திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 21

பாடல் – 21 வருவாயுட் கால்வாழங்கி வாழ்தல் செருவாய்ப்பச் செய்தவை நாடாச் சிறப்புடைமை – எய்தப் பலநாடி நல்லவை கற்றல் இம்மூன்றும் நலமாட்சி நல்லவர் கோள். (இ-ள்.) வருவாயுள் – தமக்கு வரும் பொருள்களிலே, கால் – நான்கி லொரு பங்கு, வழங்கி – (அறத்திற்) செலவு செய்து, வாழ்தல் – வாழ்தலும்; செரு – போரினிடத்து, வாய்ப்ப – (வெற்றி) கிடைப்ப, செய்தவை – (தான்) செய்த செயல்களை, Read more

விதைக்க மறந்த மனித நேயம்

1. எந்தேசம் எங்கேபோ கிறது சொல்லு … இழிநோக்கி நகரத்தான் மனிதம் என்றா சந்தையென கல்வியாகி திருட்டுக் கொள்ளை … சாதிமத சண்டைகளும் மனிதம் கொல்ல எந்ததிசை போகிறது மக்கள் கூட்டம் … ஏனிந்த மிருகத்தோல் மனிதன் போட்டான் வந்துதிக்கும் சூரியனும் மதங்கள் சாதி … மனிதனிலே பார்த்துதானோ இனியும் தோன்றும்? 2. உடன்பிறந்து வாழ்ந்துவரும் உனது ரத்தம் … ஊண்தின்னி யென்றான வேங்கை யர்கள் தடம்பதிக்க அறிவுகொள்ள கல்வி Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 20

பாடல் – 20 ஆசை பிறன்கட் படுதலும் பாசம் பசிப்ப மடியைக் கொளலுங் – கதித்தொருவன் கல்லானென் றெள்ளப் படுதலும்இம்மூன்றும் எல்லார்க்கு மின்னா தன. (இ-ள்.) பிறன்கண் – பிறனொருவனிடத்துள்ள பொருளுக்கு, ஆசைப்படுதலும் – விருப்பத்தைச் செய்தலும், பாசம் – தன் சுற்றத்தார், பசிப்ப – பசித்திருக்க, மடியை – சோம்பலை, கொளலும் – கொள்ளுதலும்; கதித்து – வெறுத்து, ஒருவன் – ஒருவனால், கல்லான் என்று – கற்றிலன் Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 19

பாடல் – 19 கொல்யானைக் கோடுங் குணமிலியு மெல்லிற் பிறன்கடை நின்றொழுகு வானு – மறந்தெரியா தாடும்பாம் பாட்டு மறிவிலியு மிம்மூவர் நாடுங்காற் றூங்கு பவர். (இ-ள்.) கொல் யானைக்கு – கொலை செய்வதாகிய (மத) யானைக்கு, ஓடும் – (பின்வாங்கி) ஓடுகின்ற, குணம் இலியும் – குணம் இல்லாத வீரனும்; எல்லில் – இரவிலே, பிறன் கடை – பிறன் வீட்டு வாயிலில் (அவன் மனையாளை விரும்பி), நின்று Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 18

பாடல் – 18 ஒருதலையான் வந்துறூஉ மூப்பும் புணர்ந்தார்க் கிருதலையு மின்னாப் பிரிவு – முருவினை யுள்ளுருக்கித் தின்னும் பெரும்பிணியு மிம்மூன்றுங் கள்வரி னஞ்சப் படும். (இ-ள்.) ஒருதலையான் – உறுதியாக, வந்துறூஉம் – வந்தடையும், மூப்பும் – கிழப்பருவமும்; புணர்ந்தார்க்கு – நட்பினருக்கு, இருதலையும் – (பிரியப்பட்டவரும் பிரிந்தவரும் ஆகிய) இரண்டிடத்தும், இன்னாப் பிரிவும் – துன்பத்தைத் தருகின்ற பிரிவும்; உருவினை – உடம்பை, உள் – உள்ளிடத்துள்ள Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 17

பாடல் – 17 மூப்பின்கண் நன்மைக் ககன்றானும் கற்புடையாள் பூப்பின்கண் சாராத் தலைமகனும் – வாய்ப்பகையுள் சொல்வென்றி வேண்டும் இலிங்கியும் இம்மூவர் கல்விப் புணைகைவிட் டார். (இ-ள்.) மூப்பின்கண் – மூப்பு வந்த இடத்தும் , நன்மைக்கு – துறவறத்துக்கு, அகன்றானும் – (அஞ்சி) நீங்கினவனும் கற்பு உடையாள் – கற்புடைய மனைவியை, பூப்பின்கண் பூத்து நீராடிய பின், சாரா – மருவாத, தலைமகனும் – கணவனும், வாய்ப் பகையுள் Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 16

பாடல் – 16 மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில்சீர்ப் பெண்ணினுட் கற்புடையாட் பெற்றானும் – உண்ணுநீர் கூவல் குறைவின்றித் தொட்டானும் இம்மூவர் சாவா உடம்பெய்தி னார். (இ-ள்.) மண்ணின்மேல் – மண்ணுலகத்தில், வான் – பெரிய, புகழ் – புகழை, நட்டானும் – நிலைநிறுத்தினவனும், பெண்ணினுள் – பெண்களுள், மாசுஇல் – குற்றமற்ற, சீர் – சிறப்புடைய கற்பு உடையாள் – கற்புடையவளை, பெற்றானும் – (மனைவியாகப்) பெற்ற கணவனும், Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 15

பாடல் – 15 பொய்வழங்கி வாழும் பொறியறையும் கைதிரிந்து தாழ்விடத்து நேர்கருதுந் தட்டையும் – ஊழினால ஓட்டி வினைநலம் பார்ப்பானும் இம்மூவா; நட்கப் படாஅ தவர். (இ-ள்.) பொய் – பொய்ச் சொற்களை, வழங்கி – பேசி, வாழும் – (அதனால் உயிர்) வாழ்கின்ற, பொறி அறையும் – திருவில்லாதவனும், கை – முறைமை, திரிந்து – வேறுபட்டு, தாழ்வு இடத்து – (ஒருவன்) தாழ்ந்த இடத்து, நேர் – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 14

பாடல் – 14 இழுக்கல் இயல்பிற் றிளமை பழித்தவை சொல்லுதல் வற்றாகும் பேதைமை – யாண்டும் செறுவொடு நிற்குஞ் சிறுமைஇம் மூன்றும் குறுகார் அறிவுடை யார். (இ-ள்.) இளமை – இளமைப் பருவம், இழுக்கல் – வழுவுதலை, இயல்பிற்று – இயல்பாகவுடையது; பேதைமை – அறியாமை, பழித்தவை – (அறிவுடையோரால்) விலக்கப்பட்டவைகளை; சொல்லுதல் – சொல்லுதலில், வற்று ஆகும் – வல்லதாம், சிறுமை – ஈனத்தன்மை, யாண்டும் – எக்காலத்தும் Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 13

பாடல் – 13 சீலம் அறிவான் இளங்கிளை சாலக் குடியோம்பல் வல்லான் அரசன் – வடுவின்றி மாண்ட குணத்தான் தவசியென் றிம்மூவர் யாண்டும் பெறற்கரி யார். (இ-ள்.) சீலம் – (பிறர்) குணத்தை, அறிவான் – அறிந்து நடக்கிறவன், இளம் கிளை – இளமை (தொட்டு வந்த) சுற்றத்தானாவான், சால – மிகவும், குடி – குடிகளை, ஓம்பல் – பேணுதலில், வல்லான் – வல்லவன், அரசன் – அரசனாவான், Read more