திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 18

பாடல் – 18 ஒருதலையான் வந்துறூஉ மூப்பும் புணர்ந்தார்க் கிருதலையு மின்னாப் பிரிவு – முருவினை யுள்ளுருக்கித் தின்னும் பெரும்பிணியு மிம்மூன்றுங் கள்வரி னஞ்சப் படும். (இ-ள்.) ஒருதலையான் – உறுதியாக, வந்துறூஉம் – வந்தடையும், மூப்பும் – கிழப்பருவமும்; புணர்ந்தார்க்கு – நட்பினருக்கு, இருதலையும் – (பிரியப்பட்டவரும் பிரிந்தவரும் ஆகிய) இரண்டிடத்தும், இன்னாப் பிரிவும் – துன்பத்தைத் தருகின்ற பிரிவும்; உருவினை – உடம்பை, உள் – உள்ளிடத்துள்ள Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 17

பாடல் – 17 மூப்பின்கண் நன்மைக் ககன்றானும் கற்புடையாள் பூப்பின்கண் சாராத் தலைமகனும் – வாய்ப்பகையுள் சொல்வென்றி வேண்டும் இலிங்கியும் இம்மூவர் கல்விப் புணைகைவிட் டார். (இ-ள்.) மூப்பின்கண் – மூப்பு வந்த இடத்தும் , நன்மைக்கு – துறவறத்துக்கு, அகன்றானும் – (அஞ்சி) நீங்கினவனும் கற்பு உடையாள் – கற்புடைய மனைவியை, பூப்பின்கண் பூத்து நீராடிய பின், சாரா – மருவாத, தலைமகனும் – கணவனும், வாய்ப் பகையுள் Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 16

பாடல் – 16 மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில்சீர்ப் பெண்ணினுட் கற்புடையாட் பெற்றானும் – உண்ணுநீர் கூவல் குறைவின்றித் தொட்டானும் இம்மூவர் சாவா உடம்பெய்தி னார். (இ-ள்.) மண்ணின்மேல் – மண்ணுலகத்தில், வான் – பெரிய, புகழ் – புகழை, நட்டானும் – நிலைநிறுத்தினவனும், பெண்ணினுள் – பெண்களுள், மாசுஇல் – குற்றமற்ற, சீர் – சிறப்புடைய கற்பு உடையாள் – கற்புடையவளை, பெற்றானும் – (மனைவியாகப்) பெற்ற கணவனும், Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 15

பாடல் – 15 பொய்வழங்கி வாழும் பொறியறையும் கைதிரிந்து தாழ்விடத்து நேர்கருதுந் தட்டையும் – ஊழினால ஓட்டி வினைநலம் பார்ப்பானும் இம்மூவா; நட்கப் படாஅ தவர். (இ-ள்.) பொய் – பொய்ச் சொற்களை, வழங்கி – பேசி, வாழும் – (அதனால் உயிர்) வாழ்கின்ற, பொறி அறையும் – திருவில்லாதவனும், கை – முறைமை, திரிந்து – வேறுபட்டு, தாழ்வு இடத்து – (ஒருவன்) தாழ்ந்த இடத்து, நேர் – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 14

பாடல் – 14 இழுக்கல் இயல்பிற் றிளமை பழித்தவை சொல்லுதல் வற்றாகும் பேதைமை – யாண்டும் செறுவொடு நிற்குஞ் சிறுமைஇம் மூன்றும் குறுகார் அறிவுடை யார். (இ-ள்.) இளமை – இளமைப் பருவம், இழுக்கல் – வழுவுதலை, இயல்பிற்று – இயல்பாகவுடையது; பேதைமை – அறியாமை, பழித்தவை – (அறிவுடையோரால்) விலக்கப்பட்டவைகளை; சொல்லுதல் – சொல்லுதலில், வற்று ஆகும் – வல்லதாம், சிறுமை – ஈனத்தன்மை, யாண்டும் – எக்காலத்தும் Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 13

பாடல் – 13 சீலம் அறிவான் இளங்கிளை சாலக் குடியோம்பல் வல்லான் அரசன் – வடுவின்றி மாண்ட குணத்தான் தவசியென் றிம்மூவர் யாண்டும் பெறற்கரி யார். (இ-ள்.) சீலம் – (பிறர்) குணத்தை, அறிவான் – அறிந்து நடக்கிறவன், இளம் கிளை – இளமை (தொட்டு வந்த) சுற்றத்தானாவான், சால – மிகவும், குடி – குடிகளை, ஓம்பல் – பேணுதலில், வல்லான் – வல்லவன், அரசன் – அரசனாவான், Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 12

பாடல் – 12 தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன் வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர் கேளாக வாழ்தல் இனிது. (இ-ள்.) தாள் ஆளன் என்பான் – முயற்சியை ஆளுதலுடையான் என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவன், கடன்படா – கடன் படாமல், வாழ்பவன் – வாழ்தலுடையவன், வேள் ஆளன் – உதவி யாளன், என்பான் – என்று சொல்லப்படுவோன், விருந்து – வந்த விருந்தினர், இருக்க – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 11

பாடல் – 11 விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும் வீழக் களியாதான் காவா துரையுந் – தெளியாதான் கூரையுள் பல்காலும் சேறலும் இம்மூன்றும் ஊரெல்லாம் நோவ துடைத்து. (இ-ள்.) விளியாதான் – (தன்னை) அழையாதவன், கூத்து ஆட்டு – கூத்தாட்டத்தை, காண்டலும் – (தான் சென்று) பார்ப்பதும், வீழ – (தளர்ந்து) விழும்படி, களியாதான் – மதுவுண்டு களியாதவனாயிருந்தும், காவாது – காவாமல், உரையும் – (வழுப்படச்) சொல்லுதலும், தெளியாதான் – Read more

கம்பன் கவிநயம்… தொடர் – 10

கம்பனின் கவிநயத்தில் உவமைகள் நாணித் தலைகுனிகின்றன… ஆம்… வியப்பாக இருக்கிறதா ? தமிழின் அமுதத்தைப் பருக இராமாயணக் காவியத்தை கம்பன் நமக்கு அளித்த கொடை என்றே கூற வேண்டும். கம்பனின் நயமிக்க வார்த்தைகளில் உவமைகளும் விலகிச் செல்கின்றன…. இளையபெருமாள் இலக்குவனால் மூக்கறுபட்டு அவமானம் தாங்காது இலங்கை நகர் புகும் சூர்ப்பனகை தனது அண்ணன் இராவணனின் காலடியில் வந்து வீழ்கிறாள். இந்த அவல நிலைக்கு யார் காரணம் ? என வினவும் Read more

கம்பன் கவிநயம்… தொடர் – 9

கம்பன் தனது இராமாயணக் காவியத்தில் நதிகள், ஆறுகள், கடல் போன்றவற்றின் எழில் தோற்றத்தையும், இராமன், இலக்குவன் சீதை ஆகியோர் கண்ட அந்த ஆற்றின் தன்மை, மேன்மை மற்றும் வளமை பற்றியும் தனது கவித்திறனால் அழகுற வடித்துள்ளார். நதிகளில் சிறந்தான சரயு நதியை பற்றிக் கூறும் போது நம் கண் முன்னே அந்த வளமையான கட்சிகள் விரிகின்றன. சரயு நதி புலவர் பாடும் புகழ் மிக்க ஆறாகும்.இமயமலையின் கண் தோன்றும் இந் Read more