தொடர் 16

ஹைக்கூவில் ஜென்.

சென்ற அத்தியாயத்திலேயே கவனித்து விட்டோம். ஜென் என்பது மதமல்ல. நீ உன்னை ஆழ்நிலை வழியாகத் தேடி அடைவதே. ஜென்… சுருக்கமாய், வாழ்வியலின் உள்ளார்ந்த ஈடுபாடே ஜென்.

ஜென் கூற்றுப்படி..இந்த உலகம் மனிதனுக்கானது மட்டுமல்ல. வாழும் அனைத்து உயிர்களுக்குமானது. சிற்றுயிர்களையும் நேசிக்கக் கற்றுத்தருவதே ஜென்.

வாடிய பயிரை
கண்ட போதெல்லாம்
வாடினேன்.

என்ற வள்ளலார் கூட ஒருவகையில் ஜென் துறவி எனக் கூறினால் தவறி்ல்லை.

தாவரங்களோடு பேசிக் கொண்டிருந்த ஒரு துறவியிடம் ..என்ன நீங்கள் தாவரத்துடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் ? என்றதற்கு அவர் அளித்த பதில்… அந்த தாவரங்கள் தான் எனக்கான வாழ்வியலை கற்றுத் தருகிறது என்றாராம். நிலத்தில் ஆழத்தில் தன் வேர்களை விட்டு தனக்கான உணவினையும்..தன் நிலைத்தன்மையையும் ஏற்படுத்திக் கொள்கிறது. அதுபோல வானை நோக்கி தன் கிளைகளை நீட்டி இறைவனிடம் தனக்கான காற்றிற்கும், மழைக்கும் இறைஞ்சுகிறது. தன்னலமில்லாது தனது அங்கத்திலிருந்து காய், கனி, ஏன் தன்னை முழுதும் கூட அர்ப்பணித்து விடுகிறது. மரம் ஒரு வகையில் எனது குரு என்றாராம் அந்த ஜென் துறவி..

முன்னர் படித்த ஒரு விசயம் இது..

To be a greatful traveller on the path, without attachment, greed and hatred. In harmony with the world and every sentient being..This is the practice of ZEN.

என்பது பொருந்தி தானே போகிறது. இதோ… இன்னொரு சிறு ஜென் கதையை பார்ப்போம்.

ஜென் துறவியைப் பார்த்து ஒருவன் சொன்னான்.. “ஏன் இப்படியொரு மோசமான உலகத்தை இறைவன் உருவாக்கி இருக்கிறார். நானாக இருந்தால் நல்ல உலகத்தை உருவாக்கி இருப்பேன்” என்றான்.

ஜென் துறவி சிரித்துக் கொண்டே… “உனக்கே காரணம் தெரிந்திருக்கிறது. இந்த உலகத்தை மேலும் நல்லதாக மாற்றத்தான் இறைவன் உன்னை படைத்திருக்கிறார். ஆகவே நீ சொன்னதைச் செய்ய முயற்சி செய். நீ எதிர்பார்க்கும் உலகம் உருவாகி விடும்” என்றாராம்..

ஜென் என்பது இதுவே. நம்மை நாம் உணரவே ஜென் உதவுகிறது.

இந்த கவிதையை பாருங்கள்..

மரத்தின் மீது
சிறுவன் எறிந்த பந்து
பழமாகி திரும்புகிறது.

  • குகை.மா.புகழேந்தி

சிறுவன் எறிந்த பந்தினால் வலி ஏற்பட்டிருக்கலாம் மரத்திற்கு. ஆனால் பெருந்தன்மையாய் அச்சிறுவனுக்கு தன் மரத்திலிருந்து பழத்தை தருகிறது மரம். என்னவொரு அழகிய ஜென் சிந்தனை.

இதை கவனியுங்கள்..

இருள்.. இருள்..
பனியில் நனைந்தபடி
பாவம்… மரங்கள்.

1989 இல் தாய் வார இதழில் வெளியான எனது கவிதை.

இருளில் பனியில் நனைந்து கொண்டு இருக்கும் மரத்தின் நிலை குறித்த உயிர் இரக்கச் சிந்தனை.

ஹைக்கூவில் ஜென் உத்தி சிறப்பான ஒன்றாகும். அது மட்டுமல்லாது ஜப்பானில் ஹைக்கூ தோற்றுவிக்கப் படும்போதே ஜென்னை முன்னிலைப் படுத்தவே தோன்றியது என்று கூடச் சொல்லலாம். ஜென்னை முன்னிலைப் படுத்தவே ஹைக்கூவை நிகழ்காலத்தில் எழுதுங்கள் என்று வலியுறுத்தப் படுகிறது. நமக்குள் உள்ள ஞானத்தை தட்டியெழுப்புவதே ஜென். அது நிகழ்காலத்தில் பங்கெடுத்து கொள்வது என்பதனால், ஹைக்கூவை நிகழ்காலத்தில் எழுதுங்கள் என்றனர். ஆனால் ஹைக்கூ நிகழ்காலத்தில் மட்டும் தான் எழுதப்பட வேண்டுமா ? இறந்தகாலத்தில் எழுதக்கூடாதா ?  என்பதை தெரிந்து கொள்ள சற்று பொறுத்திருங்கள்.

இன்னும் வரும்..

 முன்தொடர் 15


2 Comments

Malathi Chandrasekaran · ஜூலை 28, 2019 at 3 h 57 min

Very useful informations. I use to go through Tamil Nenjam.

Malathi Chandrasekaran · ஜூலை 28, 2019 at 4 h 02 min

திரு. அனுராஜ் அவர்களின் விளக்கங்கள் அருமை. அதுவும் உதாரணங்களுடன். நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது. நன்றி, தமிழ் நெஞ்சம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.