வாக்காளர்கள்
ஐந்தாண்டுகளுக்கு முன் அளித்த
அதே வாக்குறுதிகள்
மறுபடியும் ஊர்வலமாய்…
மறதியின் பிடியில்
வாக்காளர்கள்.
ஐந்தாண்டுகளுக்கு முன் அளித்த
அதே வாக்குறுதிகள்
மறுபடியும் ஊர்வலமாய்…
மறதியின் பிடியில்
வாக்காளர்கள்.
உன்னோடு கொஞ்சி
துள்ளி விளையாடவே
விண்மீன்கள் ரெண்டும்
ஓடி வந்து உந்தன்
விழிகளுக்குள் ஒளிந்ததோ !
வெள்ளி நிலவே
உன்ன தாலாட்டவே
வானவில் அந்தரத்தில்
ஊஞ்சல் கட்டி தொங்குதோ !
வாடுது வாடுது எம்மனசு இங்கே உன்னை நினைத்து வாடுது … தேடுது தேடுது எந்தன் விழிகள் கனவில் உன்ன தேடுது … ஆடுது ஆடுது காதலை சொல்லி மனசு கூத்தாடுது … கூடுது கூடுது வான் மேகங்கள் பூ மழை தூவ கூடுது … நாடுது நாடுது மழைத் துளியில் சேர்ந்து நனைந்திட … உந்தன் வரவை என்னுள்ளம் நாடுது … பாடுது பாடுது என்னை தேடி நீ வந்ததுமே Read more
கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனிய என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்.
தேனாய் சுவையாய் திகட்டாத — கனியாய் கண்ணாய் கனியமுதாய் மானாய் மயிலாய் மரகதமாய் — மலராய் மணியாய் மாம்பூவாய். வானாய் வளியாய் வயல்வெளியாய். — வழியாய் ஒளியாய் ஒலியினிலே. எங்கும் என்றும் எத்திக்கும் — எல்லாம் தமிழின் உயர்வாகும். ஓங்கும் தாங்கும் மனதினிலே — உருவாய் கருவாய் கவியினிலே. பொங்கும் பொழியும் புவிதனிலே — சங்கே முழங்கு சபைதனிலே. சொல்லும் சுவையும் இனித்திடவே — சுடராய் இருளை நீக்கிடவே கல்லும் மண்ணும் Read more
நற்றமிழே என் உயிர் என்பார்
நாவில் தமிழ் உயிர் ஊசலாட…
பெற்ற சுதந்திரம் பேண் என்பார்
மற்றவர் உரிமையை களவாடி…
பெண்கள் மயங்கும் பேரழகா !
கண்கள் விரும்பும் கட்டழகா !
மலையென தோள்கள் பெற்றவனே !
மாலையிட சீக்கிரம் வந்துவிடு !