தொடர் 10

வார்த்தைகள் என்றும் வலிமையானவை..தமிழில் ஒரு சொலவடை உண்டு. ஒரு வார்த்தை கொல்லும், ஒரு வார்த்தை வெல்லுமென்று.

கவிதைகளிலும் வார்த்தைகள் முக்கியப் பங்கினை ஆற்றுகின்றன. வார்த்தைகளே கவிதைகளை சிறப்படையச் செய்கின்றன. அத்தகைய வார்த்தைகளை நாம் கவிதைகளில் கையாளும் போது கவனமாக கையாளுதல் அவசியம். ஒருமை, பன்மை வார்த்தைகளைக் கையாளும் போதும் வார்த்தைச் சொற்றொடர்களை அதற்கு தகுந்தாற்போலக் கையாள்வது முக்கியம்.

மாடு ஓடுகிறது…என்பது சரி

மாடுகள் ஓடுகிறது… என்பது தவறு.

இங்கு மாடுகள் என பன்மையில் இருப்பதனால் வினைச்சொல்லும் பன்மையில் அமைதல் வேண்டும்.

மாடுகள் ஓடுகின்றன என வார்த்தை அமைய வேண்டும்.

அதே போல. ஒரே பொருளைத் தருவது போலத் தோன்றினாலும்.. சில வார்த்தைகளைப் பிரயோகிப்பதில் கவனமாய் இருத்தல் நல்லது.

ஒரு திருமண வீட்டில் அனைவரும் உண்ட பின்  மீதமான உணவினை ஒரு அனாதை விடுதிக்கோ, ஒரு பிச்சைக்காரனுக்கோ தருவதாக இருந்தால்… அங்கு,

எஞ்சிய உணவு என்றோ அல்லது மீதமான உணவு என்றோ தான் வரவேண்டும்..அதை விடுத்து வீணான உணவு எனும் வார்த்தை வருமாயின் அது தவறானப் பொருளாகி விடும். உண்ணத் தகுதியில்லாத ஒன்றை தான் வீணான உணவு என்போம்.

ஹைக்கூவில்… தேவையற்ற வார்த்தைகளும் பிரயோகிக்கத் தேவையில்லை. ஒரு வார்த்தையை நீக்கம் செய்தாலும் அதன் பொருளானது மாறுபடாதெனில் தேவையற்ற அந்த வார்த்தையை நீக்கம் செய்து விட வேண்டும்.

பலத்த மழை
வேகமாக நிரம்பிக் கொண்டிருக்கிறது
ஒழுகுமிடத்தில் பாத்திரம்.

இந்த கவிதையில் வேகமாக என்ற வார்த்தை தேவையில்லை.

பலத்த மழை
நிரம்பிக் கொண்டிருக்கிறது
ஒழுகுமிடத்தில் பாத்திரம்.

என்றிருந்தாலே போதுமானது. எனவே எழுதும் போது தேவையற்ற வார்த்தைகளை நீக்கம் செய்தும்… ஒருமை, பன்மைக்கு உகந்த வார்த்தைகளை பிரயோகம் செய்தும் ஹைக்கூ எழுதினால் சிறக்கும்.

அடுத்துஹை க்கூவில் கற்பனை..

இன்னும் வரும்…

சென்ற முன் பகுதி தொடர் 09 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 12

தொடர் 12

ஹைக்கூவில் கற்பனையை தவிருங்கள் என்கிறார்கள். கவிதைக்கு அழகே கற்பனை எனும் போது ஹைக்கூவில் ஏன் இதனை தவிர்க்க சொன்னார்கள்..

நாம் இதனை அறிந்து கொள்ளுமுன்..

ஹைக்கூ துவக்கத்தில் ரென்கா எனும் கூட்டுப் பாடலின் துவக்கக் கவிதையாக ஹொக்கு என்றே அழைக்கப்பட்டது.ரென்கா அந்தாதி கவிதை போன்று ஒருவர் விட்ட இடத்திலிருந்து ஒருவர் துவங்கி பாடுவார்கள்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 12  »

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 11

தொடர் 11

கவிதைக்கு அழகு கற்பனை. கற்பனையே கவிதையை சிறக்கச் செய்கிறது. கவிஞன் தனது கற்பனைத் திறத்தினை கவிதையில் ஏற்றிக் கூறும் போது… வாசகனும் அந்த அழகிய உத்தியில் மெய்மறந்து ரசிக்கிறான்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 11  »

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 09

தொடர் 09

ஹைக்கூவில் வார்த்தைக் கட்டுப்பாடு என்பது எவ்வளவு முக்கியமோ, அந்தளவு அந்த வார்த்தைகளை கையாள்வதும் முக்கியத்துவம்பெறுகிறது. வார்த்தைச் சிக்கனமே ஹைக்கூவில் முக்கியமானதாகும்.

எந்த ஒரு வார்த்தையையும் அனாவசியமாக ஹைக்கூவில் பிரயோகிக்கத் தேவையில்லை.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 09  »