மின்னிதழ் / நேர்காணல்

வணக்கம்

நேர்காணல் :  பொன்மணிதாசன்


தாங்கள் பன்முகவித்தகர். கவிஞர் எழுத்தாளர். பேச்சாளர். பாடகர். நடிகர். இத்தனையும் சிறப்பாக செய்து வருகிறீர்கள் பிரமிக்கும் வண்ணம் இது எப்படி சாத்தியம்?

எதைச்செய்தாலும் அதில் ஒரு அர்ப் பணிப்பு உணர்வுடன் செய்தலும் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் அதற்கான தயாரிப்பும் இருப்பதாலே சாத்தியம் ஆகிறது…

வாய்ப்புகள்தான் ஒரு படைப் பாளியை உருவாக்குகிறது. அந்தவகையில் எனக்கு வாய்ப்பளித்த நிலாமுற்றம், கவியுலகப் பூஞ்சோலை, சந்திரோதயம், அமுதசுரபி, தென்சென்னைத் தமிழ்சங்கம் தஞ்சைத் தமிழ்சங்கம், பொற்கைப் பாண்டியனின் சங்கப்பலகை, படைப்பு, செந்தமிழ்ச்சாரல், தமிழ்ப்பட்டறை, சங்கத்தமிழ்பூங்கா ஸ்ரீகாந்தராஜாவின் நிகழ் மீடியா போன்ற குழுமங்களுக்கும் தமிழ்நெஞ்சம் இதழுக்கும் நன்றிகள் பல.:

ஏப்ரல் 2022 / 96 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்
கவியுலகப் பூஞ்சோலை நான்காம் ஆண்டு விழா மேடையில் கவிக்கோ துரை வசந்தராசன் தமிழ்நெஞ்சம் ஆசிரியர் அமின் ஆகியோருடன் கவிச்சிகரம் அமுதன்
கவிப்பேரரசு வைரமுத்துவோடு கவிச்சிகரம்
பொன்மணிதாசனுடன் கவிச்சிகரம்

தாங்கள் எழுதத்துவங்கிய முதல் பொழுதும் எழுத்தும் நினைவில் நிலவுகிறதா? அப்படியெனில் அதைப்பற்றி கொஞ்சம் தமிழ்நெஞ்சம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

நான் முதலில் எழுத்தொடங்கியது நாடகங்கள் தான். அதன்பின் தான் கவிதை சிறுகதை குறும்படம் ஓவியம் எல்லாம். ஆனால் முதல் முதலில் நான் எழுதி இயக்கி நடித்த நாடகம் தோல்வியில் முடிந்தது. அதன் பின் கடின உழைப்பால் தேசிய அளவில் விருது பெறும் அளவுக்கு படைக்க முடிந்ததற்குக்காரணம் அந்த முதல் தோல்வியே… அதில் கற்றுக்கொண்ட பாடம் என்னை புடம்போட்டது

இன்றும் நண்பர்கள் அதைச் சொல்லி கேலி செய்வார்கள். இன்று குறும்படத்துக்காக மாநிலவிருதும் தேசிய அளவில் விருதும் நாடகத்திற்காக தேசிய அளவில் விருதும் வாங்கியதற்குக்காரணம் முதலில் பெற்ற தோல்வியே….

கவிச்சிகரம் அந்த பட்டத்திற்கே உரிய உயரத்தில் உலாவரும் தாங்கள் இதுவரை படைத்த படைப்புகளில் தங்களையே பிரமிக்க வைத்த படைப்பு எது?

என்னுடைய ஒரு சிறுகதை கீரக்காரம்மா. அதை நான் முகநூலில் எழுதி வெளியிட்ட 30 நிமிடத்தில் அதை ஒருவர் யூத்டியூபில் வெளியிட்டார் தன் குரலில். என் பெயர் சொல்லாமலே… அதற்கு பார்வையாளர்கள் லட்சத்துக்குமேல். ஆனால் பலர் அந்தப்பதிவில் வந்து இது என்னுடைய சிறுகதை என்று பதிவிட்டார்கள் கண்டனமும் தெரிவித்தார்கள். பெயர் சொல்லாமைக்கு. பின் அவர் பணிந்து பெயருடன் வெளியிட்டார். அந்தக்கதை வாட்சாப்பில் ஆயிரக்கணக்கானவர்களால் பகிரப்பட்டு பின் எனக்கே வந்தது சிரிப்பைத் தந்தது. இன்னும் பல எனது படைப்புகள் என் பெயரில்லாமல் வாட்சாப்புகளில் உலா வருகின்றன.

தாங்கள் சிறுகதைகள் ஏராளமாக எழுதி வருகிறீர்கள். தொண்ணூறுக்குப் பின் சிறுகதைகளை வாசகர்கள் அவ்வளவாக படிப்பதில்லை என்றொரு கருத்து நிலவுகிறது இது உண்மைதானா? அப்படி இருக்கும் பட்சம் அதற்கான காரணம் என்று எதை சொல்வீர்கள்?

ஆம் அப்படி ஒரு காலம் இருந்தது உண்மைதான். ஆனால் முகநூலில் சிறு கதைகள் வந்தபின் நிலைமை மாறி வருகின்றது

சிறுகதைகள் எல்லாம் 6 – 7 பக்கங்களுக்குப் பெரியதாக இருந்ததும் அதைப் படிக்கும் ஆர்வம் குறைந்ததற்கு ஒரு காரணம். இப்போது அதிக பட்சமாக 3 – 4 க்குள் சிறுகதைகள் வந்து பெரிய வரவேற்ப்பைப் பெற்றுள்ளன. இப்பொழுது நூல்களாக வெளிவரும்போதும் வாங்கிப் படிக்கத் தொடங்கியுள்ளனர். முகநூலில் பெரும் வரவேற்பை சிறுகதைகள் பெறுகின்றன. இன்று பலர் சிறுகதைகள் எழுதத்தொடங்கியுள்ளனர்.

ஒரு சிறுகதைக்கான கரு எங்கும் கிடைக்கலாம். அப்படி கிடைக்கும் பட்சம் ஒரு ஆரம்ப எழுத்தாளன் சம்பவத்தை வைத்தோ, காட்சியை வைத்தோ கருவை உருவாக்க எளிய வழி என்று ஏதும் உள்ளதா?

எதைக்கதையாக்கலாம் என்பதை அனுபவத்தின் அடிப்படையில் தான் கற்றுக்கொள்ள இயலும். மற்றவர்களின் கதைகளைப் படித்து அவர்கள் எப்படிக் கையாளுகின்றார்கள் என்று தெரிந்துக் கொள்வதும் தன் சுற்றுப்புறத்தை உற்று நோக்கலும் ஒரு எழுத்தாளன் சிறந்த எழுத்தாளன் ஆவதற்கான வழி

பன்முகவித்தகராகிய நீங்கள். எதில் வெற்றியின் இலக்கை நிர்ணயித்து பயணிக்கிறீர்கள்?

வெற்றிதோல்விகளுக்கு அப்பால் படைத்தல் மற்றும் இன்றைய நிகழ்வை ஆவணப்படுத்தல் என்ற என் இலக்கைத் தான் நோக்கிப் பயணிக்கிறேன். அது வெற்றி தோல்வி என்பது காலத்தின் கைகளில்தான் உள்ளது. காலங்களைத் தாண்டி நிலைப்பதில்தான் ஒரு படைப்பு வெற்றி அடைகின்றது. நம் கடமை பயணித்தலே…

மேடையில் கம்பீரமான குரலோடு உலாவருவதைக் கண்டு நான் பலமுறை வியந்துள்ளேன். அது எல்லோருக்கும் சாத்தியமில்லை. தங்களுக்கு அந்த பாக்யம் எப்படி?

குரல் என்பது இயற்கை கொடுத்த வரம். ஆனால் அதைப் பயன்படுத்துவது பயிற்சியில் உள்ளது ஏற்ற இறக்கங்கள் மொழி உச்சரிப்பு நகைச்சுவை உணர்வு போன்றவை நம் பயிற்சியினால் வருபவை… அது எனக்குக்கிடைத்த நல்வரமாகவே கருதுகிறேன்

.

தஞ்சைத் தமிழ்மன்ற இரண்டாமாண்டு விழா மேடையில்
தென்சென்னை மக்கள் நல அறக்கட்டளை விழாமேடையில் கவிக்கோ ஆரூர் தமிழ்நாடன் அவர்களோடு கவிச்சிகரம்

முகநூலில் உலாவரும் பல்லாயிரக் கணக்கான படைப்பாளிகளில் தாங்களும் ஒருவர். முகநூல் மக்கள் வாழ்வை மேம் படுத்துகிறதா? சீரழிக்கிறதா? ஒரு நடுவரின் தீர்ப்புநிலையில் தங்களின் கருத்து என்ன?

எல்லா அறிவியல் கண்டுப்பிடிப்பு களும் நல்லவர் கரங்களில் கிடைக்கும் போது சமுதாயத்தை மேம்படுத்துகிறது. வீணர்களின் கரங்களில் கிடைக்கும்போது சீரழிக்கின்றது. இன்று முகநூல் இல்லை என்றால் என்னை யார் என்றே தெரிந் திருக்காது பலருக்கு. பல கவிஞர்கள் முகநூலினால் வளர்ந்தவர்களே… இன்று பலபடைப்பாளிகளை உலக அளவில் அறியச்செய்வது முகநூலே

இலக்கியம் மக்களுக்கானது அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும் இது தேவையில்லை என்று எதையாவது சொல்வீர்களா?

அதில் எந்த சந்தேகமும் இல்லை. இலக்கியம் என்றும் மக்களுக்கானதே. இது சிறந்த படைப்பு இது குப்பை என்று முடிவு செய்ய யாருக்கும் உரிமை இல்லை. அதைக் காலம் பார்த்துக்கொள்ளும்

குழுமங்கள் தரும் விருதுகளைப் பற்றிய தங்கள் அபிப்ராயம்?

அறிமுக நிலையில் உள்ள கவிஞர் களுக்கு குழுமங்கள் தரும் விருதுகள் ஊக்கத் தைத்தரும். பாராட்டுக்காகத்தானே பலர் ஏங்கிக் கிடக்கின்றனர். அதன் பின் அவர்கள் ஆர்வமுடன் எழுதத் தொடங்கு வார்கள். வளர்ச்சி பெறுவார்கள். எனவே குழுமங்கள் தரும் விருதுகள் தேவை தான்

தாங்கள் இதுவரை வெளியிட்ட நூல்களின் பட்டியல்?

வெளியிடப்பட்ட நூல்கள்.

கீரக்காரம்மா
கருப்பு
செல்லாயி
குட்டச்சி
பச்சசேலை
பொன்னுத்தாயி
அப்பத்தாவும் ஆன் ட்ராயிடு போனும்.

இவற்றில் பெரும்பான்மை படித்து ரசிப்புக்கும் பாராட்டுக்கும் உள்ளான நூல் எது?

எல்லா நூல்களுமே பாராட்டப் படுகின்றன

புத்தக வெளியீட்டு மூலம் தாங்கள் சந்தித்தது மகிழ்வா அல்லது …?

புத்தகவெளியீட்டின் மூலம் மனதிற்கு மகிழ்வு படைப்பாளியாய். தான் பெற்ற குழநதையைக் காணும் மகிழ்வு

நூல் வெளியிடுபவர்களுக்கு தாங்கள் கூறும் அறிவுறுத்தல் யாது?

நூல் வெளியீட்டாளர்களுக்கு நல்ல பதிப்பகம் பார்த்துவெளியிடுங்கள். எடுத்த எடுப்பில் லாபம் வரும் என்று எதிர்பார்க்காதீர்கள். நல்ல விமர்ச்சகளிடம் கொடுத்து விமர்சனத்தைப் பதிவிடுங்கள்.

தமிழ்நெஞ்சம் இதழ்பற்றிய தங்கள் கண்ணோட்டம்?

ஒவ்வொரு படைப்பாளிக்கும் தமிழ் நெஞ்சம் ஒரு வரப்பிரசாதம். நல்ல தரமான படைப்புகளை உலக அளவில் எடுத்துசெல்லும் ஓர் அரிய ஊடகம் தமிழ்நெஞ்சம். குழுமங்கள் அளவில் எழுதிக்கொண்டிருந்த பலரின் படைப்புகளை உலகத்தில் தமிழும் தமிழரும் இருக்குமிடமெல்லாம் கொண்டுசேர்க்கும் தமிழ்நெஞ்சத்தின் பணி மகத்தானது. அது மட்டுமல்ல பல விருதுகளையும் வழங்கி படைப்பாளிகளுக்குப் பெருமை சேர்க்கிறது. பலருடைய படைப்புகளை ஆவணப்படுத்தி இருக்கின்றது. முகநூலில் வரும் படைப்புகள் ஒருவிதத்தில் மின்னல் போன்று பளிச்சிட்டாலும் ஆவணமாகாது. அதுவே தமிழ்நெஞ்சம் போன்ற இதழ்களில் வரும்போது சிறந்த ஆவணமாக்கப்படுகின்றது. அதற்காகப் படைப்பாளிகள் அனைவரும் நன்றி செலுத்த வேண்டும்.


4 Comments

செல்வம் பெரியசாமி · ஏப்ரல் 1, 2022 at 18 h 29 min

தமிழ் நெஞ்சம் மின்னிதழ் சிறப்பு

Jayanthi Sundaram · ஏப்ரல் 2, 2022 at 6 h 07 min

மிகவும் அருமையான நேர்முகம். அவர் கூறிய பதில் அனைத்தும் உண்மை. புத்தகங்களில் எழுத முடியாதவர்களுக்கு முகநூலும், குழுமங்களும் உண்மையிலேயே வரப்பிரசாதம். ஆனால் அவர் கூறுவது போல் முகநூல் வந்ததும் புத்தகம் படிப்பது குறைந்துவிட்டது. 🌹🌹🌹👌👌👌

ரிஸ்வான் · ஏப்ரல் 3, 2022 at 11 h 01 min

அருமை..நல்ல படைப்புகள்..கவிச்சிகரம் அமுதனின் படைப்புகளை வாசித்து சுவைத்திருக்கிறேன் யதார்த்தமான எழுத்துநடை தெளிவான நதியோட்டம்..அவர் இன்னும் வாகைகள் சூடிட அன்புடன் நல்வாழ்த்துகள்..

எழுதுபவர்களுக்கு ஊக்கம் தந்து அவர்களின் படைப்புகளை உலகளவிற்கு கொண்டு சேர்க்கும்..
* தமிழ்நெஞ்சம் * மின்னிதழுக்கு மிக்க நன்றி..இன்னும் உங்களின் தமிழப் பணி வளர்ந்திட,சிறந்திட நல்வாழ்த்துகள்.

அன்புடன்
ரிஸ்வான்
writer & Poet
Teabreak kavithai

கணபதி இளங்கோ · ஏப்ரல் 10, 2022 at 10 h 49 min

உலக அளவில் வாழும் தமிழ் மக்களின் இலக்கிய தாகத்தை ஈடேற்றும் வகையிலும் அறிவு சார்ந்த செயல் பாடாகவும் தங்கள் பணி காணும் தோறும் உவகையளிக்கின்றது. மேன் மேலும் பணி சிறக்க நெஞ்சார்ந்த பாராட்டுகள் வாழ்த்துக்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்

I மின்னிதழ் I செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்

இத்திங்கள் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாளரை நேர்காணல் செய்யவிருக்கிறோம். பள்ளிக்கூடங்களின் தாளாளர், ஒரு எழுபதாண்டு காலத் தமிழ்மன்றத்தின் தலைவர், பன்னாட்டு அரிமா சங்கத்தில்  தமிழில் நோக்கத்தை மொழிந்த அரிமா ஆளுநர்,

 » Read more about: செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்  »

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

நேர்காணல்

சோழவந்தான் கவிச்சிங்கம்…

மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..