புதுக் கவிதை

யே ராசா ராசா…

இசைப்பாடல்

யே ராசா ராசா
என் நெஞ்சுக்குள்ளே
வந்து நீயும்
என்னை யென்ன
யென்ன செய்யப் போகிறாய்?

தினம் லேசா லேசா வந்து
என்னைத் தொட்டு
எங்கே நீயும் போகிறாய்?

 » Read more about: யே ராசா ராசா…  »

புதுக் கவிதை

சாதிக்கு சிதை மூட்டிய செங்கமலம்!

வேப்பமர தண் நிழலில்
உதிர்ந்த மலர் வெளிர் கம்பளம் விரிக்க
வான் சொரியும் பன்னீர் துளியால்
தேன் சுரந்து வண்டுகள் கிறங்க

மார் முலைக்குள் முகம் புதைத்த
மதலையின் மணி பால் பற்கள்
தூர் பதிந்த வெண் முத்தாய்
வேர் பிடித்து உயிர் துளிர்க்கும்

ஏர் உழவன் சால் இறைக்க
விழித்த பயிர் நீர் குடிக்க
போர்களத்துச் சிப்பாய் போல்
மார்விறைத்து தோள் உயர்த்தும்

அங்கே…….

 » Read more about: சாதிக்கு சிதை மூட்டிய செங்கமலம்!  »

புதுக் கவிதை

பீனிக்ஸ் கட்டிய கூடு

krish-houseவீடு கட்டும் எண்ணம் எப்படி வந்தது எனக்கு?
ஆயிரம் ரூபாய் சம்பளத்தில்[1988] அல்லாடும் நிலையிலும்
தனிக் குடும்பம் கண்ட தவிப்பாலா?
வாடகை வீடுகளில் வதைப்பட்ட வரலாறாலா?

 » Read more about: பீனிக்ஸ் கட்டிய கூடு  »

புதுக் கவிதை

அகழ்வாராய்ச்சி!

வாழ்க்கைச் சக்கரம் பலகாதம் சுழன்று
காதோரம் நரைத்தட்டி காய்ப்புகளேறி வடுவாய்…
உள்ளிருந்து உறுத்தும் புண்களை ஆற்றிட
நெஞ்சகக்கூட்டின் புதையுண்ட இளமை சுவடுகளை
நினைவேடுகளாய் புரட்டி அகழ்வாராய்ந்தான்
ஓரமாய் நனைந்துக் கிடந்தன இதய அஞ்சல்கள்….

 » Read more about: அகழ்வாராய்ச்சி!  »

புதுக் கவிதை

எதிர்பதம் சொல்பவன்

கோட்டுப்பூ
கோர்த்தெடுத்து
கூந்தலில் சூடிவிட்டு
மணம் மாறும் முன்
மனம் மாறிப்போனாய்
தொலை தேசம் வாழ்வை
தொலைத்த தேசமானது
பிரிவு கொடுத்துப்போனவன்
பிரிவின் வலியை
கூட்டிப்போக மறந்தாய்
சண்டிகை இரவுக்கு நம்
அட்சயத்தின் தீராக்கூடலின்
வெளிச்சத்தை உணவளிப்போம் வா!

 » Read more about: எதிர்பதம் சொல்பவன்  »

புதுக் கவிதை

வாழ்வியம்

பெருங்கடலைத் தாண்டி
வந்துவிட்டோம்,

தேடிவந்த எதுவுமே
இங்கில்லை…

தொலைத்தவை
தொலைந்துவிட்டன…

இனி புதியதோர் தேடலில்
தொலையலாம், வா!

கடக்க எத்தனையோ
கடல்கள் காத்திருக்கின்றன…

 » Read more about: வாழ்வியம்  »

புதுக் கவிதை

ஒன்றையேனும் நிகழ்த்திவிடு

சிலிர்த்துக் கொண்டே இருக்க
உன் புன்னகை தூரலை பொழிந்துவிடு

தவித்துக் கொண்டே இருக்க
தழுவிடும் கணங்கள் தந்துவிடு

ரசித்துக் கொண்டே இருக்க
காதல் ராகம் இசைத்துவிடு

கடந்து கொண்டே இருக்க
பயணத்தின் பாதையை
பகிர்ந்து விடு

மிளிர்ந்துகொண்டே இருக்க
உன் வண்ணம் என்னில் கலந்துவிடு

தொலைந்து கொண்டே இருக்க உன் சாயலை
என்னில் சேர்த்துவிடு

நெகிழ்ந்து கொண்டே இருக்க
நிழல் நொடிகளை என்னில் நிகழ்த்தி விடு

உயிர்த்துக் கொண்டே இருக்க
உயிரினில் மூச்சாய் கலந்துவிடு

இத்தனை கோரிக்கை உன்னிடம் வைத்தேன்

ஒன்றையேனும் நிகழ்த்திவிடு

Image may contain: cloud, sky, ocean, one or more people, outdoor, water and nature  » Read more about: ஒன்றையேனும் நிகழ்த்திவிடு  »

புதுக் கவிதை

என்னருகில் நீயிருந்தால்

அழகாகும் என் இதயம்
நீ அருகில் இருந்துவிட்டால்

உன்னோடு உரையாடும்
ஒளித் தருணம் நீண்டிடுமே

சட்டெனவே சரிந்துவிழும்
என் மனதோ உன்னிடத்தில்

சத்தமில்லா பொழுதுகளில்
கரைந்திடுவோம் காற்றினிலே

வாழ்தலையும் வீழ்த்தலையும்
வரைந்திடுவாய் தூரிகையாய்

நித்தமும் என் கனவுகளை
நீ நிறைப்பாய் வண்ணங்களால்

நிலம் வீழும் நிழலெனவே
இணைந்திடுவோம் ஓருயிராய்

 » Read more about: என்னருகில் நீயிருந்தால்  »

புதுக் கவிதை

பூசணிக்காய்

மென்று துப்பிய செரிக்காத
மீதங்களாய் குவிகிறது
ரத்தம் தோய்ந்த சதையால் ஆன
புதியதோர் எவெரெஸ்ட்டு மலை

பயிராய் வளரும் காலத்தை
காணாமலேயே விதைகளுக்கு
இவர்கள்தம் ரத்தமும் சதையும்
உரமாகி கொண்டிருக்கின்றது

குண்டு தகர்த்தி
தொலைந்த பரம்பரை வீடுகள்
புதியதோர் தலைமுறைக்கு
விசால மயான தேசமாகின்றது

காலமெனும் தொனியிலேறி
அலைகடல் தாண்டுகையில்
குடல்பசி தாங்காமல்
மீன் பசி தீர்க்கின்றனர்

நம்மை போன்ற தோற்றத்தில்
விடுமுறை பீச்சோரமாய் ஒதுங்கும்
இவர்களின் மீதங்கள் கேட்பாரின்றி
கண்டு ம(றை)றக்கப்படுகின்றன

பழம் பணக்காரர்கள் காய்நகர்த்தி
அகந்தைமிகு அரசியல்வாதியை
ஆட்டிவைக்க ஏகபோகமாக
செழிக்கிறது ஆயுத உற்பத்தி

இந்த பூசணிக்காயை மறைக்க
ஒரு பானையில் அரிசி
வெந்துகொண்டிருக்கிறது
வாழ்க மனிதம்!

 » Read more about: பூசணிக்காய்  »

புதுக் கவிதை

அகதி

தாய்நாடு எங்களை முடமாக்கி
எதோ ஒரு இறுதிக்கட்டத்தை
நோக்கி எங்களைத் தள்ளிக்
கொண்டே வருகின்றது …

பூமி எங்களை நசுக்குகிறது
சிறு விதையாயினும்
நாங்கள் அதில் புதைக்கப்பட்டு
உயிர்ப்பிக்கப்படலாம் …

 » Read more about: அகதி  »