நஸ்லின் ரிப்கா அன்சார்

கவிஞரும் வரலாற்றாய்வாளரும் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியருமான தந்தையின் அன்பில் வளர்க்கப்பட்ட நஸ்ரின் றிப்கா அன்சார் அம்பாறை மாவட்டத்தில் உள்ள வடக்கே கல்முனை என்னும் ஊராலும் கிழக்கே கடலாலும் மேற்கே வயலாலும் தெற்கே காரைதீவு எனும் ஊராலும் சூழப்பட்ட சாய்ந்தமருது இலங்கை எனும் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்.

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன்.

ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்…

வேரும் விழுதுமாய் தமிழ் ஆலமரங்கள்

மின்னிதழ் / நேர்காணல் தமிழ்நெஞ்சம் அமின் நேர்காணலில் – பா. பாவேந்தன் வணக்கம்! சிறந்த தமிழறிவும் ஆங்கிலப் புலமையும் அரசியல் கூர்நோக்கும் உடையவராய்த் தங்களைத் தமிழ்நெஞ்சம் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் தங்கள் நேர்காணலுக்குச் சில வினாக்களை முன்வைக்கிறேன். செப்டெம்பர் 2022 / 108 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும். தங்களை அறிமுகம் செய்துகொள்ளுங்கள். வணக்கம். மகிழ்ச்சி. Read more

வங்கியிலிருந்து வந்ததொரு கவிதைப்புயல்

மின்னிதழ் / நேர்காணல் தமிழ் படித்தவர்களைவிட தமிழ் ஆசிரியர்களைவிட மற்ற துறைகளில் உள்ளவர்களே தமிழ்க்கவிதை யாப்பதில் வல்லவர்களாக உள்ளனர். ஒரு தேசியமயமாக்கப் பட்ட வங்கியில் உயர்பதவியில் இருந்து இந்தியாவின் பல மாநிலங்களுக்குச் சென்று பணியாற்றி ஓய்வு பெற்றவுடன் தமிழ்க் கவிதை மேல் கொண்ட பற்றின் காரணமாக அதனை யாப்பதற்கான வழிமுறைகளைக் கற்றுத் தேர்ந்து தற்போது மாணவராக மட்டுமின்றி ஆசிரியராகவும் மிளிரும் ஒரு வங்கி அதிகாரி. பெரியார் கொள்கைகளில் இம்மியும் வழுவாத கொள்கைக் Read more

எனக்கு நானே போதிமரம்

மின்னிதழ் / நேர்காணல் ஒரு கருத்த ஒல்லியான தேகம்! அதனுள்ளே அணையாது நிற்பது தமிழ்த் தாகம்! எல்லாரும் வளமையைப் பாடினால் இவர் மட்டும் வறுமையைப் பாடுவார். தமிழ்க்கவிதைக்குழுமங்கள் அனைத்திலும் பங்கு பெற்று அசத்தும் தோழர்..ஆழ்ந்த தமிழறிவு அடக்கமே அணிகலனாய் வலம் வரும் நண்பர். சமீபத்தில் தனது தன்முனைக் கவிதைத் தொகுப்பான போன்சாய் மரங்கள் எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டவர். ஆம் கவிஞர் செல்வா ஆறுமுகம்தான் அந்தக் கவிஞர் இம்மாதம் தமிழ்நெஞ்சத்திற்காகத் தனது Read more

பாவலர் தமிழறிஞர் சிமா.இளங்கோ

மின்னிதழ் / நேர்காணல் மலேசியாவில் வாழ்ந்து வரும் 80 அகவை கண்ட முதுபெரும் பாவலர் தமிழறிஞர் சிமா.இளங்கோ ஐயா. மலேசிய அரசின் கவிதைநூல் போட்டியில் பரிசு பெற்றவர். மரபு புதிது இரண்டிலும் வல்லவர். இப்போதும் முகநூலில் துடிப்பாக இயங்கி வருகிறார். அவரிடம் நம் தமிழ்நெஞ்சம் இதழுக்காக நேர்காணல் கண்டோம். வாருங்கள் என்னோடு… – வெற்றிப்பேரொளி மே 2022 / 88 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் Read more

வாய்ப்புகள்தான் ஒரு படைப்பாளியை உருவாக்குகிறது

மின்னிதழ் / நேர்காணல் வணக்கம் நேர்காணல் :  பொன்மணிதாசன் தாங்கள் பன்முகவித்தகர். கவிஞர் எழுத்தாளர். பேச்சாளர். பாடகர். நடிகர். இத்தனையும் சிறப்பாக செய்து வருகிறீர்கள் பிரமிக்கும் வண்ணம் இது எப்படி சாத்தியம்? எதைச்செய்தாலும் அதில் ஒரு அர்ப் பணிப்பு உணர்வுடன் செய்தலும் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் அதற்கான தயாரிப்பும் இருப்பதாலே சாத்தியம் ஆகிறது… வாய்ப்புகள்தான் ஒரு படைப் பாளியை உருவாக்குகிறது. அந்தவகையில் எனக்கு வாய்ப்பளித்த நிலாமுற்றம், கவியுலகப் பூஞ்சோலை, சந்திரோதயம், அமுதசுரபி, Read more

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர்
கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.

வெண்பாவின் புனிதத்தைக் கெடுப்பது நானா?

மின்னிதழ் / நேர்காணல். ஏடி வரதராசன் என்பது தங்கள் பெயரா? புனைப்பெயரா? . எனது முழு பெயர் வரதராஜப்பெருமாள்… அதைச் சுருக்கி அழைப்பதற்கு இலகுவாக வரதராசன் என வைத்துக் கொண்டேன். ஏடி என்பது… அத்தியூர் எனது ஊர். தியாகராஜன் தந்தை பெயர். நடக்கப் போகும் பேட்டியைப் பற்றியும், பேட்டி எடுக்கும் என்னைப் பற்றியும் ஒவ்வொரு வெண்பா பாடுங்களேன்… . பார்காணப் பாவல் பலரிருந்தும் வெண்பாவின் சீர்காணும் இந்தச் சிறுபயலை – நேர்காண Read more