தொடர் 17

ஹைக்கூவில்… இறந்தகாலம்.

 

ஹைக்கூ மட்டுமல்லாது… அனைத்து வகை கவிதைகளுமே… கண்டு உணர்ந்த அல்லது பார்த்து ரசித்த அனுபவத்தின் வெளிப்பாடே..

ஹைக்கூவினை நிகழ்காலத்தில் தான் எழுத வேண்டுமென்ற விதிமுறையை கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களோ , ஹைக்கூவினை ஆய்வு செய்து ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த கவிஞர். நிர்மலா சுரேஷ் அவர்களோ எங்கும் குறிப்பிடவில்லை. இதில் ஒன்றை தெரிந்து கொள்ள முடிவது என்ன வென்றால் 1990க்கு முன்னதாக தமிழ் ஹைக்கூ கவிஞரிடையே நிகழ்காலத்தில் எழுதப்பட வேண்டுமென்ற கூற்று வலியுறுத்தப்பட வில்லை என்பது உறுதியாகிறது.

சிறந்த கதாசிரியரும், எழுத்தாளருமான சுஜாதா அவ்வப்போது ஆனந்தவிகடன், கணையாழி போன்ற இதழ்களில் ஹைக்கூவைப் பற்றி கட்டுரை எழுதுவார்.

அவ்வாறு எழுதப்பட்ட ஒரு கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார்.

ஜப்பானில் ஹைக்கூவை கடைபிடிக்கும் மரபு Observed Irony என்பது. அதன் பொருள் “பார்த்த” என்ற அர்த்தம் தான்.

விகடனில் எழுதும் போதும் இதையே வலியுறுத்திய சுஜாதா அவர்கள்..

It has to be Observed in Reality or if it is your Imagination the presentation should make it sound like an Observed reality.. என்றும் ஹைக்கூ Observed irony என்ற வரைமுறைக்கு உட்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இறந்தகாலத்தில் எழுதப்பட்ட ஜப்பானிய கவிதைகள் பலவுண்டு. கவனியுங்கள்…

சிதைந்த மாளிகை
தளிர்விடும் மரம்
போரின் முடிவில்.

  • ஷிகி.

பெட்டிக்கு வந்த பின்
எல்லாக் காய்களும் சமம்தான்.
சதுரங்கக் காய்கள்.

  • இஸ்ஸா.

இலைகள் உதிர்ந்தன
தெளிவுநீர் உலர்ந்த பாதை
இங்கும்..அங்கும்.

  • யோஸோ பூஸன்

விருந்தினர்கள் கூட
மறந்து விட்ட
மலையடி கிராமம்.

  • பாஷோ

நள்ளிரவில்
தூரத்தில் ஒரு கதவு
இழுத்து சாத்தப்பட்டது.

  • ஒஸாகி ஹோஸாய்

மேற்கண்ட கவிதைகளில் கவனித்தால் தெரியும். .”பார்த்த” ஒரு விசயத்தையே கவிஞர்கள் கவிதையாக்கி இருக்கிறார்கள் என புரிந்து கொள்ளலாம். ஹைக்கூவில் ஜென் கலந்து எழுதும் போது அது நிகழ்காலத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்பதற்காகவே “நிகழ்காலத்தில்” எழுதப்பட்டது. எனவே நிகழ்காலத்தில் தான் எழுதப்பட வேண்டுமென்பதை எங்கும் எவரும் வலியுறுத்தவில்லை. அது 1990 க்கு பிறகு வந்த நடைமுறையென தெரிகிறது.

இது குறித்த ஒரு விவாதத்தின் போது முனைவர் கவிஞர் புகழேந்தி அவர்கள் “உடனடி இறந்தகாலத்தில்” (Immediate Past) கவிதைகளை எழுதலாம், தவறில்லை என்றார். அவர் பலமொழி வித்தகர். ஹைக்கூவை தமிழ், கன்னடம், ஆங்கிலம் என பல மொழிகளில் மொழிபெயர்த்தும் எழுதியும் வருபவர்.

பொதுவில்… ஒரு படைப்பானது… பார்த்த விசயத்தையோ, அல்லது நம்மை நேரடியாய் பங்குபெறச் செய்து பாதித்த விசயத்தையோ உள்ளடக்கியே பிறப்பெடுக்கும். கவிதைகள் காலங்களை கடந்து நிற்பவை. அதனை ஒரு காலத்தில் கட்டுப்படுத்துவதும் தவறே. தமிழ் கவிதைகளிலும், ஹைக்கூ படைப்பாளர்களிடத்திலும் இறந்த காலத்தில் படைக்கப்பட்ட ஹைக்கூவினை பின்வரும் தொடரில் காணலாம்.

இன்னும் வரும்..

 முன்தொடர் 16


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.