நேர்முகத் தேர்வுக்காக காத்திருந்த அன்வரின் மொபைல் போன் ஒலித்தது. போனை ஆன் செய்த அன்வர் ‘சொல்லுடா..’ என்றான்.
‘எங்கடா இருக்க… இண்டர்வியூ போனியே என்னாச்சு..’ என்றான் எதிர் முனையில் பேசிய அன்வரின் நண்பன் ரமேஷ்.
‘மூணு ரவுண்ட் கிளியர் பண்ணிட்டேன்டா.. கடைசி ரவுண்ட் ஹெச்.ஆர். ரவுண்டுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்…’ என்றான் அன்வர்.
‘ஓ.. ஓ.கே.டா.. நல்லா பண்ணு.. ஆல் தி பெஸ்ட்… நான் அப்பறமா கால் பண்றேன்’ என்று ரமேஷ் கூறியதும், ‘தேங்க்யூடா..’ என்ற பதிலளித்துவிட்டு போனை கட் செய்தான் அன்வர்.
ஹெச்.ஆர். அறைக்கு வெளியே காத்திருந்த அன்வருக்கு உள்ளே இருந்து அழைப்பு வந்ததும் எழுந்து அறையினுள் சென்றான்.
‘மேய் ஐ கம் இன் சார்…’
‘எஸ்.. கம் இன்.. ப்ளீஸ் டேக் யுவர் சீட்…’
‘தேங்க்யூ சார்…’
‘குரூப் டிஸ்கஷன்ல ரொம்ப நல்லா இங்கிலீஷ்ல பேசுனீங்க… இந்த ரவுண்ட்லையும் இங்கிலீஷ்லையே பேசி உங்க இங்கிலீஷ் நாலேஜை டெஸ்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. சோ.. நாம தமிழ்லையே பேசலாம்..’ என்றார் ஹெச்.ஆர்.
‘சரிங்க சார்…’ என்றான் அன்வர்.
‘உங்களோட சர்டிபிகேட் எல்லாம் பார்த்தேன்.. நல்ல மார்க் வாங்கியிருக்கீங்க…உங்களோட ப்ராஜக்ட்டும் ரொம்ப நல்லா இருந்தது. கிட்டத்தட்ட உங்களுக்கு இந்த வேலை கிடைச்ச மாதிரிதான். நீங்க எதிர்பார்க்கிற சம்பளமும் கிடைத்துவிடும்..’
‘தேங்க்யூ சார்…’
‘ஆனால் கம்பெனி ரூல்ஸ் படி தாடி வைக்கக் கூடாது. தாடியை எடுக்குறதுக்கு உங்களுக்கு ஓகேன்னா இப்பவே அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை வாங்கிக்கலாம்…’ என்றார் ஹெச்.ஆர்.
‘சாரி டூ ஆஸ்க்.. எதற்காக சார் தாடியை எடுக்கணும்…’ என்றான் அன்வர்.
‘இது கம்பெனி ரூல்ஸ்… ஏன் எதற்கு என்றெல்லாம் கேள்வி கேட்க முடியாது…’
‘ரூல்ஸா இருந்தாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்குமே சார்… தாடியால என்னோட வேலை ஏதும் தடைப்படுமா..? தாடி வைக்கிறதுனால என்னோட திறமையோ, கற்கும் திறனோ குறையப் போகுதா..? ஏதாவது நியாயமான காரணம் இருந்தால்தானே எதையும் செய்ய முடியும்..?’
‘ஓ.. ஓகே.. நீங்க எதற்காக தாடி வச்சுருக்கீங்க.. அதுக்கு என்ன காரணம்…?’ என்று ஹெச்.ஆர் கேட்ட கேள்விக்கு,
‘தாடி வைக்கிறதுனால நிறைய நன்மை இருக்குது சார்.. அதனாலதான் வச்சுருக்கேன்..’ என்று பதிலளித்தான் அன்வர்.
‘நன்மையா..? தாடி வைக்கிறதுனாலையா..? சும்மா ஏதாவது சொல்லணும் என்பதற்காக நன்மை அது, இதுனு சொல்லாதீங்க..’ என்று நக்கலாய் சிரித்தார் ஹெச்.ஆர்.
‘இல்லை சார்.. அப்படி இல்லை..’
‘தெரியும் மிஸ்டர் அன்வர்.. நீங்க ஒரு முஸ்லிம், உங்களோட மத வழக்கப்படி தாடி வச்சுருக்கீங்க இதுதானே உண்மை..?’
‘இஸ்லாமிய வழக்கப்படி தாடி வைக்க வேண்டும் என்று இருந்தாலும் அது ஏதோ மூட நம்பிக்கையாலோ, அர்த்தமற்றோ சொல்லப்பட்டது இல்லை சார். விஞ்ஞானப் பூர்வமாக பார்த்தால் உடல் ஆரோக்கியத்தில் தாடி முக்கியப் பங்கு வகிக்கிறது. அதன் காரணமாகத்தான் தாடி வைக்கும்படி இஸ்லாம் சொல்லுது…’
‘வாட் யூ ஆர் டாக்கிங் அன்வர்.. அழகா ஷேவ் பண்ணி முகத்தை பளபளப்பா வச்சுக்காம அசிங்கமா தாடி வளர்க்கிறதுல என்ன ஆரோக்கியமான விஷயம் இருக்கு..?’
‘நிறைய இருக்கு சார்.. தாடி நமது முகத்திற்கு ஒரு கவசம் மாதிரி.. தாடி வைக்கிறதுனால முகம் எப்பொழுதும் குளிர்ச்சியா இருக்கும்.. கண்ணமும், தாடையும் பாதிக்காமல் தாடி பாதுகாக்குது… தாடி முகத்துல படர்ந்து இருக்குறதுனால SABACEOUS என்ற சுரப்பி சுரக்கிறது. இந்த சுரப்பி கரும் புள்ளிகள், முகப் பருக்கள் ஏற்படாமல் பாதுகாக்குது. தாடி வளர்க்கிறதுனால சூரிய ஒளிக் கற்றைகள் நேரடியாக சருமத்தை அடைவதை தடுத்து தொண்டை, பற்களின் ஈறுகள் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். பல் வலி வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஒளிக் கற்றைகள் நேரடியாக முக சருமத்தை அடையும் போது தோல் வலுவிழந்து முகத்தில் சுருக்கம் ஏற்பட ஆரம்பிக்கும். தாடி வைத்தால் சின்ன வயதிலேயே முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றம் ஏற்படாது. முக்கியமா சுவாசக் கோளாறுகள் இருக்காது. இது எல்லாமே விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள் சார். அதனால்தான் முஸ்லிம்கள் தாடி வைக்திறதுக்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்க…’
‘வாவ்.. தாடி வைக்கிறதுல இவ்வளவு நல்ல விஷயம் இருக்கா.. கிரேட்.. எனக்கு எவ்வளவோ முஸ்லிம் பிரண்ட்ஸ் இருக்காங்க.. அவங்களிடம் ஏன் தாடி வைக்கிறீங்கனு கேட்டா.. சும்மா.. இஸ்லாத்துல தாடி வைக்க சொல்லீருக்கு.. அதனால வச்சுருக்கோம்னு சொல்லுவாங்க.. இந்த அளவுக்கு தாடியைப் பத்தி யாரும் விளக்கிச் சொன்னது இல்ல.. தேங்க்யூ.. எல்லாம் சரிதான்.. ஆனால் தாடி வைக்கிறது பார்க்க அசிங்கமா இருக்குமே…?’
‘அது உங்களோட பாய்ண்ட் ஆஃப் வியூ சார்.. உங்களோட தனிப்பட்ட ரசனை. என்னைப் பொறுத்த வரை தாடி வைக்கிறதுதான் எனக்கு அழகா இருக்கு.. உங்களோட ரசனையும், மத்தவங்களோட ரசனையும் ஒண்ணா இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.. எப்படிப் பார்த்தாலும் உங்களோட கருத்து தவறு சார்.. ஆண்களுக்கு தாடிதான் சார் அழகு.. Robert J. Pelligrini என்ற கலிபோர்னிய யுனிவர்சிட்டி மனோதத்துவ நிபுணரின் ஆராய்ச்சியில் தாடி வைத்திருப்பவர்கள்தான் தோற்றத்தில் கம்பீரமாகவும், அழகாகவும், கவர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதாக கண்டுபிடிச்சுருக்காரு.. சொல்லப்போன நிறைய அறிஞர்களும், சாதித்தவர்களும் தாடி வச்சுருக்காங்க.. சாக்ரடீஸ், சார்லஸ் டார்வின், ஆபிரகாம் லிங்கன், தாகூர், பெரியார் இப்படி மற்ற மதத்தினரும், கடவுளே இல்லைனு சொன்னவங்களும் தாடி வச்சுருக்காங்க.. அவங்களெல்லாம் அழகா இல்லையா..? ஏதும் சாதிக்கலையா..? தாடிக்கும், மதத்திற்கும் முடிச்சு போடுவதும், தாடியை அலங்கோலமாகப் பார்ப்பதும் சரியான அணுகுமுறை இல்லை சார்.. மோர் ஓவர் தாடி வைக்கிறது என்னோட தனிப்பட்ட உரிமை.. என்னோட உரிமையை விட்டுக் கொடுத்தால்தான் இந்த வேலை எனக்குக் கிடைக்கும்னா அப்படிப்பட்ட வேலையே எனக்கு தேவையில்லை சார்..’
‘எஸ்.. நவ் ஐ அக்ரி.. புரிஞ்சுக்கிட்டேன்.. தாடிக்கு பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது இப்பதான் எனக்குத் தெரியுது. தேங்ஸ் அன்வர். உங்களோட தைரியமான பேச்சும், பரந்த அறிவும், நல்ல சிந்தனையும்தான் எங்க கம்பெனிக்குத் தேவை. வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, தனி மனித உரிமைதான் முக்கியம் என்று பேசிய உங்களோட மன தைரியமும், துணிச்சலும், கொள்கையும் ரொம்பப் பிடிச்சுருக்கு.. யூ ஆர் செலக்டட்.. இன்னும் ரெண்டு நாள்ல வேலையில் ஜாயிண்ட் பண்ணிடுங்க..’
‘தேங்க் யூ சார்..’ என்ற அன்வரின் முகத்தில் மகிழ்ச்சி நிரம்பியிருந்தது.
இருவரும் கைகுலுக்கி விடை பெற்றனர். வேலை கிடைத்த மகிழ்ச்சி அன்வரின் மனதிலும், தாடியே முகத்திற்கு வசீகரம் சேர்க்கிறது என்ற உண்மையைப் புரிந்து கொண்டதன் மகிழ்ச்சி ஹெச்.ஆரின் மனதிலும் நிரம்பியது.இரண்டு நாட்கள் கழித்து அன்வர் வேலையில் ஜாயிண்ட் பண்ண வந்த போது ஹெச்.ஆரின் முகத்தில் தாடி அரும்பத் தொடங்கியிருந்தது.
3 Comments
https://Ukdragonslots.Wordpress.com/ · அக்டோபர் 20, 2025 at 2 h 56 min
bookmarked!!, I really like your website! https://Ukdragonslots.Wordpress.com/
https://from-ua.info/medychnyy-tsentr-result-neyroreabilitatsiia-ta-kompleksne-vidnovlennia-pislia-insultu/ · நவம்பர் 21, 2025 at 22 h 54 min
I simply couldn’t depart your site prior to suggesting that I extremely loved the usual
information a person supply to your visitors? Is gonna be back continuously in order to check out new posts https://from-ua.info/medychnyy-tsentr-result-neyroreabilitatsiia-ta-kompleksne-vidnovlennia-pislia-insultu/
https://www.Portal24.org.ua/vidnovlennja-movi-pislja-insultu-poradi-fahivciv/ · நவம்பர் 21, 2025 at 23 h 30 min
That is a really good tip particularly to those new to the blogosphere.
Brief but very precise information… Many thanks for sharing this one.
A must read article! https://www.Portal24.org.ua/vidnovlennja-movi-pislja-insultu-poradi-fahivciv/