கவியுலகின் நன்முத்து
கண்மூடிக் கொண்டது ,
பொன்னுலகு தேடியே
புறப்பட்டு விட்டது .

திரையில் ஜொலித்த
தீந்தமிழ் வைரம் ,
திசைமாறிப் போனதால்
திக்கெட்டும் துயரம் .

மரணம் இவரை
மார்பில் சுமந்து
திறமை முழுவதையும்
தின்றுத் தீர்த்தது .

காலன் இவரின்
கணக்கை முடித்தான் ,
காலனின் கணக்கை
யார்தான் முடிப்பது ?

எரிகின்ற விளக்கு
எப்படித்தான் அணைந்தது ?
ஒளியினை இழந்து
உயர்வானில் இணைந்ததே !

ஆனந்த யாழின்
அதிர்வுகள் நம்மைச்
சோகத்தில் ஆழ்த்தி
துடிக்கச் செய்தன .