“தவறு செய்வது மனித இயல்பு
மன்னிப்பது இறை இயல்பு”

மனிதராய் பிறந்த நாம் அனைவருமே தவறு செய்திருக்கின்றோம், செய்கின்றோம். தவறு செய்யாத மனிதன் இல்லை. இவ்வாறு தவறு செய்யும் நாம் மன்னிப்பு கேட்டிருக்கின்றோமா? அல்லது பிறர் செய்த தவறைத்தான் மன்னித்திருக்கின்றோமா? இது நிகழ்ந்திருக்குமா என்றால் சற்று சிரமம் தான். அப்படி நிகழ்ந்திருந்தால் தான் மகிழ்ச்சி நிலைத்திருக்குமே.

தவறு செய்யும் பெரும்பாலானோர் மன்னிப்பு கேட்பதில்லை. மன்னிப்பு கேட்க யோசிக்கிறார்கள். காரணம், நான் பிரச்சனைக்கு காரணம் இல்லையே, பிரச்சனையை நான் ஆரம்பிக்கவில்லையே, அதனால் நான் மன்னிப்பு கேட்கமாட்டேன். வேண்டுமானால் பிரச்சனையை ஆரம்பித்த அவன் (ள்) என்னிடம் மன்னிப்பு கேட்கட்டும் என்ற ஈகோ மனம் படைத்தவர்களாய் இருப்பதே.

பிரச்சனையை யார் ஆரம்பித்தால் என்ன? கணவன், மனைவி, தாய், தந்தை, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, நண்பன் என உறவுகள் எப்படிப்பட்டதாய் இருந்தாலும் அவர்களிடையே இருக்கும் உறவு உண்மையானதாய் இருந்தால், அந்த உறவை அவர்கள் மதிக்கிறார்கள் எனில் தவறு யார் பக்கம் இருந்தாலும் மன்னிப்பு கேட்கவும், மன்னிக்கவும் தயங்கமாட்டார்கள். அந்த உறவு மீண்டும் நீடிக்கும்.

ஆனால், ஒரு சிலர் தான் செய்த தவறுக்காக மன்னிப்புக் கேட்டுவிட்டு மீண்டும் அந்த தவறை செய்யத் துணிவார்கள், செய்வார்கள். இதனால் அவர்களிடையே இருக்கும் நம்பிக்கை உடைக்கப்படுகிறது. உறவும் பாதிக்கப்படுகிறது.

மன்னிப்பு என்பது உறவில் ஏற்பட்ட விரிசலை இணைக்கும் பாலமாக அமைகிறது. அதே நேரத்தில் அவர்களிடையே இருக்கும் நம்பிக்கையும் அதிகரிக்கிறது. மன்னிப்புக் கேட்பதன் வழியாகவும், மன்னிப்பதன் வழியாகவும் அவர்களிடையே இருக்கும் பிரச்சனை கலந்தாலோசிக்கப்பட்டு தீர்க்கப்படுகிறது.

மன்னிப்புக் கேட்காமல் மன்னிக்காமல் இருப்பதால் அந்தப் பிரச்சனை மீண்டும் மீண்டும் அவர்கள் வாழ்வில் பெரியத் தாக்கங்களை ஏற்படுத்தி அவர்களின் உறவில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தும்.

“பிரச்சனை என்பது உறவு வாயிலைப் பூட்டும் சாவி, மன்னிப்பு என்பது பிரச்சனையால் பூட்டப்பட்ட உறவு வாயிலைத் திறக்கும் சாவி”.

ஒருமுறை சாவியைப் பார்த்து சுத்தியல் கேட்டது, நான் உன்னை விட வலிமையானவனாக இருக்கிறேன். ஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க நான் மிகவும் சிரமம்படுகிறேன். ஆனால் நீ சீக்கிரம் திறந்துவிடுகிறாயே! அது எப்படி? என்று. அதற்கு சாவி சொன்னது, நீ என்னைவிட பலசாலிதான். அதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். பூட்டைதிறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய். ஆனால் நான் பூட்டின் இதயத்தை தொடுகிறேன் என்றதாம்.

ஒருவன் செய்த தவறுக்காக அவனை பழிவாங்குவதனாலோ, தண்டிக்கப்படுவதாலோ அந்தத்தவறிலிருந்து அவனை திருத்த இயலாது. மன்னிப்பு என்ற ஒன்று மட்டுமே அவன் உள்ள உணர்வைத் தூண்டி அந்தத் தவறிலிருந்து திருந்தி வாழ வைக்கும்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

பகிர்தல்

சமகால கவிஞர்கள்

தமிழ்நெஞ்சம் பேசுகிறது

வணக்கம்

எங்களுடைய விருப்பமெல்லாம் உலகத்தமிழ் இளம் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்து, உலகத் தமிழர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்வதே ஆகும்.

 » Read more about: சமகால கவிஞர்கள்  »

நூல்கள் அறிமுகம்

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது.

 » Read more about: பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!  »