வேரில் பழுத்த பலா!!!

வேர்தனிலே பழுத்திடுமா வேகமாகச் சுவைதருமா? பார்மீதில் தந்திடுமே பலாச்சுளையும் பக்குவத்தால் கார்கால கன்னிபோல  கனத்திருந்தால் பழமாகி சீர்போன்றே அழகான சிலையாகி நின்றிடுமே!!! மலர்களெல்லாம் மலர்ந்திடுமே மணந்தருமே நாள்தோறும். பலநாளின் பலந்தரவே பசுமையாக மலர்ந்திடுமே. அலர்ந்திடுமே அந்திவேளை அழகான அல்லிமலர் உலர்ந்தமனம் உவகைகொள்ளும் உள்ளமெங்கும் இன்பவெள்ளம். மணக்கின்ற மலர்களுக்கும் மறுவாழ்வு தந்திடுவோம் வனப்புடனே காத்திடுவோம் வரம்வேண்டி நின்றிடுவோம் கனப்போழுதும் மறவாது களிப்புடனே போற்றிடுவோம். மனம்முழுதும் ரசித்திடுவோம்  மலரட்டும் மொட்டுகளும். மண்ணுலகில் பிறக்கின்ற Read more

ஒரு பரபரப்பு செய்தி…

செய்திக்காகப் பரபரப்பு அடைந்த காலம் சென்றுவிட்டது. செய்தியால் பரபரப்பு அடைகிற காலம் வந்துவிட்டது. ஒரு தகவல் புதுமையானதாகவும், தேவையானதாகவும், இருக்கும் போதுதான் அது மக்களிடையே விழிப்புனார்வு கொடுப்பதாக மாறுகிறது. மக்களை மாற்றுகிறது. ஒரு செய்தி தரும் தாக்கத்தை பொருத்து ஏராளமானவர்கள் அஜாக்கிரதை நிலையில் இருநது  தங்களைப் ஜாக்கிரதை நிலைக்குப் பழக்கப்படுத்தி கொள்கிறார்கள். செய்தி பொது அறிவுக்கார்கள். காரணம் செய்தி தரும் தாக்கம் அப்படி. மேல் படிப்பைத் தொடர முடியாதவர்கள் அதிகம் Read more

முருகவேள் புகழ்மாலை

திருச்செந்தூர்  கந்தர் கலி வெண்பா சண்முக கவசம் பகை கடிதல் குமாரஸ்தவம் வேல் வகுப்பு இவைகள் உள்ளடக்கிய சிறுதொகுப்பு நூல் தங்களின் கருத்துகளை அவசியம் கீழே பதியவும்.

மொழி பெயர்க்கப்படாத மௌனம்

வாசிப்பு என்பது ஓர் இனிய நுகர்வு படைப்பாளிக்கும் படிப்பாளிக்கும் இடையே பரிமாறப்படும் இன்சுவை விருந்து. படைப்பாளி ஒரு சொற் கூட விட்டுவிடலாகாது இப்படி நுகரப்படுவதே இருவர்க்குமான பேரின்ப நிகழ்வு. ஒரு நூலைப் புரட்டும் கையால் அப்படி அடிமுதல் நுனிவரை சுவைக்க கிடைப்பது அரிதே. அங்கொன்றும் இங்கொன்றுமாக தெறிக்கும் மின்னல்கள் மகிழ்ச்சியை வழங்குவதும் தேடித்தேடி அவற்றைக்காண்பதும் ஒரு சுவை. தோழியர் ரிம்ஸா டீன் எழுதிய ‘‘மொழி பெயர்க்கப்படாத மெளனம்’’ அவ்வகையான இனிய Read more

வேப்பமரத்து விருந்தாளிகள்

வீடுகட்டும் வேலை நடந்துக் கொண்டி ருந்தது. சுற்றிலும் கல்லும், மண்ணுமாய் குவிக்கப்பட்டிருந்தது. வேலையாட்கள் பரப் பரப்பாக வேலையில் ஈடு பட்டிருந்தார்கள். இங்கப் பாருப்பா! இந்த செங்கல் எல்லாம் மேல போகணும். ஒரு நாலுபேர் பின்பக்கம் பூச்சு வேலையை முடிங்க! நாளை காலையில முன்பக்க வேலைக்கு சாரம் கட்ட ஆட்கள் வந்திடுவாங்கன்னு அந்த வீட்டைக் கட்டும் பொறுப்பை ஏற்றுள்ள பொறியாளர் எல்லோரையும் வேலை வாங்கிக் கொண்டிருந்தார். வேலை செய்யும் ஆட்கள் முன்னும் Read more

ஹைக்கூவின் பண்புகள்

ஹைக்கூ கவிதைகளைக் குறித்த இக்கருத்துக்கள் ஹைக்கூ கவிதையை புரிந்துகொள்ள பெரிதும் உதவும் மூன்றடிகளால் பாடுவது. ஹைக்கூ கற்பனையை ஏற்காது. ஹைக்கூ உவமை, உருவகங்களைப் பயன்படுத்தாது ஹைக்கூ உணர்ச்சியை வெளிப்படையாய்க் கூறாது ஹைக்கூ தன்மைப் பாங்கினைத் தவிர்க்கும் ஹைக்கூ கவிதைக்குள்ளே ஒரு சொல் மட்டும் குறியீடாய்ப் பயின்று வருதல் இல்லை. ஹைக்கூ இருண்மையை மேற்கொள்ளாது. ஹைக்கூவில் நுண்பொருண்மை இல்லை. கவிஞன் தன் கருத்தை ஏற்றிச் சொல்லாமை. பிரச்சாரமின்மை. எளிமையாகக் கூறுவது. சொல்லுவதைக் Read more

பெண்ணான வெள்ளிப்பூ

சீற்றமிகு கண்ணகியும் பொறுமையாய் இருந்தவளே தூற்றுகின்ற செய்கைகண்டு துர்க்கையாய் மாறினாளே.. ஆற்றல் மிகு மொழி கூட்டி போற்றும் வழி மலர்ந்தாளே மாற்றம் ஒன்று வேண்டுமென மதுரைக்குள் நுழைந்தாளே.. காத்திருந்த கணவனையே காவெடுத்த மன்னனுக்கு பூத்திருந்த காற்சிலம்பால் ஆத்திரத்தைத் தந்தாளே மன்னவனே யானாலும் தன்கடமை பிழையாக தன்னுயிரைத் தந்தானே இதுவன்றோ தமிழென்று இயம்பிடவே வந்த வெள்ளி மானுடத்தின் அகராதியை மக்களுக்குத் தந்திடவே வேர்கொண்ட விடியலாகி விவரப் பொழுதாகி ஊர்அணைய உறுதிதனை உளமாறச் Read more

கஜா புயல் கோரத்தாண்டவம் — ஆழ்மனத்தின் மொழி !!

புயலாலே உருக்குலைந்து புலரவில்லை எம்வாழ்வு . மயங்கியுமே வீழ்ந்தோமே மறுவாழ்வும் இல்லையினி . பயம்கொண்ட நெஞ்சத்தைப் பாதுகாப்போர் யாருண்டு  பயன்பட்ட நிலமெல்லாம் பாழ்பட்ட சோகமிங்கே !! ஆசையாக வளர்த்தோமே அழகழகாய்த் தென்னையினைப் பாசமாக வைத்திட்டப் பனைமரங்கள் காணலையே ! காசைநம்பி வாழ்வெல்லாம் கஜாவினால் போனதைய்யா ! தேசுடைய மாமரமும் தெருவினிலே கிடக்குதைய்யா !! உயிருள்ள மரமெல்லாம் உணர்வற்று சாய்ந்ததுவே ! உயிரற்ற மின்கம்பம் உறவற்று வீழ்ந்ததுவே ! பயிரெல்லாம் அழுகிப்போய் Read more