காறித்துப்புவதை
கொத்தி விழுங்கும்
கோழிபோல்தானே
உன்னினம்
பதினைந்து லெச்சம்
என்
பழைய
காதலூத்தை கழுவி
புதியதோர்
இல்லறம் புக
உனக்கப்பாலும்
நான் யாராலாவது
கற்பழிக்கப் பட்டிருந்தாலும்
இன்னும்
சில லெச்சம்
என்னைப் பத்தினியாக்க
நீ
என்னை நேசித்ததாயெண்ணி
உன் காதலூத்தைக்குள்
நான்
வீழ்ந்ததுண்மை
நீயென்னை
கைகழுவிப் போனதுண்மை
முடிந்தால்
வாழ்ந்து பாரென்று
நீ சவாலிட்டதுண்மை
என்றாலும்
காறித்துப்பியதை
கொத்தி விழுங்கும்
கோழிதானே உன்னினம்