வறுமை வாட்டியதால்,
வெறுமையானதே இவள் வாழ்வு.
இருந்தும், முயன்றவளாய்,
பொறுமையே இவளைப் பார்த்து
பொறாமை கொண்டதே!
தனிமை…
துரத்தி துரத்தி,
வேட்டையாட முயன்ற போதெல்லாம்,
புறமுதுகு காட்டாது
துணிந்தே எதிர் கொண்டாள்!
எத்தனை துன்ப துயரங்கள்
இவளை பார்த்து எள்ளி நகைத்தன.
அவை ஒவ்வொன்றையும்,
தன்னுள் உள்வாங்கினாள்
அனுபவ பாடமாய்!
அழுது புலம்பி காலத்தை விரயமாக்காது,
நிகழ்கால நிஜத்திற்காய்,
மற்றவர்களிடம் யாசிக்காமல்,
நம்பிக்கையுடன் முயல்வதை காண்கையில்,
விதியே நொந்து போயிற்றே!