அஞ்சலி

உனக்கு ஏது உறக்கம்.?

தோன்றிய கால முதல் தூண்டாய்
மணி விளக்காய் தோன்றிய.
தமிழ்த் தாயின் தலைமகனே.
குமணன் தலை கொடுக்க முன்வந்தான்
நீயோ தன்னையே தமிழுக்கு தந்தாய்
புறநானூறு அகநானூறு ஆக
மொத்தம் எண்ணூறு என
எண்ணிக் கொண்டிருந்தவர்கள் மத்தியில்
சங்கத் தமிழின் சங்கதிகளை
சரித்திரமாய் சொன்னவன் நீயே
மனிதகுலத்தின் போக்கு வரத்திற்கு
கோடு கிழித்த வள்ளுவனுக்கு
வான் புகழ் கொண்ட சிலை அமைத்தவன் நீயே
உரை வீச்சில் உள்ளத்தை உருக வைத்தவனே
மூட நம்பிக்கையை முட்டித்தள்ள
முழு வீச்சில் முயன்றவனே
சினிமாக்கள் அறியாமையை விதைத்தபோது
வாழ்க்கையின் யதார்த்தத்தை அறிவோடு கலந்தவன் நீயே
கதா கலட்சமாக கவி அரங்குகள்
காட்சி அளித்தபோது கவி
அரங்குகளில் புரட்சி செய்த புதுமையாளனே
கழிக்க முடியாத கடன் பிறப்புகளை
பெற்ற கலைஞரே.

 » Read more about: உனக்கு ஏது உறக்கம்.?  »

மின்னிதழ்

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 09-2018

மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 09-2018  »

By Admin, ago
இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 98

பாடல் – 98

செந்தீ முதல்வர் அறம்நினைந்து வாழ்தலும்
வெஞ்சின வேந்தன் முறைநெறியில் சேர்தலும்
பெண்பால் கொழுநன் வழிச்செலவும் இம்மூன்றும்
திங்கள்மும் மாரிக்கு வித்து.

(இ-ள்.) செந்தீ –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 98  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 97

பாடல் – 97

ஐங்குரவ ராணை மறுத்தலும் ஆர்வுற்ற
எஞ்சாத நட்பினுள் பொய்வழக்கும் – நெஞ்சமர்ந்த
கற்புடை யாளைத் துறத்தலும் இம்மூன்றும்
நற்புடையி லாளர் தொழில்.

(இ-ள்.) ஐங்குரவர் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 97  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 96

பாடல் – 96

கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி கொண்டன
செய்வகை செய்வான் தவசி கொடிதொரீஇ
நல்லவை செய்வான் அரசன் இவர்மூவர்
பெய்யெனப் பெய்யும் மழை.

(இ-ள்.) கொண்டான் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 96  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 95

பாடல் – 95

அறிவழுங்கத் தின்னும் பசிநோயும் மாந்தர்
செறிவழுங்கத் தோன்றும் விழைவும் – செறுநரின்
வெவ்வுரை நோனு வெகுள்வும் இவைமூன்றும்
நல்வினை நீக்கும் படை.

(இ-ள்.) அறிவு அழுங்க –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 95  »

அஞ்சலி

உனக்கு ஏது மரணம்.?

தோன்றிப் புகழோடு தோன்றுக என குறள் போற்றும் இலக்கணத்தின் இலக்கியமே. கலைஞர் என்ற நான்கு எழுத்தின் நற்றமிழே.

நா அசைந்தால் நாடு அசையும் என்ற எடுத்துக் காட்டாய் வாழ்நதவரே. ஒப்பாரும் மிக்காரும் இல்லாத முத்தமிழின் மூத்த தலைமகனே.

 » Read more about: உனக்கு ஏது மரணம்.?  »

அஞ்சலி

பரிதி

தீப்பிழம்பில் குளித்தெழுந்த தீந்தமிழே!
தெள்ளுற்ற தமிழ்நாட்டின் முகவரியான திராவிடமே!
தமிழுக்கோர் தொண்டாற்றி கசிந்து கனிந்த பழமே!
செங்கதிரோன் சாயலதில் வார்த்தெடுத்த கரிகாலனே!
எங்கள் சேது சமுத்திரமே!

சாதீயம் பேசி சாக்காடாயிருந்த கூட்டம்
சித்தம் தெளிய வந்த சிலப்பதிகாரமே!

 » Read more about: பரிதி  »

By நவீனா, ago
இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 94

பாடல் – 94

நண்பில்லார் மாட்டு நசைக்கிழமை செய்வானும்
பெண்பாலைக் காப்பிகழும் பேதையும் – பண்பில்
இழுக்கான சொல்லாடு வானுமிம் மூவர்
ஒழுக்கம் கடைப்பிடியா தார்.

(இ-ள்.) நண்பு –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 94  »

நூல்கள் அறிமுகம்

சிறகசைப்பில் மிளிரும் வெயில்

வாழ்வின் எல்லாப்பக்கங்களிலும் கவிதைகளால் நிறைந்துள்ளது. ஆனாலும், அது எல்லோரின் கண்களுக்கும் புலப்படுவதில்லை. நாம் பார்க்கின்ற பார்வைகளும் நம் எண்ணங்களிலும் அது மாறுபடுகின்றது. நம் கண்முன் புலப்படாத ஒன்றைக்கூட அகக்கண்களினால்கூட கவிதையாக்கிட முடியும்.

அவ்வாறாக அந்த வானம் அதன் முழுவதும் மின்னுகின்ற நட்சத்திரங்கள்,

 » Read more about: சிறகசைப்பில் மிளிரும் வெயில்  »

By Admin, ago