தொடர் 12

ஹைக்கூவில் கற்பனையை தவிருங்கள் என்கிறார்கள். கவிதைக்கு அழகே கற்பனை எனும் போது ஹைக்கூவில் ஏன் இதனை தவிர்க்க சொன்னார்கள்..

நாம் இதனை அறிந்து கொள்ளுமுன்..

ஹைக்கூ துவக்கத்தில் ரென்கா எனும் கூட்டுப் பாடலின் துவக்கக் கவிதையாக ஹொக்கு என்றே அழைக்கப்பட்டது.ரென்கா அந்தாதி கவிதை போன்று ஒருவர் விட்ட இடத்திலிருந்து ஒருவர் துவங்கி பாடுவார்கள். அதில் துவக்கப் பாடல் மட்டுமே ஹொக்கு.. ஏனையவை நாட்டு நடப்பை.. . உள்ள உணர்வை… சமுதாயச் சிந்தனையை… பாடும் வகையில் அமைந்தவையே.

ஹொக்குவை தனியாக ஹைக்கூ எனும் பதத்தில் பிரபலமாக்கிய பெருமை மாஸ ஒகா ஷிகி (1867-1902) இவரையே சேரும்..ஹைக்கூவில் கற்பனையை தவிர்க்கச் சொன்னவரும் இவரே. நேராகப் பார்த்த சம்பவங்களையும்..பொருட்களையும் மட்டுமே கவிதையில் காட்டுங்கள்..உங்களது மனதில் எழும் கருத்துக்களை ஹைக்கூவில் ஏற்றிச் சொல்லாதீர்கள். அது ஹைக்கூவின் உண்மைத் தன்மையை சிதைத்து விடும் என்றவர் ஷிகி. அவரது கவிதையை காணுங்கள்..

துல்லிய தினத்தில்
எதனுடைய புகையோ
வானில் செல்கிறது.

எவ்வித ஒப்பனையுமின்றி..தெளிவாக சொல்லும் கவிதையிது.

கோடை நதி
பாலம் இருந்தும்
குதிரை நீரில் நடக்கிறது.

கோடை காலத்தில் உடலெங்கும் அனலின் தாக்கமாய் இருக்கலாம்..ஓடக்கூடிய நதி கூட பெரு நதியாய் இல்லாமல் ஓடைபோல வழிந்தோடலாம்..வெகு தூரம் பயணிக்கும் குதிரை தனது உடல் வெப்பத்தை போக்கிக் கொள்ள பாலமிருந்தும்…  பாலத்தின் மீது போகாமல் அச்சிறு நதியில் இறங்கிச் செல்கிறது என காட்சிபடுத்துகிறார்..

இதை கவனியுங்கள்…

பனியின் ஊடே
ஓடம் செலுத்தி வெளிவர
அகன்ற கடல்..!

இடிந்த வீட்டில்
யுத்தம் முடிந்தபின்னே
காய்மரம் பூத்துள்ளது.

இவையனைத்தும் ஷிகியின் கவிதைகளே..பார்க்கும் போதே தெரிந்திருக்கும்…பார்வையில் பட்டதை.. உள்ளதை உள்ளபடி எழுதியிருக்கும் பாங்கு… இவர் 19 ஆம் நூற்றாண்டின் துவக்கக் கால கவிஞர் என்பதனால்..இவரது கருத்து மேற்கத்திய கவிஞர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டது..அது மட்டுமல்லாது ஜப்பானிய ஹைக்கூ அமைப்பும் (Japan Hyhoo Federation) ஹைக்கூவில் கற்பனையை தவிர்ப்பதன் வாயிலாக ஒரு புதிய கவிதை வடிவத்தை ஏன் ஏற்றுக் கொள்ளக்கூடாது என இவரது கருத்தினை வரவேற்றது..ஆனாலும்…

ஒரு கவிதையை கற்பனையின்றி சொல்ல முடியாது என்று நம்பும் மேற்கத்திய கவிஞர்கள் சிலரும்..ஜப்பானிய கவிஞர்கள் பலரும் கற்பனையையும் அவ்வப்போது கலந்தே கவிதை படைத்து கொண்டிருந்தார்கள்..அது ஹைக்கூ எங்கெங்கு பரவலாக எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறதோ அங்கெல்லாம் கற்பனையும் அவ்வப்போது தலைகாட்டுவது ஹைக்கூவில் தவிர்க்க இயலாத ஒன்றாகி விட்டது.

இன்னும் வரும்… 

 முன் தொடர் 11


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

ஹைக்கூ

மலர்வனம் 8

ஹைக்கூ

ஷர்ஜிலா ஃபர்வின்
 1. மழைத்துளிகளை
  சுமந்து கொண்டிருக்கும்
  கார்காலச் சிலந்தி வலை.
 2. இலையுதிர்காலக் கிளை
  தண்டுகளெல்லாம் மின்னுகிறது
  வைகறைப் பனி.
 3. வானத்தில் நாற்று நட
  கால்களைப் கவ்விப் பிடிக்கும்
  சேற்று வயல்.
 » Read more about: மலர்வனம் 8  »

மின்னிதழ்

மலர்வனம் 7

ஹைக்கூ

வஃபீரா வஃபி

01.
தாவும் குரங்கு
நதியில் தலைமுழுகி எழும்
மரக்கிளை

02.
நண்பகல் வேளை
சக்கரங்களிடை சிக்கித் தவிக்கும்
வண்டி நிழல்

 03.

 » Read more about: மலர்வனம் 7  »

அறிமுகம்

வாழ்வி(ய)ல் வசந்தம்!

உள்ளிழுத்து வெளிவரும் – என்
உஷ்ண மூச்சுக் காற்று
இதயத்தின் ரணங்களை
மொழிபெயர்க்கும்!

என் வீட்டு ஜன்னல் கதவு
என் மன ஓலத்தை எதிரொலிக்க
ஒத்தாசை புரியும்!

 » Read more about: வாழ்வி(ய)ல் வசந்தம்!  »