குழந்தை மனசு குழந்தை மனசு குதூகளிக்கும்
குழந்தை பருவ நினைவுகளால்
ஆடிய தோட்டம் ஓடிய மைதானம்
பாடிய மரத்தடி வேண்டிய மசூதி
விழுந்த மண்உறங்கிய வீடு
துணிகள் உலர்த்திய தோட்டம்
தண்ணீர் ஊற்றிய செடிகள்
தாவிப்பிடித்த மரக்கிளைகள்
குடித்தநீர் குளித்த கடல்
சிரித்த எதிர்வீட்டுக்குழந்தை
மரித்த பக்கத்துவீட்டுத்தாத்தா
எரித்த தோட்டக்குப்பை
சைக்கிள் ஓட்டிப்பழகியதெருக்கள்
சாணிஒட்டிய செருப்புகள்
சட்டைமாட்டிய சுவர்கள் மழைக்காக
சாத்திவைத்த சன்னல்கள்
லெட்டர்கொடுத்தபோஸ்ட்மேன்
சுத்தம் செய்தை குப்பைஅள்ளுபவர்
கதவு ரிப்பேர்செய்த ஊழியர்
மருந்தடித்த ஒப்பத்தக்காரர்
படித்து வளர்ந்த அரசுப்பள்ளி
பாடம் எடுத்த ஆசிரியர்கள்
பக்கம் அமர்ந்த தோழமை
பார்த்துமகிழ்ந்த திரைப்படம்
மகிழ்ச்சியைப்பகிர்ந்தமாடிகள்
துக்கம் துடைத்து உலர்த்திய துண்டுகள்
பிறந்து வளர்ந்த அந்த பழையஊர்
நினைக்கும்பொதே சிலிர்க்கும்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.