நாக்கு வன்மையானதுதான். இதனால் நாவின் உதவியோடு உருவாகி வெளிப்படும் வார்த்தை அதைவிட வன்மையானது. இதைக் குறித்து வள்ளுவர் தனது 129 வது குறட்பாவில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் இறாதே
நாவினாற் சுட்ட வடு.

அதாவது தீயினால் சுட்டப்புண் வெளியே வடு இருந்தாலும், உள்ளே ஆறிவிடும். இனால், நாவினால் பிறரை தீயச்சொல் கூறிச் சுடும் வடு என்றுமே ஆறாது.

பேச்சாற்றல் இறைவன் மனிதனுக்கு கொடுத்த மிகப்பெரியப் பரிசு. மற்ற உயிர்களிடமிருந்து ஈந்த பேச்சாற்றல்தான் நம்மை வேறுபடுத்திக் காட்டுகிறது. மனிதனால் பேசாமல் வாழமுடியாது. மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு பேச்சுத்தான் வடிவம் கொடுக்கிறது. பேச்சு என்பது மிகப்பெரிய கலை. ஓருவர் படித்தவராய் இருந்தாலும் சரி, படிக்காதவராய் இருந்தாலும் சரி, பிறரைக் காயப்படுத்தாமல் அதேநேரத்தில் அவர்கள் மத்தியில் வளர்ச்சிக்கான நல்ல மாற்றத்தை ஏற்ப்படுத்தக்கூடிய பேச்சாயின் அவரின் பேச்சு சிறிவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும்.

ஓரு கிராமத்தின் வழியாக ஒரு முனிவர் சென்று கொண்டிருக்கையில் ஓரு பெண், முனிவரிடம் வந்து தன் வீட்டின் அருகில் உடல் நலமில்லாத குழந்தை இருப்பதாகவும், அந்தக் குழந்தையின் நோயினை தீர்த்து தரும்படியும் முனிவரிடம் மிகப்பணிவாக உதவிக்கேட்டாள். உடனே முனிவர் அந்தப் பெண்ணிடம் உடல் நலமில்லாத குழந்தையை அழைத்து வரும்படிக்கூறினார். அந்தப் பெண்ணும் உடல்நலமில்லாத அந்தக் குழந்தையை கொண்டு வந்தார். அந்த முனிவரும் அந்த குழந்தையை ஆசீர்வதிப்பது போன்று பிரார்த்தனை செய்தார். ஏத்தனையோ மருந்துகள் கொடுத்தும் குணமாகாத அந்தக் குழந்தைக்கு நீங்கள் பிரார்த்தனை செய்வதால் குணமாகிவிடுமா என்ன? என்று கூட்டத்திருந்த ஒருவன் கூச்சலிட்டான்.

உனக்கு அது குறித்து என்னத் தெரியும்? நீ அறிவில்லாத முட்டாள் என முனிவர் அந்த மனிதனைப் பார்த்துக் கூறினார். முனிவர் கூறிய வார்த்தைகளைக் கேட்டு கோபமடைந்த அந்த மனிதன் முனிவரை கடுஞ்சொற்களால் எப்படியாவது திட்டி அவரின் மனதை காயப்படுத்திவிட வேண்டும் என்று நினைத்தான்.

புன்முறுவலுடன் அவனருகில் வந்த முனிவர், நான் கூறிய வார்த்தைகளினால் நீ கோபமடைய முடியுமென்றால் நான் கூறும் நல்ல வார்த்தைகளால் சிலரை குணப்படுத்த முடியாது என்று ஏன் நினைக்கிறாய்? என்று கேட்டார். அவர் கூறியதைக் கேட்டப்பிறகுதான் அந்த மனிதனுக்கு வார்த்தைகளின் வமை புரிந்தது. ஓவ்வொருவரின் நாவிருந்தும் புறப்படும் வார்த்தை மற்றவருக்கு

  • மகிழ்ச்சியை தரலாம்.
  • மனதை உடைத்தெறியலாம்.
  • நம்பிக்கையை உடைத்தெறியலாம்.
  • ஆறாத வடுவை ஏற்படுத்தலாம்.
  • ஓருவரை சிந்தித்து வாழ வைக்கலாம்.
  • மற்றொருவரை சாகத் தூண்டலாம்.
  • ஓரு நொடிப்பொழுதில் நம்மை உயர்வடையவும் செய்யலாம்,
    தாழ்வடையவும் செய்யலாம்.

நல்லது பேசினால் நிச்சயம் நல்லது நடக்கும். நாம் பேசும் ஓவ்வொரு வார்த்தைக்கும் வமை உண்டு. அத்தகைய ஆற்றலும் சக்தியும் வாய்ந்த பேச்சு நம்மிடமிருந்து வெளிப்படும்போது அது பிறரை மகிழ்ச்சிப்படுத்துவதாகவும், எந்த வகையிலும் பிறரைக் காயப்படுத்தாததாகவும் அமைய வேண்டும். ஓருவரிடம் பேசும் போது சூழ்நிலைக்கு ஏற்றவகையில் சிந்தித்து நிதானமாக பேசவேண்டும்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

கட்டுரை

ஒரு பரபரப்பு செய்தி…

செய்திக்காகப் பரபரப்பு அடைந்த காலம் சென்றுவிட்டது. செய்தியால் பரபரப்பு அடைகிற காலம் வந்துவிட்டது. ஒரு தகவல் புதுமையானதாகவும், தேவையானதாகவும், இருக்கும் போதுதான் அது மக்களிடையே விழிப்புனார்வு கொடுப்பதாக மாறுகிறது. மக்களை மாற்றுகிறது. ஒரு செய்தி தரும் தாக்கத்தை பொருத்து ஏராளமானவர்கள் அஜாக்கிரதை நிலையில் இருநது  தங்களைப் ஜாக்கிரதை நிலைக்குப் பழக்கப்படுத்தி கொள்கிறார்கள்.

 » Read more about: ஒரு பரபரப்பு செய்தி…  »

கட்டுரை

அர்த்தமுள்ளது வாழ்க்கை

வாழ்க்கை பலருக்கு போராட்டமான ஒன்று. அதே வாழ்க்கை தான் பலருக்கு மிகுந்த மகிழ்வை தரும் ஒன்றாகவும் இருக்கிறது. அவரவர் கண்ணோட்டத்தை வைத்தே அவரவரின் வாழ்வு மதிப்பீடு செய்யப்பட்டு அளக்கப்படுகிறது என்றால் அது மிகை இல்லை என்றே சொல்லி விடலாம்.

 » Read more about: அர்த்தமுள்ளது வாழ்க்கை  »

கட்டுரை

மன்னிப்பு

“தவறு செய்வது மனித இயல்பு
மன்னிப்பது இறை இயல்பு”

மனிதராய் பிறந்த நாம் அனைவருமே தவறு செய்திருக்கின்றோம், செய்கின்றோம். தவறு செய்யாத மனிதன் இல்லை. இவ்வாறு தவறு செய்யும் நாம் மன்னிப்பு கேட்டிருக்கின்றோமா?

 » Read more about: மன்னிப்பு  »