நட்பைத் தேடி

மூன்றெழுத்து சொர்க்கமிது, முக்கனிகளின் சுவைபோல. உதடுகளால் உரையாடாது. உள்ளத்தால் ஒன்றி நிற்கும். துன்பத்தில் துணையாய் நிற்கும். துயர்நீக்கும் கோலினைபோன்று. இனிக்கும் பொழுதுகள் தோறும் இதயத்தை இறுக்கி அணைக்கும். வலப்பக்கம் காயமென்றால்,- இடப் பக்கமும் சேர்ந்தழும் இரு கண்களாக, சரியான சொல்லுக்குக் காத்திருக்கும் செரிவானப் பதிப்பாக. எல்லோருக்கும் உண்டானதுதான் எல்லாவற்றிலும் பின் நிற்கின்றது. அறிவானத் தேடலில் கிடைபார்கள், அழகு முத்துக்களாய் நண்பர்கள். கை நீட்டும் கணநேரம், கரம் கோர்க்கும் நட்புகளால் வாழ்தல் Read more

பாவாணர் வழிச்செல் நண்பா!

பாவாணர் எழுத்தும் சொல்லும் …..பைந்தமிழை உணர்வாய்ப் போற்றும்! பாவாணர் உரைக்கும் பாட்டின் …..பண்ணிசைக்கப் பற்றும் நன்றாய்! பாவாணர் எழுச்சிக் காட்டும் …..பழம்பெருமைக் காக்க வேண்டும்! பாவாணர் வழிச்செல் நண்பா! …..பண்புடைனம் மொழியைக் கற்போம்!

கிடைத்த ஐம்பது உரூபா

நடைபயிற்சி மேற்கொள்ளும் காலை நேரம் —-நல்லிருட்டு விலகியொளி படரும் நேரம் விடைகொடுத்து சோம்பலுக்கு நடந்த போது —-விழிகள்தாம் கண்டதொரு பணத்தின் தாளை ! கடைக்கண்ணால் இருபுறமும் பார்த்த வாறு —-கால்விரலால் எடுத்ததனைக் காணும் போது கிடைத்தத்தாள் ஐம்பதென்று தெரிந்து கொண்டு —-கீழ்ச்சட்டைப் பைக்குள்ளே மறைத்து வைத்தேன் ! இயல்பாக நடப்பதற்குத் தொடங்கும் போதோ —-இருநண்பர் அருகினிலே வந்து சேர்ந்தார் கயல்முள்தான் பல்லிடுக்கில் சிக்கிக் கொண்டு —-கடுகடுப்பைத் தருவதைப்போல் நெஞ்சிற் குள்ளே Read more

அன்பினால் …

அன்பு நுரைத்தெழுகையில், ஆணவம் அழிந்து இன்பம் பிறக்கிறது! அன்பை உணர்கையில், உலகமே சிறுத்து உள்ளங்கை பந்தாய்! அன்பை சுவாசிக்கையில், மண்ணை நேசித்து பெண்மையும் சிறக்குதே! அன்பு சுற்றிவளைக்கையில், ஆனந்த ஊற்றாய் இல்லம் திகழ்ந்திடுமே! இருள் ஒழிந்து, ஆகாயம் வெளுப்பதால் – வாழ்க்கை அன்பினால்….!

கடைசி நிமிடம்!

என் வாழ்வில் நடந்ததை நினைக்கையில் – என் மெய் பொய்யாவென கிள்ளிப் பார்க்க தோணுது! நடுநிசியில் மொனித்தது … புதுவருட வாழ்த்துகளை, பரிமாறிய மகிழ்வில், உறங்கச் சென்ற வேளை! திடீரென ஒற்றை வலி இதயத்தை அண்மித்ததாய், வியர்க்காத வலி பயத்தால் வாய் மொனித்தது! நேரம் செல்லச் செல்ல, புழுவாய் துடித்தேன். பார்வையில் எதுவும் விழவே இல்லை! இருண்ட யுகத்துள் நுழைவது போல உணர்வு. நினனவு தப்பலை. எதுவும் செய்ய முடியலை! Read more

பெண்மையின் முகவரியாய்!

வறுமை வாட்டியதால், வெறுமையானதே இவள் வாழ்வு. இருந்தும், முயன்றவளாய், பொறுமையே இவளைப் பார்த்து பொறாமை கொண்டதே! தனிமை… துரத்தி துரத்தி, வேட்டையாட முயன்ற போதெல்லாம், புறமுதுகு காட்டாது துணிந்தே எதிர் கொண்டாள்! எத்தனை துன்ப துயரங்கள் இவளை பார்த்து எள்ளி நகைத்தன. அவை ஒவ்வொன்றையும், தன்னுள் உள்வாங்கினாள் அனுபவ பாடமாய்! அழுது புலம்பி காலத்தை விரயமாக்காது, நிகழ்கால நிஜத்திற்காய், மற்றவர்களிடம் யாசிக்காமல், நம்பிக்கையுடன் முயல்வதை காண்கையில், விதியே நொந்து போயிற்றே!

அவள் பாடுவாள்தானே.!

காறித்துப்புவதை கொத்தி விழுங்கும் கோழிபோல்தானே உன்னினம் பதினைந்து லெச்சம் என் பழைய காதலூத்தை கழுவி புதியதோர் இல்லறம் புக உனக்கப்பாலும் நான் யாராலாவது கற்பழிக்கப் பட்டிருந்தாலும் இன்னும் சில லெச்சம் என்னைப் பத்தினியாக்க நீ என்னை நேசித்ததாயெண்ணி உன் காதலூத்தைக்குள் நான் வீழ்ந்ததுண்மை நீயென்னை கைகழுவிப் போனதுண்மை முடிந்தால் வாழ்ந்து பாரென்று நீ சவாலிட்டதுண்மை என்றாலும் காறித்துப்பியதை கொத்தி விழுங்கும் கோழிதானே உன்னினம்

அவளென் பா

விருத்தப்பா தென்றலுமே தீண்டிடவே சிலிர்கும் பூக்கள் ….. சிங்காரங் குறையாது சுரக்கும் தேனை சென்றமர்ந்து வண்டுகளும் சுவைக்கு மன்றோ ….. சிறகுகளால் மகரந்த சேர்க்கை பூவில்! தன்காம்பில் காய்கனிகள் தோன்ற பூக்கும் ….. தன்னிழலில் பசியாற உதவும் பாரீர்! என்னற்ற மலர்களெல்லாம் வாசம் வீச ….. என்னிதயம் புன்னகைக்க பூக்கள் போதும்.! தொட்டுமலர் தொடுத்தாளே என்றன் மங்கை ….. தோடிராகம் மீட்டிடுதே என்றன் மையல் வட்டுநிலா முகத்தினவள் காதல் சொல்லி Read more

உலாவரும் நிலா

உலாவரும் நிலவொன்றை — உன்னதமாய்த் தாய்காட்டி நிலாச்சோறு ஊட்டுகின்ற — நிம்மதிதான் வேண்டுமென்று பலாசுவையாய் அமுதூட்டப் — பக்குவமாய் வாய்த்திறக்க நிலாமகளை நினைந்துகொண்டு — நீண்டுவிடும் என்கைகளே !! அன்னைதந்த சோற்றினையும் — அகமகிழ்ந்து உண்ணுகின்றேன் முன்பின்னே அறிந்ததில்லை — முகமலர்ந்து நிற்கின்றேன் அன்புடைய கைகளினால் — அமுதத்தைத் தந்துநின்றாள் என்னுடனே அவளிருந்து — எனக்களித்தாள் பாசத்தை . வண்ணமகள் அன்னையிங்கே — வாடிடலும் கூடாதென்றே திண்ணமுடன் நிலாச்சோறு — Read more

பாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்கு அஞ்சலி

கவியுலகின் நன்முத்து கண்மூடிக் கொண்டது , பொன்னுலகு தேடியே புறப்பட்டு விட்டது . திரையில் ஜொலித்த தீந்தமிழ் வைரம் , திசைமாறிப் போனதால் திக்கெட்டும் துயரம் . மரணம் இவரை மார்பில் சுமந்து திறமை முழுவதையும் தின்றுத் தீர்த்தது . காலன் இவரின் கணக்கை முடித்தான் , காலனின் கணக்கை யார்தான் முடிப்பது ? எரிகின்ற விளக்கு எப்படித்தான் அணைந்தது ? ஒளியினை இழந்து உயர்வானில் இணைந்ததே ! ஆனந்த Read more