tn_4545556784ஒரு மெல்லிய நூலிழையின்
ஒரு நுனியில் முடிந்துவைத்த
என் கனவு, மறுபுறம் ஏற்கப்படாத
காரணத்தால் தாள்கின்றது!
ஒரு காலநொடியின் முடிவில்
நூலிழை அறுகவும்
தூரத்தே உன் நிழல் தெரியவும்
கனவது கலையவும்
சரியாக இருந்த நேரத்தில்,
இனிக்கின்ற நிழல் இழந்து
வலிக்கின்ற நிஜத்தால்
நான் ஏற்கப்படுகிறேன்!