கதை

கண்ணுக்கு ஏன் கறுப்புக் கண்ணாடி?

வாசல் கதவை விரைவாய்த் திறந்து ஓடி வந்த பவித்ரா, விசையாகத் தன் கைப்பையைச் சுழற்றி எறிந்தாள். கட்டிலில் சடாரென்று விழுந்தாள். வெம்மி நின்ற அழுகை வெடித்தது. அடக்கமுடியாத கண்ணீர் மடை வெள்ளம் திரண்டதுபோல் தாரைதாரையாகத் தலையணையை நனைத்தது.

 » Read more about: கண்ணுக்கு ஏன் கறுப்புக் கண்ணாடி?  »

கதை

வசீகரம்

நேர்முகத் தேர்வுக்காக காத்திருந்த அன்வரின் மொபைல் போன் ஒலித்தது. போனை ஆன் செய்த அன்வர் ‘சொல்லுடா..’ என்றான்.

‘எங்கடா இருக்க… இண்டர்வியூ போனியே என்னாச்சு..’ என்றான் எதிர் முனையில் பேசிய அன்வரின் நண்பன் ரமேஷ்.

 » Read more about: வசீகரம்  »

கதை

கீறல்கள்

201605161457முகில்கள் மறைத்துக் கொண்டிருக்க, அதனூடே தனது ஒளிக் கீற்றை நுழைக்க, பகீரதப் பிரயத்தனம் செய்து, வெற்றியும் கண்ட சூரியன், வெளி மண்டலத்தில் தனது கதிர்களைப் பரவவிட்டுக் கொண்டிருந்தான். இளவேனில் காலந்தான் இது என்பதை,

 » Read more about: கீறல்கள்  »

கதை

ஊர்விட்டு ஊர்சென்று …

indian_old_man_1சரவணன் …

சென்னையில் வேலை பார்க்கும் இளைஞன். தன் கிராமத்திற்குச் சென்று “நான் சென்னையில் ஒரு வீடு வாங்கப்போகிறேன். 5 லட்சம் பணம் வேண்டும்” என்று தன் தந்தையிடம் கேட்டான்.

 » Read more about: ஊர்விட்டு ஊர்சென்று …  »

By J.E.ஜெபா, ago
கதை

ழகரக் கொலை

சினிமா ஸெட் கெட்டது – முதலிரவு அறை அட்டகாசமாக மலர்களாலும் பட்டு ஜரிகைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

கட்டிலில் நுரை மெத்தையும் குஷன் திண்டுகளும் காத்திருந்தன.

“ஒராள் ஒராள்” என்று கட்டிலுக்கு வாய் இருந்தால் குதிரை வண்டிக்காரன் மாதிரி கூவி இருக்கும்.

 » Read more about: ழகரக் கொலை  »

கதை

தன்னைச் சுடும்

ஹேய்….இங்க பாரேன் கிரி….! மூணு மாசக் குழந்தையைக் கூட இந்த ‘மாண்டசரி ஸ்கூல்ல’ சேர்த்துக்கறாளாம். வெரி நைஸ்…இல்லபா … நல்லவேளையா இப்ப ..நம்ம கீட்ஸு க்கு நாளையோட அவன் பொறந்து நாலாவது மாசம் முடியப் போறது ..இன்னி வரைக்கும் இந்த ஹோர்டிங் அட்வெர்டைஸ்மென்ட் என் கண்ணுலயே படல பார்த்தியா..?

 » Read more about: தன்னைச் சுடும்  »

கதை

நன்றியுள்ள நாய்

escroc79w
ஒரு ஊரில் கந்தன் என்பவர் தன் மனைவியோடு வாழ்ந்து வந்தார், அவர் ஒரு விவசாயி, அவருக்கு குழந்தை இல்லை. ஆனால், அவர் ஒரு பெண் நாயை வளர்த்து வந்தார்.

 » Read more about: நன்றியுள்ள நாய்  »

கதை

சமூக தளம் …

“எனக்கு அதுதான் காதல்ன்னு தோணிச்சு. அதுதான் இதுகெல்லாம் காரணமா மாறிடிச்சுன்னு நெனைக்கிறேன். எல்லார்கிட்டேயும் மன்னிப்புக் கேட்டேன். எல்லாரும் அவங்க மட்டும் நல்லவங்க போலேயும் நான் மட்டும் கெட்டவள் போலேயும் என்னை ரொம்ப உதாசினப் படுத்திட்டாங்க. எதோ தீராத நோய் வந்தது போலப் பார்க்கிறாங்க. நீ மட்டும்தான் குமுதா, எதுக்குடீ எங்கிட்ட மன்னிப்பு எல்லாம் கேட்கிற?. அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன்னு கேட்டே. கொஞ்சம் ஆறுதலா இருக்கு. ஒரு நாள் என் வீட்டிற்கு வற்றியா?”

கதை

உறங்கும் உண்மைகள்

‘ஏன் சாமியாரே ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கக் கூடாதா? ஊடனேயே காதல் கடிதம் எழுதுவதா? இப்போது காதலிப்பார்கள். பின்பு பெற்றோர் சம்மதிக்கவில்லை. சீதனம் வேண்டும் என்று கூறிவிடுவர். காதலாவது கத்தரிக்காயாவது? ஆனானப்பட்ட இராமனே சீதையை நெருப்பில் குதிக்கச் சொன்னவர் தானே? மனைவியைப் பணயப் பொருளாக வைத்து சூதாடி அரசவையில் சேலையை உரியும்போது மௌனமாயிருந்தவர் தருமபுத்திரர்..’ என்பாள். மைதிலியின் வார்த்தைகளைக் கேட்ட சந்திரன் தன் காதலை மனதுக்குள்ளேயே வைத்துப் பூட்டிவிட்டார். பின்பு இருவரும் சகஜமாகப் பழகினார்கள். அவர் பட்டயக் கணக்காளராக பதவி பெற்றார். மைதிலி ஒரு ஆசிரியராகி, வேறு ஊரில் உள்ள பாடசாலைக்குச் சென்றுவிட்டாள்.

கதை

பரீட்சை நேரம்…

நாளைக்கு எக்கொனொமிக்ஸ் எக்ஸாம் எனக்கு, லைபிரரில புத்தகத்தோட சண்டை போட்டுக்கொண்டிருந்தன். எப்பவும் கடைசி நேரத்தில கஸ்டப்பட்டுகொண்டு நிற்கிறதுதான் என்டபழக்கம். இந்தபழக்கத்தை மாத்தணும் எண்டு விருப்பம்.. பல நாள் முயன்றும் முடியாமை.. இப்போது முயற்சியே செய்வதில்லை.

 » Read more about: பரீட்சை நேரம்…  »

By விஷ்ணு, ago