்சத்திரங்களாக விதைத்து
அந்த நிலாவைக் குடியேற்றும் அன்பு நடவடிக்கைதான்
அவனின் கடிதம்

” என் மூக்குத்தி தேவதைக்கு …

மனசுக்குள் சுமந்திருப்பேன்

நேசமுடன் ஒரு வார்த்தை
நேற்றே நீ சொல்லியிருந்தால்
வஞ்சிக் கொடியுன்னை
வாரியணைத்திருப்பேன்..

பாசமுடன் ஒரு பார்வை
பார்த்துச் சொல்லியிருந்தால்
பைங்கிளியே உன்னை
பூப்போல தாங்கியிருப்பேன்..