ஹைக்கூ ஓர் அறிமுகம் – 46

தொடர் – 46 ஹைக்கூ உண்மைக்கு நெருக்கமாய் நின்று எழுதப்பட வேண்டிய ஒரு கவிதை வடிவம். ஆகவே தான்.. கற்பனைகளை இதில் தவிர்க்கிறோம்… உவமை..உவமேயங்களையும் இதில் கையாள்வதில்லை.. நாம் காணும் காட்சியை…உணர்ந்த உணர்வினை உண்மைத் தன்மையோடு எந்தவித சமரசங்களுக்கும் இடமின்றி இக்கவிதை வடிவில் தர முயற்சிக்கிறோம். அதே போல.. கவிதைகளுக்கு உகந்த.. பொருத்தமான வார்த்தைகளை கையாளுதலும் மிகமிக அவசியமான ஒன்றாகும். இங்கு ஏற்கனவே இது குறித்த தகவலை நான் பகிர்ந்துள்ளேன்.. Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 45

தொடர் – 45 ஹைக்கூ எளிய கவிதை வடிவம்… ஆனால் உள்ளார்ந்த பல விசயங்களைக் கொண்டிருக்கும் உன்னத கவிதை வடிவமாகும். இக் கவிதை வடிவில் கருப்பொருளோடு இரண்டறக் கலந்திருப்பது பல விசயங்கள்.. இடம், பொருள், சூழல், காலநிலை இவையனைத்தும் இணைந்தே பயணிக்கும். இதில் கருப்பொருளோடு முரண்பட்ட விசயங்களைத் திணித்தால் கவிதையின் தன்மை மாறுபட்டு விடும். கோடைக்காலத்தைக் குறித்த ஹைக்கூ எழுதினால்…கோடைகாலத்தோடு இணைந்த விசயங்கள் மட்டுமே அங்கு இடம் பெற வேண்டும். Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 44

தொடர் – 44 ஹைக்கூவில் பாஷோவின் ஆளுமை பாஷோ.. ஹைக்கூவின் பிதாமகர்.. ஜப்பானியக் கவிஞர் கி.பி.1644_ ல் பிறந்து 1694  ல் மறைந்த ஒரு மாபெரும் ஹைக்கூ ஆசான். பாஷோ என்பதற்கு ஜப்பான் மொழியில் வாழை மரம் என்று பொருள்..அவரும் வாழை மரத்தைப் போன்றே பலவித பயன்களை (விசயங்களை) ஹைக்கூ கவிஞர்களுக்கு வழங்கிவிட்டுச் சென்றிருக்கிறார்.. இன்றைய பல ஹைக்கூ கவிஞர்களுக்கு பாஷோ ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார் எனில் அது மிகையன்று.. Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 43

தொடர் – 43 ஹைக்கூ வகைமை ஹைக்கூவில் பல்வேறு வகையான புது முயற்சிகளை அவ்வப்போது செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் கவிஞர்கள். ஏற்கனவே ஹைக்கூ.. சென்ரியுவோடு ஹைபுன்.. லிமரைக்கூ..லிமர்புன் போன்றவைகளைப் பற்றி கண்டோம். இப்போது பழமொன்ரியு மற்றும் மோனைக்கூ பற்றிக் காண்போம். பழமொன்ரியு நம்முடைய தமிழ் பழமொழிகளோடு இணைத்து இணக்கமாகவோ அல்லது முரணாகவோ நகைச்சுவை.. கிண்டல்.. கேலி கலந்து படைக்கப் படுவதை பழமொன்ரியு என்கிறோம். பழமொன்ரியு அவ்வளவாக பிரபலமாக வில்லையெனினும் Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 42

தொடர் – 42 ரென்கா எனப்படும் அந்தாதி ஹைக்கூ கவிதை முறை. ஹைக்கூ எழுத்தாளனையும்..வாசகனையும் இணைக்கும் ஓர் அற்புதக் கவிதை வடிவம்..எழுத்தாளன் எழுதிய கோணத்தையும்..பொருளையும் தான் வாசகனும் அறிந்து உணர வேண்டுமென்பதில்லை..வாசகனுக்கு ஹைக்கூ பலவித உணர்வலைகளை உண்டு பண்ணி நகரும் ஆற்றல் கொண்டது. ஹைக்கூ தோன்றிய ஜப்பான் நாட்டில் ஹைக்கூ இயற்கை சார்ந்தும்..ஜென் சார்ந்தும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது..ஆனால் பலவித பருவ மாற்றங்களை கொண்டு விளங்கும் இந்தியா போன்ற பெரிய நாட்டில் Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 41

தொடர்  – 41 உலக அரங்கில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியச் சொல் ஹைக்கூ.. அனைத்துக் கவிஞர்களையும் ஈர்க்கும் ஒரு வடிவமாகவும்..அனைவரும் எழுதத் துடிக்கும் ஒரு வடிவமாகவும் ஹைக்கூ விளங்குகிறது. எந்தக் கவிதை வடிவமும் பெறாத..ஓர் உயரிய இடத்தை ஹைக்கூ மட்டும் எப்படி பெற்றது..?! எளிய வடிவம் ஒரு காரணம்..கவிஞனோடு வாசகனையும் பங்கெடுத்துக் கொள்ள வைக்கும் யுக்தி.. ஒரு கருத்தைச் சொல்ல வந்து ஈற்றடியில் எதிர்பாரா ஒரு புதிய திருப்பத்தை Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 40

தொடர் – 40 லிமர்புன் ஹைக்கூ கவிதை வகைமைகளில் அடுத்தபடியாக நாம் காணவிருப்பது லிமர்புன். இது சற்றேறக்குறைய ஹைபுன் போலவே தான். முன்னதாக ஒரு உரைநடையோ அல்லது கவிதையோ பதிவிட்டு இறுதியில் அந்த உரைநடைக்கு பொருந்தி வருமாறு..ஹைக்கூவிற்கு பதிலாக லிமரைக்கூவை பதிவிட்டால் அதற்கு லிமர்புன் என்று பெயர். லிமரைக்கூப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். முதலடி மற்றும் ஈற்றடி இறுதியில் சந்தமோ, இயைபுத் தொடை அமைத்து ஹைக்கூ படைக்கும் போது, Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 39

தொடர் – 39 ஹைபுன் ஹைக்கூ கவிதை வடிவில் ஜப்பானிய கவிவடிவமான ..ஹைக்கூ மற்றும் சென்ரியு மிக முக்கியமானவை. இந்த வகை கவிதைகளை மேற்கத்திய கவிஞர்களும், தமிழ் கவிஞர்களும் பல்வேறு கவிதை வடிவங்களுடன் இணைத்து புதுவகையான கவி வடிவையும் உருவாக்கி வெற்றி கண்டிருக்கிறார்கள். அவ்வாறு ஆங்கில லிமரிக் வடிவ குறுங்கவிதையுடன் இணைந்து உருவானது லிமரைக்கூ என முன்னரே கண்டோம். அது போல… ஹைபுன், லிமர்புன், லிமர் சென்ரியு, ஹைகா சீர்கூ, Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 38

தொடர் –38 ஹைக்கூ வாசிக்கும் முறை கவிதை என்பது இலக்கியத்தின் உயரிய வடிவம்..நமது தமிழ் இலக்கிய மரபில் வெண்பா, விருத்தம், கலிப்பா, கும்மி என பல வகைகள் உண்டு. அவை எதுகை, மோனை, சந்த நயங்களுடன் வாசிக்கவும் அழகாக அமையும். ஏனெனில் அவை ஒரு கட்டுக்குள் தாள லயத்தோடு எழுதப்படுபவை. ஜப்பானிய ஹைக்கூவும் மரபுசார் கவிதையே. ஆனாலும் இங்கு ஜப்பானிய மரபுகள் பலவற்றை நாம் உதறித் தள்ளிவிட்டு ஒருசில முக்கிய Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 37

தொடர் – 37 லிமரைக்கூ.. ஜப்பானிய கவிதை வடிவமான ஹைக்கூ 5 – 7 – 5 என்ற அசையின் படி எழுதப்படுவது.. ஆங்கில கவிஞர்களால் எழுதப்படும் லிமரிக் எனும் குறும்பா 5 அடிகளில் எழுதப்படும் ஒரு கவிதை வடிவம். இவ்விரண்டையும் இணைத்து ஏன் ஒரு கவிதை வடிவம் கொடுக்க கூடாது என விரும்பிய ஆங்கிலேய கவிஞர் டெட் பாக்கர் (Ted Pauker) முதன் முதலில் இந்த லிமரைக்கூ எனும் கலப்பின Read more