தொடர் 15

ஹைக்கூவில் ஜென்..

ஜென் என்பது தனித்த மதமோ, தத்துவமோ இல்லை. மொட்டையடித்து, மந்திரம் ஜெபித்து, பிரம்மசர்யத்தை பின்பற்றி…  புத்தரை விமர்சிக்காமல், புத்தமதத்திற்கு கட்டுப்பட்டு நடக்கும் சத்திய பிரமாணத்தை ஜென் செய்வதில்லை. மாறாக தன் குருவின் முகத்தில் குத்துவிடுவதையும், ஏன் உதைப்பதையும் கூட சிநேக இயல்பாகக் கொண்டது. மலையுச்சி ஒன்றில் KEI ZEN JOKIN என்பவர் ஜென் பௌத்தம், சிண்டோயிசம், தாவோயிசம், கன்பியூஸனிச சாரங்கள் (SHUGENDO) இவற்றினை தொகுத்தும், மலைத் துறவிகளின், பொதுமக்களின் பார்வைகள், எண்ணங்கள் மற்றும் அனுபவங்களை தொகுத்தும், இணைத்தும் ஜென் பாரம்பரியத்தை (SOTTO) புனரமைத்தார். இத்தகைய மாற்றங்களுக்குப் பின்…

ஜென் என்பது, பௌத்தமல்ல எனும் சொற்றொடர் பிரசித்தமாகி விட்டது..

ஓஷோவின் கூற்றுப்படி.. தத்துவம் என்பது பார்ப்பது. ஜென் என்பதோ பங்கு கொள்வது. நமக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் ஞானத்தை தட்டி எழுப்புவதே ஜென். மாறாக எவரையும் ஞானியாக மாற்றுவது இல்லை. அதனை எவரும் இயற்கையாக உணர்தலே வேண்டும்.

பௌத்த மதத்தின் மூலம் ஜென். ஆனால் ஜென் மட்டுமே பௌத்தமல்ல.

இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல. படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்குமானது. அதில் மரம், செடி, கொடி, புழு, பூச்சி, விலங்குகள், பறவைகள், மீன்கள் என அனைத்து உயிர்களும் அடங்கும். மனிதன் வாழ எந்தளவு உரிமையை எடுத்துக் கொள்கிறானோ, அந்தளவு உரிமையை அனைத்து உயிர்களுக்கும் தரப்பட வேண்டும் என்பதே ஜென்.

கி.பி.ஆறாம் நூற்றாண்டில் போதிதர்மர் வாயிலாக சீனாவில் பரவிய பௌத்தம் முதலில் தியான மார்க்கமாக சீனாவிலும்..பின் ஜப்பானிலும் பரவியது.

ஜென்னை நாம் இந்துமத தத்துவ மரபில் ஒப்பீடு செய்தால்…கர்மயோகம்,ஞானயோகம், பக்தியோகம் என்பதில் ஞானயோகமாக கொள்ளலாம். நீ உன்னை உனது ஆழ்மனத் தேடலின் வழியாக தேடி அடை என்பதே ஜென். வாழ்வியலின் உள்ளார்ந்த ஈடுபாடே ஜென். தியானமல்ல. தியானம் போல் அமர்ந்து தியானிப்பதுமல்ல.

இங்கு ஒரு கதையை சொல்கிறேன். ஒரு ஜென் குரு தன்னிடமிருந்த பௌத்த கோட்பாடுகள் அடங்கிய மறைகளை தீயிலிட்டு எரிக்கத் துவங்கினார். உடனிருந்த சீடர்களோ பதறித் துடித்து ஐயா அவை நமது மதக் கோட்பாடு அடங்கிய மறைகளாயிற்றே. அதை ஏன் எரிக்கிறீர்கள் ? என்று பதட்டத்துடன் கேட்க.. . அவரோ சிரித்த படியே… நான் வீட்டை அடைந்துவிட்டேன். இனி எனக்கு வரைபடம் தேவையில்லை என்றாராம்..

ஆம், வாழும் முறையை அறிந்து கொண்டுவிட்டால் வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமாகி விடுகிறதல்லவா ? அதுவே ஜென்.

விலகியிரு
உலகம் உன்னுடையதே
உனக்குள் ஒரு புத்தன்.

  • புனான்.. ஜப்பானிய ஜென் துறவி

விடைபெறும் இலை
ரகசியம் சொல்லிச் சென்றது
மரணத்துக் குரிய தான..

  • லிப்னானி

பாரதியின் கூற்றுப் படி.. கவிதை எழுதுபவன் கவியன்று… கவிதையே வாழ்க்கையாக உடையவன் எவனோ, வாழ்க்கையையே கவிதையாக செய்பவன் எவனோ அவனே கவி என்கிறார். அது போலே ஜென்..

ஹைக்கூவில் பொருளைத் தேடாதீர்கள். உங்களைத் தேடுங்கள். நிச்சயம் கிடைப்பீர்கள் என்றார் ஈரோடு தமிழன்பன். இது போன்ற தேடலே ஜென்.

மூதாதையர் விழா
பிறகு மரத்தின் சலசலப்பு
பூச்சியின் கீதமும் கூட..!

  • சோகெட்சு (பெண் ஜென் துறவி)

இந்த கவிதையை கவனியுங்கள். விழா என்றாலே, அங்கு மகிழ்ச்சியும், ஆட்டமும், பாட்டமும், களேபரமாய் தானிருக்கும். அத்தகையச் சூழலிலும்..மரத்தின் சலசலப்பையும்..

அங்கிருந்த தோட்டத்து மலர்களில் வந்தமர்ந்த பூச்சிகளின் ரீங்காரமிடும் கீதத்தையும் கூட விழாக்கால ஆரவாரத்தின் ஊடாக ஒருவரால் ஆழ்ந்து கவனித்து ரசிக்கவும் முடிகிறதெனில் அங்கே தான் பிறக்கிறது ஜென் எனும் நிலை.

ஜென்… இன்னும் தொடரும்..

இன்னும் வரும்..

 முன்தொடர் 14


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

அறிமுகம்

வாழ்வி(ய)ல் வசந்தம்!

உள்ளிழுத்து வெளிவரும் – என்
உஷ்ண மூச்சுக் காற்று
இதயத்தின் ரணங்களை
மொழிபெயர்க்கும்!

என் வீட்டு ஜன்னல் கதவு
என் மன ஓலத்தை எதிரொலிக்க
ஒத்தாசை புரியும்!

 » Read more about: வாழ்வி(ய)ல் வசந்தம்!  »

தன்முனை

மலர்வனம் 6

தன்முனை

ஜென்ஸி

நெஞ்சொடு கிளத்தல்

புத்தக அந்தாதி

1.
சிரிக்க. வைத்தவர்களை
மறந்து விட்டு
அழ. வைத்தவர்களை – ஏன்
நினைத்துக் கொண்டிருக்கிறாய்..?

 » Read more about: மலர்வனம் 6  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 18

தொடர் 18

வெண்பா வகைகளில்

குறள் வெண்பா
சிந்தியல் வெண்பா
நேரிசை வெண்பா
இன்னிசை வெண்பா
நேரிசை பஃறொடை வெண்பா
இன்னிசை பஃறொடை வெண்பா

ஆகியவற்றை இதுவரைக் கண்டோம்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 18  »