கம்பன் கவிநயம்… தொடர் – 2

தம்பி இலக்குவனால் நிர்மாணிக்கப்பட்ட பர்ணசாலையின் வெளியில் இராமர் படுத்து ஓய்வில் இருக்கிறார். அந்த நேரத்தில் தனது கணவன் வித்யுத்சிகுவனைப் போரில் பறிகொடுத்து கைம்பெண்ணாகக் காட்டில் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் சூர்ப்பனகை அங்கே வருகிறாள். அரைகுறையாய் கண்களை மூடியும் திறந்தும் துயில் கொள்ளும் இராமனைக் காண்கிறாள். அவனது அழகில் மயங்கி தனது அரக்க உருவத்தை அழகிய உருவாக மாற்றிக் கொண்டு இராமனை நோக்கி நெருங்குகிறாள் … அவளது எழில் கொஞ்சும் மேனியழகு … அவளது நடை எப்படி இருந்ததது என்பதை கம்பன் நம் கண் முன்னே தனது கவிதை வரிகளால் அழகுபடக் கூறுகிறான் … பாருங்கள் …

” பல்லவ மனுங்கச் பஞ்சியொளிர் விஞ்சுகுளிர்
செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி
அஞ்சொலிள மஞ்சையென அன்னமென் மின்னும்
வஞ்சியென் நஞ்சமென வஞ்சமகள் வந்தாள் ”

அவள் ஒரு மயிலைப்போல் அலுங்காது அடியெடுத்து வைத்து மென்மையாய் வருகிறாள்.

[ மேலும்… ]

கம்பன் கவிநயம்… தொடர் – 1

‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ இது உயர்வு நவிற்சிக்காகக் சொல்லப்பட்டது என்று சிலர் கூறினாலும், அந்த அளவிற்கு கவி ஆற்றல் மிக்கவனாகக் கம்பன் விளங்கினான் என்பதே உண்மை. கவிச்சக்கரவர்த்தி என்று கம்பனைச் சொல்லுவது உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை. கம்பனின் கவித்திறத்திற்கும் உவமை நயத்திற்கும் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு சொற்களை எடுத்தாளும் திறத்திற்கும் பல்வேறு பாடல்களை உதாரணம் காட்டலாம். இதோ, பால காண்டம். எழுச்சிப் படலம். சிவதனுசை முறித்து இராமன் வெற்றி கொண்டான் Read more

ஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு

சூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான உலகாய் உருவெடுத்தது. இயற்கை மனிதனுக்குக் கிடைத்த அழகான கொடை ஆகும். இத்தனையும் இயற்கையிலிருந்து பெற்றுக் கொண்ட மனிதன், தன் முயற்சியைப் பயன்படுத்தி அழகான நவீன பூமியாக மாற்றியமைக்கின்றான். இப்பூமியைச் சிலர் ஆக்க நினைக்காது கொடிய ஆயுதங்கள் கொண்டு அழிக்க நினைக்கின்றார்கள். புதுமைகள் புதிய கண்டுபிடிப்புக்கள் உருவாக வேண்டுமானால், சிறப்பான Read more

வார்த்தை வன்மை

நாக்கு வன்மையானதுதான். இதனால் நாவின் உதவியோடு உருவாகி வெளிப்படும் வார்த்தை அதைவிட வன்மையானது. இதைக் குறித்து வள்ளுவர் தனது 129 வது குறட்பாவில் இவ்வாறு குறிப்பிடுகிறார். தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் இறாதே நாவினாற் சுட்ட வடு. அதாவது தீயினால் சுட்டப்புண் வெளியே வடு இருந்தாலும், உள்ளே ஆறிவிடும். இனால், நாவினால் பிறரை தீயச்சொல் கூறிச் சுடும் வடு என்றுமே ஆறாது. பேச்சாற்றல் இறைவன் மனிதனுக்கு கொடுத்த மிகப்பெரியப் பரிசு. மற்ற Read more

அடிப்படைக் கல்வி வாழ்வுக்கு அச்சாணி

Grund Schule Klauberg in Solingen Germany, Solingen  இன் ஆரம்பப் பாடசாலை தன் எண்ணங்களால் வரி தொடுக்கின்றது. நின்று நிமிர்ந்து புதுப் பொலிவுடன் எதிர்கால உலகை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நான் இன்று பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை எனப்படும் உடல் திருத்தச் சிகிச்சை செய்யப்பட்டு சோலிங்கன் நகரில் வீற்றிருக்கும் ஆரம்பப் பாடசாலை. எனது பெயர் அன்றும் இன்றும் கிளௌபேர்க் (Klauberg) ஆகும். என்னை இப்போது பார்க்கும் போது எனக்கே பெருமிதமாக இருக்கின்றது. Read more

மன்னிப்பு

“தவறு செய்வது மனித இயல்பு மன்னிப்பது இறை இயல்பு” மனிதராய் பிறந்த நாம் அனைவருமே தவறு செய்திருக்கின்றோம், செய்கின்றோம். தவறு செய்யாத மனிதன் இல்லை. இவ்வாறு தவறு செய்யும் நாம் மன்னிப்பு கேட்டிருக்கின்றோமா? அல்லது பிறர் செய்த தவறைத்தான் மன்னித்திருக்கின்றோமா? இது நிகழ்ந்திருக்குமா என்றால் சற்று சிரமம் தான். அப்படி நிகழ்ந்திருந்தால் தான் மகிழ்ச்சி நிலைத்திருக்குமே. தவறு செய்யும் பெரும்பாலானோர் மன்னிப்பு கேட்பதில்லை. மன்னிப்பு கேட்க யோசிக்கிறார்கள். காரணம், நான் Read more

சீ… தனம் புலம்பெயர்விலுமா!

பணமென்னும் பிசாசு ஆட்டுகின்ற ஆட்டம் மனமென்னும் பேதைக்குப் போடுகின்ற தூபம் விதை போட்டது யாரென்று புரியாத போதும் புலம்பெயந்தும் திருந்தாத  மந்தையர் கூட்டம் பெண்ணைப் பெற்றால், வயிற்றில் புளியைக் கரைக்கும் நிலைமை புலம்பெயர்விலுமா! பலரின் புலம்பல் என் பார்வையிலும் என் கருத்திலும் இங்கு பதிவாகின்றது. சீதனம் பெறும் போதே தனம் என்னும் செல்வம் சீ என்னும் வெறுப்புக்கு உள்ளாகின்றது. பெற்றோர் பெண்ணைப் பெற்று கல்வி, செல்வம், குடும்பப் பொறுப்பு, பொறுமை, Read more

இன்றைய உலகில் தடுமாறும் இளையோர்

19 வயது முதல் 35 வயது வரை உள்ள அனைவருமே இளையோர் தான். அது மட்டுமல்லாமல்; துடிப்புடன், பயம் என்பதே இல்லாமல் பல எதிர்ப்புகளையும் தாண்டி முழு ஆற்றலுடன் எந்த ஒரு செயலையும் செய்து முடிப்பவன் இளைஞன். இத்தகைய மனபலத்தையும் ஆற்றலையும் படைத்த இளைஞன் இன்று தன்னை அறியாமலேயே நாகரிகம், ஃபேஷன், வாழ்க்கை சூழ்நிலை போன்ற காரணங்களால் தன்னையே அழித்து, தன் வாழ்வையே கேள்விக்குறியான ஒன்றாக மாற்றி வருகின்றான். இளைஞன் Read more

பயணச் சுற்றுலா

நாம் அனைவருமே இறைவனால் படைக்கப்பட்டு இவ்வுலகிற்கு அனுப்பி வைக்கப்பட்ட சுற்றுலா பயணிகள். சுற்றுலா செல்லும் யாரும் சென்ற இடத்திலையே தங்கி விடுவது இல்லையே. எங்கிருந்து கிளம்பினோமோ அவ்விடத்திற்கே திரும்பிச் செல்வோம். அதுப்போலவே இவ்வுலக சுற்றுலா வாழ்க்கை முடிந்ததும் நம்மைப் படைத்து அனுப்பியவரிடமே திரும்பி செல்வோம். நாம் சுற்றுலா சென்ற இடத்தையும் அங்குள்ள பொருட்களையும் எப்படி உரிமைக் கொண்டாட முடியாதோ, அதுப்போல இவ்வுலக சுற்றுலா வாழ்க்கை முடித்து படைத்தவனிடம் திரும்பிச் செல்லும் Read more