ஹைக்கூ ஓர் அறிமுகம் – 20

தொடர் 20 ஹைக்கூவை எழுதும் போது ஒவ்வொரு அடிகளையும் முற்றுப்பெற்ற அடிகளாக நிறைவு செய்வதா ? அல்லது தொடர் அடியாக அமைப்பதா ? இரண்டில் எது சிறந்தது ? பொதுவில்… முற்றுப் பெற்ற அடியாக நிறைவு செய்வதே சிறப்பாகும்.. சமயத்தில் தொடர் அடியாக அமைய நேரிடுவதும் உண்டு. அதனை பெரும்பாலும் முற்றுப்பெற்ற அடியாக மாற்றிட முயலுங்கள். தவறும் பட்சத்தில் இருக்கட்டும். ஆனால் முதல் இரண்டு அடிகளில் முதல் அடியானது தொடர் அடியாக நீளும் போது Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 19

தொடர் 19 ஈற்றடி சிறப்பு   ஹைக்கூவில் திருப்பம் தரும் ஈற்றடியின் முக்கியத்துவம் குறித்து ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.. ஈற்றடியை திருப்பமாகவோ,முரணாகவோ அமைக்கலாம். ஆனால் முதலிரண்டு அடிகளுக்கு முற்றிலும் சம்பந்தமின்றி முரண்பட்டு அமைக்க கூடாது. இதை பலமுறை வலியுறுத்துகிறோம்.. ஏனெனில் அவ்வாறு எழுதும் போது அது ஹைக்கூவின் அழகை கெடுத்து விடும். இதை கவனியுங்கள். கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு கவிஞர் எழுதி நான் படித்த ஒரு கவிதை இது.. அப்பாவின் Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 18

தொடர் 18 ஹைக்கூ என்பது வாசித்ததும் கடந்து போவதல்ல. வாசகனை கடந்து செல்ல விடாமல் சட்டென நிறுத்தி வசப்படுத்துவதே நல்ல ஹைக்கூ. அத்தகைய ஒரு ஹைக்கூவானது எக்காலத்திலும் எழுதப்படலாம். நிகழ்காலத்தில் தான் எழுதப்பட வேண்டுமென கட்டாயப்படுத்துவது தவறு. ஹைக்கூவில் பிரதானமாக கடைபிடிக்க வேண்டியவை என.. ஹைக்கூ வரலாற்று ஆசிரியரும், தொகுப்பாளருமான ஆர்.எச்.பிளித் (R.H.Blyth) ஹைக்கூவிற்கென எட்டு குறிப்புகளைத் தருகிறார். நகைச்சுவை சுருக்கம் ஜப்பானிய மொழிஇயல்பு இரட்டைக்கிளவி ஹைக்கூ யாப்பு கிரெஜி Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 17

தொடர் 17 ஹைக்கூவில்… இறந்தகாலம்.   ஹைக்கூ மட்டுமல்லாது… அனைத்து வகை கவிதைகளுமே… கண்டு உணர்ந்த அல்லது பார்த்து ரசித்த அனுபவத்தின் வெளிப்பாடே.. ஹைக்கூவினை நிகழ்காலத்தில் தான் எழுத வேண்டுமென்ற விதிமுறையை கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களோ , ஹைக்கூவினை ஆய்வு செய்து ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த கவிஞர். நிர்மலா சுரேஷ் அவர்களோ எங்கும் குறிப்பிடவில்லை. இதில் ஒன்றை தெரிந்து கொள்ள முடிவது என்ன வென்றால் 1990க்கு முன்னதாக தமிழ் ஹைக்கூ Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 16

தொடர் 16 ஹைக்கூவில் ஜென். சென்ற அத்தியாயத்திலேயே கவனித்து விட்டோம். ஜென் என்பது மதமல்ல. நீ உன்னை ஆழ்நிலை வழியாகத் தேடி அடைவதே. ஜென்… சுருக்கமாய், வாழ்வியலின் உள்ளார்ந்த ஈடுபாடே ஜென். ஜென் கூற்றுப்படி..இந்த உலகம் மனிதனுக்கானது மட்டுமல்ல. வாழும் அனைத்து உயிர்களுக்குமானது. சிற்றுயிர்களையும் நேசிக்கக் கற்றுத்தருவதே ஜென். வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன். என்ற வள்ளலார் கூட ஒருவகையில் ஜென் துறவி எனக் கூறினால் தவறி்ல்லை. தாவரங்களோடு Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 15

தொடர் 15 ஹைக்கூவில் ஜென்.. ஜென் என்பது தனித்த மதமோ, தத்துவமோ இல்லை. மொட்டையடித்து, மந்திரம் ஜெபித்து, பிரம்மசர்யத்தை பின்பற்றி…  புத்தரை விமர்சிக்காமல், புத்தமதத்திற்கு கட்டுப்பட்டு நடக்கும் சத்திய பிரமாணத்தை ஜென் செய்வதில்லை. மாறாக தன் குருவின் முகத்தில் குத்துவிடுவதையும், ஏன் உதைப்பதையும் கூட சிநேக இயல்பாகக் கொண்டது. மலையுச்சி ஒன்றில் KEI ZEN JOKIN என்பவர் ஜென் பௌத்தம், சிண்டோயிசம், தாவோயிசம், கன்பியூஸனிச சாரங்கள் (SHUGENDO) இவற்றினை தொகுத்தும், Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 14

தொடர் 14 ஹைக்கூவில் தனித்த வார்த்தைகள் ஹைக்கூ எழுதும் போது தனித்த வார்த்தைகளை மட்டும் கொண்டு ஹைக்கூ எழுதக் கூடாது எனச்சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் தனித்த வார்த்தைகளை மட்டும் கொண்டு கவிதை எழுதலாம். தவறில்லை. இது குறித்து எந்த விதியும் வகுக்கப் படவுமில்லை. எங்கும் சொல்லப்படவுமில்லை. இணைப்பு வார்த்தைகள் சமயத்தில் சிந்தனையை விரிவு படுத்தவும். பல கோணத்தில் சிந்திக்க வைப்பதை போலவே தனித்த சொற்களும் சமயத்தில் வலிமையான கருத்தினைச் சொல்லும். Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 13

தொடர் 13 ஹைக்கூவில் தன்மைப் பாங்கினைத் தவிர்க்கவும்.. ஹைக்கூவின் பண்புகளை குறித்து பேசும் போது கவிஞர். நிர்மலா சுரேஷ் அவர்கள் தனது ஆய்வுக் கட்டுரையில் இதனை தெரியப்படுத்தி உள்ளார். சில மாதங்களுக்கு முன் ஒரு பேருந்து பயணத்தின் போது முகநூலை பார்த்துக் கொண்டிருந்தேன். அது ஒரு ஹைக்கூ போட்டி. அதில் ஹைக்கூவின் விதிமுறைகள் சொல்லப்பட்டிருந்தன. ஹைக்கூவின் விதிகள் பலவோடு மேற்சொன்ன விதிகளும் இடம் பெற்று இருந்தது. பின்னூட்டத்தில் இதை கவனித்த Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 12

தொடர் 12 ஹைக்கூவில் கற்பனையை தவிருங்கள் என்கிறார்கள். கவிதைக்கு அழகே கற்பனை எனும் போது ஹைக்கூவில் ஏன் இதனை தவிர்க்க சொன்னார்கள்.. நாம் இதனை அறிந்து கொள்ளுமுன்.. ஹைக்கூ துவக்கத்தில் ரென்கா எனும் கூட்டுப் பாடலின் துவக்கக் கவிதையாக ஹொக்கு என்றே அழைக்கப்பட்டது.ரென்கா அந்தாதி கவிதை போன்று ஒருவர் விட்ட இடத்திலிருந்து ஒருவர் துவங்கி பாடுவார்கள். அதில் துவக்கப் பாடல் மட்டுமே ஹொக்கு.. ஏனையவை நாட்டு நடப்பை.. . உள்ள உணர்வை… Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 11

தொடர் 11 கவிதைக்கு அழகு கற்பனை. கற்பனையே கவிதையை சிறக்கச் செய்கிறது. கவிஞன் தனது கற்பனைத் திறத்தினை கவிதையில் ஏற்றிக் கூறும் போது… வாசகனும் அந்த அழகிய உத்தியில் மெய்மறந்து ரசிக்கிறான். ஒன்றை மற்றொன்றில் ஏற்றிக் கூறுவதோ, ஒன்றின் அழகை பன்மடங்கு உயர்த்திக் கூறுவதோ கற்பனையின் உச்சமாகிறது. ஆனால் ஹைக்கூவில் கற்பனைக்கு இடமில்லை என்கிறோம். ஆனாலும் துவக்கத்தில் ஹைக்கூவிலும் கற்பனை இல்லாமல் இல்லை. இந்த கவிதையை கவனியுங்கள்.. நிலவிற்கு ஒரு கைப்பிடி Read more